சாய்ந்தமருது கடல் அரிப்புக்கு உடனடி தீர்வு! அமைச்சர் பிரசன்ன அதிரடி உத்தரவு!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது கடல் அரிப்பு தொடர்பாக நகர திட்டமிடல் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் கொழும்பில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்கள மாகாண பொறியியலாளர் ஆகியோர் சாய்ந்தமருதின் தற்போதைய கடலரிப்பு நிலைகளையும், எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய விடயங்களையும் அமைச்சர் மற்றும் கூடியிருந்த சபைக்கு விளக்கினர். கடலரிப்பின் அகோரம் காரணமாக மீனவர் வாடிகள், பள்ளிவாசல், அரச கட்டிடங்கள், சிறுவர் பூங்காக்கள் பாதிக்கப்பட்ட விடயம் தொடர்பில் விளக்கி மீனவர்களின் […]

மன்னாரில் 13 வாட்டர் ஜெல் குச்சிகளுடன் 05 சந்தேக நபர்கள; படகுடன் கைது

(வாஸ் கூஞ்ஞ) மன்னார் கடற்தொழில் உதவிபணிப்பாளர் அறிவுறுத்தலுக்கு அமைய கடற்படை புலனாய்வு உத்தியோகத்தர்கள் மன்னார் கடற்தொழில் உத்தியோகத்தர்களினால் மேற் கொள்ளப்பட்ட கள ஆய்வில் மன்னாரில் 13 வாட்டர் ஜெல் குச்சிகளுடன் 05 சந்தேக நபர்களை படகுடன் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் மன்னார் சவுத்பார் கடற்கரைப் பகுதியில் செவ்வாய்க் கிழமை (19) இடம்பெற்றது. இது தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது மன்னார் கடற்தொழில் உதவிப; பணிப்பாளர் அறிவுறுத்தலுக்கு அமைய கடற்படை புலனாய்வு உத்தியோகத்தர்கள் மன்னார் கடற்தொழில் உத்தியோகத்தர்களினால் மேற் கொள்ளப்பட்ட […]

ஸ்பிரிங்வெளி மேமலை தமிழ் வித்தியாலய மாணவர்களோடு கரம் கோர்த்த “இணைந்த கரங்கள்”

நூருல் ஹுதா உமர் “ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்” என்ற மகுட வாசகத்தின் கீழ் இணைந்த கரங்கள் அமைப்பானது தனது கால் தடத்தைப் பதித்து, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவச் செல்வங்களது கல்விச்செயற்பாடுகள், இடைநடுவே கைவிடப்படும் அவல நிலையை ஒழிக்குமுகமாக, நாடு முழுவதும் பரந்துபட்டளவில் செயற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இணைந்த கரங்கள் அமைப்பினால் இம்முறை, பதுளை மாவட்டம் ஸ்பிரிங்வெளியில் அமைந்துள்ள ஊவா/ பது/மேமலை தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு தனது கல்வி உதவிக் கரங்களை நீட்டியுள்ளது. […]

அமரர் சந்திரசேகரின் கனவும் தலைவர் இராதாவின் இலக்கும நிறைவேறும் காலம் தொலைவில் இல்லை! இராஜாராம்

(  நூரளை பி. எஸ். மணியம்) மலையகத்தில் சந்திரசேகரின் கனவும் இராதாகிருஷ்ணின் இலக்கும் நிறைவேறும் காலம் மிக தொலைவில் இல்லை. இராஜாராம் கூறுகிறார். முன்னாள் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் இலட்சிய கனவும் தற்போதய தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணின் இலட்சியமும் நிறைவேறும் காலம் வெகு தூரம் இல்லை. என மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும் முன்னாள்  மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஆர் இராஜாராம் […]

இலங்கை தமிழர்கள் தொப்புள் கொடி உறவுகள் என்றால் மன்னார் மீனவர்களை அழிப்பது ஏன்?

( வாஸ் கூஞ்ஞ) இந்திய தமிழ் நாட்டு மக்கள் எங்களை தொப்புள் கொடி உறவுகள் என தெரிவித்துக் கொண்டு எங்கள் வாழ்வாதாரத்தை நசுக்குகின்றார்கள் என்றால் இதன் அருத்தம் என்ன? என மன்னார் மாவட்ட கடற்தொழில் பேரவைத் தலைவரும் , பள்ளிமுனை மீனவ சங்கத் தலைவரும் , மன்னார் தீவு பிரதேச சுங்கங்களின் சமாச பொருளாளருமான அந்தோனி எட்வேட் சில்வெஸ்ரர் றோச் இவ்வாறு தெரிவித்தார். புதன்கிழமை (20) மன்னார் ‘மெசிடோ’ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது மன்னார் […]

மட்டக்களப்பு கெம்பஸ்” ஹிஸ்புல்லாஹ் விடம் கையளிப்பு…

  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வின் உத்தரவின் பேரில் இன்று (20) காலை “மட்டக்களப்பு கெம்பஸ்” இல் தங்கியிருந்த இராணுவம் முன்னாள் ஆளுநர் ,மட்டக்களப்பு கெம்பஸ் இன் ஸ்தாபகர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ்விடம் கையளித்துவிட்டு வெளியேறி உள்ளனர் கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து “மட்டக்களப்பு கெம்பஸ்” ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது அத்துடன் கடந்த காலத்தில் கொரொனா நோயாளிகள் தனிமைப்படுத்தல் நிலையமாகவும் இது செயற்பட்டது

சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்!

  நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில் தனக்கு உள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் பாராளுமன்ற உறுப்பினரால்,பொலிஸ் அனுமதி இன்றி, சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தை ஊடுருவி சென்றது. இது இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை இல்லாமல் ஆக்குகிறது. தற்போது நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அதி கவனத்துடன் செயற்பட கூடிய […]

சர்வதேச கவிதை போட்டியில் முதலிடத்தை வென்ற கவிஞர் பசுவூர் கோபிக்கு விருது !

கடந்த ஞாயிறன்று (17) கொழும்பு-07 இல் அமைந்துள்ள புதிய நகரசபை மண்டபத்தில் பாடகர்களான கலைக்கமல்- பாசிலின் “தேனும் பாலும்” இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதிய அலை கலை வட்டம் நடத்திய எவோட்ஸ்-2022 சர்வதேச கவிதைப் போட்டியில் முதல் பரிசை பெற்றுக்கொண்ட டென்மார்க்கை சேர்ந்த கவிஞர் பசுவூர்கோபிக்கு விருதும் சான்றிதலும் வழங்கப்பட்டது. நிகழ்வுக்கு முன்னிலை வகித்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர் விருதினை வழங்கி வைப்பதையும் சிறப்பு அதிதி யான தினகரன் பத்திரிகையின் […]

கொட்டகலை புதியநகர் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தின் விநாயகர் சதுர்த்தி தேர் திருவிழா!

மலைவாஞ்ஞன் விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு மலையக ஆலங்களில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிலையில் கொட்டகலை புதிய நகர் நேத்ரா ப்ளேஸ் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்தின் தேர் பவனி நேற்று (18) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இத்தேர் பவனி ஆலயத்தில் புறப்பட்டு விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து மேளதாள வாத்தியங்கள் இசை முழங்க தேர் பவனி நேற்று மாலை ஆரம்பமானது. இந்த தேர் பவனி ஹட்டன் நுவரலியா பிரதான வீதியூடாக குடாகம வரை சென்று மீண்டும் […]

விறகு தேடி சென்றவரை கரடி தாக்கிய சோகம்!கஞ்சிகுடிச்சாறு பகுதியில் சம்பவம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்ரப் அலீ திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு காட்டு பகுதியில் வைத்து விறகு எடுப்பதற்காக சென்ற ஆண் ஒருவரை கரடி தாக்கியுள்ளது… குறித்த நபர் திருக்கோவில் பொலிஸ்பிரிவுக்குட்பட்டதிருக்கோவில் 04 சின்ன தோட்டம் காயத்திரி கிராமத்தை சேர்ந்தவர் 41வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு கரடி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.. இவர் இன்று (18)காலை விறகு எடுப்பதற்காக குறித்த காட்டுப்பகுதிக்கு சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   இத் தாக்குதலுக்குள்ளாகிய நபர் பலத்த காயங்களுடன் திருக்கோவில் ஆதார மருத்துவமனையில் […]