33,000 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

ஏப்ரல் மாதம் முதல் 33,000 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கல்வியற் கல்லூரி ஆசிரியர்களின் பெறுபேறுகள் மார்ச் 30ஆம் திகதி வெளியிடப்பட உள்ளன. இதன்படி, மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை குறைப்பதற்காக இந்த 7500 ஆசிரியர்களையும் பணியமர்த்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாடசாலையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நேரிடும்

இந்நாட்டு மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக் கைதிகளாக வைத்திருக்க இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். பாடசாலை துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல் மூலம் விரைவில் தீர்வு காண முடியும் என தாம் நம்புவதாகவும், இல்லையேல் பாடசாலைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு சங்கமித்தா மகளிர் கல்லூரியில் இன்று (23) முற்பகல் இடம்பெற்ற பிரிவெனா மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைத் […]

ராகுலுக்கு உடனடியாக பிணை?

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாஜக எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி தொடந்த வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இவ்வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பிறகு சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிட்டத்தக்கது. இதனிடையே தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு […]

அடுத்த தேர்தலுக்கு பிறகு உருவாகும் எந்தவொரு அரசிலும் நாம் பலமான பங்காளியாக இருப்போம்.. – தமுகூ தலைவர்

அடுத்த தேர்தலில் உண்மையான ஆட்சி மாற்றம் நடைபெறும். எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாம் இன்று ஐக்கிய மக்கள் கூட்டணியில் இருக்கிறோம். அவர் தலைமையில் புதிய ஆட்சி மலரும் என நாம் எதிர்பார்க்கிறோம். எது எப்படி இருந்தாலும், அடுத்த தேர்தலுக்கு பிறகு உருவாகும் எந்தவொரு அரசிலும் நாம் பலமான பங்காளியாக இருப்போம் என ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட செயற்குழு கூட்டம் கொழும்பு தெற்கு […]

வௌ்ளிக்கிழமை முதலாவது நோன்பு…

நாட்டின் எந்த பகுதியிலும் புனித ரமழான் மாத தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. அதன்படி, ஷஹ்பான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஏதிர்வரும் வௌ்ளிக்கிழமை முதலாவது நோன்பு ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

வலுவான சக்திவாய்ந்த இலங்கை…

மறைந்த பிரதமர் மகாமான்ய டி. எஸ்.சேனாநாயக்கவின் தொலைநோக்குப் பார்வையை நாம் ஒதுக்கினாலும் பிரதமர் லீ குவான் யூ அந்த தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி சிங்கப்பூரை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எமது நாட்டின் அரசியல்வாதிகள் இலங்கையை சிங்கப்பூராக மாற்ற வேண்டும் என்று கனவு கண்ட போதும் கடந்த 75 வருடங்களில் சில அரசியல் இயக்கங்களின் தீர்மானங்களினால் இலங்கைக்கு ஏற்பட்ட அழிவுகள் எண்ணில் அடங்காது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். சுதந்திரச் சதுக்கத்தில் நடைபெற்ற மறைந்த […]

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது கூட்டு பொறுப்பு

காலநிலை மாற்றம், மனித செயற்பாடுகள் உள்ளிட்ட காரணிகளால் நீர்வளத்துக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. எனவே, நீர்வளத்தை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். உலக நீர் தின விழா இன்று (22) இரத்மலானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் மற்றும் துப்புரவேற்பாட்டுக்கான சிறப்பு மையத்தில் இடம்பெற்றது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் ஏற்பாடு […]

இப்போது ஒரு புதிய பயணம்…

• கடந்த கால தவறுகள் மீண்டும் நிகழாத வகையில் சட்டதிட்டங்களையும் பின்னணியையும் ஏற்படுத்தி, நாடு கட்டியெழுப்பப்படும். • இலங்கை, பொருளாதார தொங்கு பாலத்தை கடக்க தான் செயல்பட்டதை இன்று சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. • தற்போதைய கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் பலன் மக்களுக்கு விரைவில் கிடைக்கும். • சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு நிதானமாகச் செயல்பட்ட மக்களுக்கு நன்றிகள் – பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி தெரிவிப்பு “நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளி […]

சம்பள நிர்ணய சபைக்கு CWC தலைவர்

சம்பள நிர்ணய சபைக்கு தொழிலாளர்களின் புதிய பிரதிநிதியாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். சம்பள நிர்ணய சபையின் 30 ஆவது ஒழுங்குமுறைக்கு அமையாக வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானியின் ஊடாக சபையின் ஆயுட்காலம் 31.12.2023 வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன் செந்தில் தொண்டமானும் புதிய பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் ஆயிரம் ரூபா சம்பளம் போதாதென இ.தொ.கா அரசாங்கத்திடம் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரம் வர்த்தமானி ஊடாக சம்பள நிர்ணய சபை புதிய உறுப்பினராக செந்தில் […]

வடக்கு ஆப்கானிஸ்தானில் 6.5 மக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் வட பிராந்தியத்தில் நேற்றிரவு(21) ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போது பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 6.5 மக்னிடியூட் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பாகிஸ்தானில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் டெல்லி, ஶ்ரீநகர் மற்றும்  காஷ்மீரில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக கூறப்படுகின்றது.