எரிவாயு விலை திருத்தம்

12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை நாளை(04) நள்ளிரவு முதல் சுமார் 1,000 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். வரலாற்றில் லிட்ரோ எரிவாயுவின் அதிகூடிய விலைத் திருத்தம் இதுவென முதித பீரிஸ் குறிப்பிட்டார். உலக சந்தையில் எரிவாயு விலை வீழ்ச்சி மற்றும் ரூபாயின் மதிப்பு வலுவடைந்தது உள்ளிட்ட பல்வேறு காரணிகள் விலை குறைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

புத்தாண்டு சுபநேரப் பத்திரம் ஜனாதிபதியிடம்…

தமிழ், சிங்கள புத்தாண்டு சுபநேரப் பத்திரம் பாரம்பரிய மற்றும் சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி மேளதாளத்துடன் கொண்டுவரப்பட்ட சுபநேரப் பத்திரத்தை, புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார். வளர்பிறை தரிசனம், பழைய ஆண்டிற்கான நீராடல், புத்தாண்டுப் பிறப்பு, புண்ணியகாலம், உணவு சமைத்தல், சுப காரியங்களை ஆரம்பித்தல் கைவிசேடம் பெறுதல், உணவு உண்ணுதல், தலைக்கு மருத்துநீர் வைத்தல், […]

நண்பர்கள் ஒன்றாக கடைசி பயணம்

பதுளையில் வருடாந்த பாடசாலை கிரிக்கெட் போட்டியின் போது கெப் வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த இரு மாணவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று (03) பிற்பகல் இடம்பெறவுள்ளன. விபத்தில் உயிரிழந்த இரு மாணவர்களின் சடலங்கள் பதுளை மற்றும் ஹாலி – எலவிலுள்ள அவர்களது வீடுகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. வாகன பேரணியின் போது இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்தனர்.  

பதுளை விபத்து: விசாரணைகளுக்காக மூவரடங்கிய குழு

பதுளையில் இடம்பெற்ற விபத்து தொடர்பான விசாரணைகளுக்காக வலயக்கல்வி செயலாளரின் ஆலோசனைக்கமைவாக மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மாகாண கல்வி அலுவலக அதிகாரியொருவர், மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தின் இரு அதிகாரிகள் ஆகியோர் குறித்த குழுவில் உள்ளடங்குகின்றனர். கள விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விபத்து இடம்பெற்ற பதுளை விளையாட்டு மைதானத்திற்கு பதுளை நீதவான் நொஜின் டி சில்வா சென்றிருந்ததாக ஊவா மாகாண கல்விச் செயலாளர் நந்தசேன ஹேரத் தெரிவித்துள்ளார். இதனிடையே, மாகாணத்தின் ஏனைய பாடசாலைகளில் வருடாந்த கிரிக்கெட் போட்டிகளின் போது இத்தகைய […]

ஏற்படவுள்ள அரசியல் மாற்றம் – அனுர

ஜனாதிபதிக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குழுவொன்று அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் பணத்துக்காக ஆசனங்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

56 ஆவது தேசிய புத்தரிசி விழா

தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இன்று (02) அநுராதபுரத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ மஹாபோதிக்கு அருகில் இடம்பெற்றது. அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை ஜய ஸ்ரீ மஹாபோதிக்கு காணிக்கையாக செலுத்தும் வருடாந்த புத்தரிசி விழா, அடமஸ்தானாதிபதி வண. பல்லேகேம ஹேமரதன நாயக்க தேரரின் ஆலோசனைக்கு அமைவாக விவசாய அமைச்சு மற்றும் கமநல சேவைகள் திணைக்களத்தினால் 56 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மன்னர் காலத்தில் இருந்து நடைபெற்று வரும் இந்த […]

வசந்த காலம்…

நுவரெலியா மாநகரசபை கலைக்கப்பட்ட போலும் விசேட ஆணையாளரின் தலைமையில் ஏப்ரல் வசந்த கால களியாட்ட நிகழ்வுகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நுவரெலியாவில் வருடம் தோறும் நடைபெறும் ஏப்ரல் வசந்தக்கால களியாட்ட நிகழ்வுகள் நேற்று முதலாம் திகதி சனிக்கிழமை காலை கிறகறி வாவி கரையில் பாடசாலை மற்றும் முப்படையணியினரின் பேண்ட் வாத்திய அணிவகுப்பு மறியாதையுடன் கோலாகலமாக ஆரம்பமாகியது. நுவரெலியா மாநகரசபை விசேட ஆணையாளர் சுஜீவ போதிமான தலைமையில் ஆரம்மாகிய ஏப்ரல் வசந்தகால களியாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய […]

போதைப் பொருள் பாவனையைத் தடுக்க கடுமையான சட்டங்கள்

தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் தான் ஒருபோதும் பிரச்சித்தமான தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதில்லை எனவும், மாறாக சரியான தீர்மானங்களையே எடுப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, பிரசித்தமான தீர்மானங்களினால் நாட்டிற்கு சீரழிவு மட்டுமே ஏற்பட்டதாகவும் தெரிவித்தார. முப்படைகளினதும் தலைவரான ஜனாதிபதி, அநுராதபுரத்திலுள்ள விமானப்படை முகாமில் இன்று (01) முப்படையினருக்கான சிறப்புரை ஆற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். கருத்துச் சுதந்திரத்திற்கமைய தன்னை விமர்சிக்க அனைவருக்கும் சுதந்திரம் […]

இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதியை சந்தித்தார்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் லால், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஆகியோர், நேற்று (01) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை சந்தித்தனர். இலங்கையில் அரச சேவையில் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்த உதவுவது மற்றும் பயனுள்ள கண்காணிப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரச நிறுவனங்களின் செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைக் கண்டறிவதே பாரத் லாலின் இலங்கை விஜயத்தின் நோக்கமாகும். மக்கள் சேவைகளை வழங்குவதற்காக தகவல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இந்தியா குறிப்பிடத்தக்க […]

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் அரங்கம் அமைக்க தமிழ் கட்சிகளுக்கு மனோ அழைப்பு

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் அரங்கம் ஒன்றை பாராளுமன்றத்தில் அமைத்திடும் யோசனையை முன்னிறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, தமிழீழ விடுதலை இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்பி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் த.சித்தார்த்தன் எம்பி, தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகம் சீ. வி. விக்கினேஸ்வரன் எம்பி ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர்கள் […]