சிறார்களுக்கு உதவ ஜப்பான் அரசாங்கம் நன்கொடை

இலங்கையில் அபாய நிலையில் வாழும் சிறார்களுக்கு உதவுவதற்காக ஜப்பான் அரசாங்கம் 1.8 மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளது. UNICEF நிறுவனத்திடம் ஜப்பான் அரசாங்கம் இந்த நன்கொடையை வழங்கியுள்ளது. இதனூடாக 6 இலட்சத்திற்கும் அதிகமான சிறார்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர், சுகாதார மேம்பாட்டை வழங்கவும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையில், மனிதாபிமான நடவடிக்கைகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக UNICEF நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த வருடம் ஆரம்பமான பொருளாதார நெருக்கடியின் […]

11 இலட்சம் நலன்புரிக் கொடுப்பனவு விண்ணப்பங்கள் சரிபார்ப்பு

நலன்புரிக் கொடுப்பனவுகளுக்காக தற்போது நடைபெற்று வரும் தகுதியானவர்களை அடையாளங் காணும் நடவடிக்கையில் இதுவரை செயற்படுத்தப்பட்டுள்ள தகவல் கணக்கெடுப்பு மற்றும் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட 11 இலட்சம் விண்ணப்பங்களின் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் 334 பிரதேச செயலகங்களில் இருந்து பெறப்பட்ட 37 இலட்சம் விண்ணப்பங்களின் நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்கான தகுதி சரிபார்த்தல் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. பரிசீலிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களில் அதிகளவானவை […]

Accident

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில், கொக்கல பகுதியில் கார் ஒன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொக்கல விமானப்படை தளத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையின் ஊடாக கவனக்குறைவாக பயணிக்க முற்பட்ட கார் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் பின்னர் காருக்குள் 2 பேர் சிக்கிக் கொண்டதையடுத்து, அவர்களைக் காப்பாற்ற அப்பகுதி மக்கள் கடுமையான பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்தனர். குறித்த இருவரும் காரின் உள்ளேயே உயிரிழந்திருந்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு சீன அரசிடமிருந்து சீருடை நன்கொடை

சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு நன்கொடையாகக் கிடைத்த பொலிஸ் சீருடைத் துணிகளை உத்தியோகபூர்வமாக பொலிஸ் திணைக்களத்திற்கு கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த நன்கொடை தொடர்பான ஆவணங்கள், இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஷென் ஹொன்னினால் ஜனாதிபதி முன்னிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர் டிரான் அலஸிடம் கையளிக்கப்பட்டது. பின்னர் ஜனாதிபதியும் நன்கொடைகளை பார்வையிட்டார். இந்நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் […]

பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக நிறைவு

அரசாங்கத்தின் வரி கொள்கையை உடனடியாக மாற்றுமாறு கோரி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படட பணிப்பகிஷ்கரிப்பை தற்காலிகமாக நிறைவு செய்வதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மின் பொறியியலாளர்கள் உள்ளிட்ட மின்சார சபை ஊழியர்கள், வங்கி உத்தியோகத்தர்கள், பெட்ரோலியம், நீர் வழங்கல், வீதி அபிவிருத்தி, கல்வி நிர்வாகம், நில அளவையாளர்கள் உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்கள் நேற்றைய(15) ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பில் பங்கேற்றிருந்தன. ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக வருமானம் பெறும் அனைவரிடமிருந்தும் 06 […]

ஹட்டனில் மலையக அரசியல் அரங்கத்தின் மகளீர் தின கொண்டாட்டம்

மலையக அரசியல் அரங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின சிறப்பு உரையரங்கம் ஹட்டன் புகையிரத நிலைய வீதி யில் அமைந்துள்ள CSC மண்டபத்தில் 18/03/2023 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. மலையகப் பெண்கள் அரங்கத்தின் தலைவர் ஆறுமுகம் சந்திரரேகா தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான கோகிலம் சுப்பையா வின் நினைவாக ” வெளிநாட்டில் பணிப்பெண் வேலை : பிரச்சினைகளும் சவால்களும்” ( மலையகப் பெண்களை குறித்த சிறப்புப் பார்வை […]

வேலை நிறுத்தம் வெற்றியா? தோல்வியா?

தொழிற்சங்க நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். ஒரு சில தொழிற்சங்கங்கள் மாத்திரமே தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார். ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பணிப்பகிஷ்கரிப்பு முழுமையாக செயற்படுத்தப்படவில்லை என ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் சுட்டிக்காட்டினார். பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்ட  போதிலும், அத்தியாவசிய சேவைகள் உரியவாறு இடம்பெறறதாக அவர்  கூறியுள்ளார்.

மௌனிப்பது ஏன்? – VS

மலையகப் பெருந்தோட்ட நிலங்களை வெளியார் ஆக்கிரமிப்பு வேடிக்கை பார்க்கும் தோட்ட நிர்வாகம் சட்டங்களும் கேடுபடிகளும் தொழிலாளர்களுக்கு மட்டுமா ? நமுனுகலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பதுளை நமுனுகலை இதகல தோட்டத்தினுடைய பெருந்தோட்ட காணிகளை பலவந்தகமாக வெளியார் ஆக்கிரமித்துள்ளனர் நிலைமை அறிந்தும் தோட்ட நிர்வாகம் மௌனம் காக்கின்றது என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினுடைய பொதுச்செயலாளருமான வடிவேல் சுரேஷ் பெருந்தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்கள் தங்களுடைய நலனுக்காக மலசல கூடத்தை விஸ்தரிக்கவோ அல்லது […]

ஆர்ப்பாட்டம்…

வரி கட்டணம் மற்றும் மின்சார கட்டணம் அதிகரிப்புக்கு எதிராக  நுவரெலியா – இராகலை நகரில் ஒன்று திரண்ட ஆசிரியர், அதிபர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆரப்பாட்டத்தின் போது, கறுப்பு கொடிகளை தாங்கியவாறு, கோஷங்களை எழுப்பியவாறு போராட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஒரு மணித்தியாலயம் ஈடுப்பட்டனர். அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் வரி சுமை என்பன மக்கள் மீது தான்தோன்றி  தனமாக தினிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் மறுபுறத்தில் மக்களின் அங்கிகாரமில்லாத ரணில் அரசு மக்களின் ஜனநாயக உரிமைகளை குழித்தோன்டி புதைத்து […]

தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பற்றிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் பணிப்புறக்கணிப்பை நாளை முதல் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி நாளை காலை 8 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தினால் தொழில் வல்லுநர்கள் சங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.