மலையக பல்கலைக்கழகம் பற்றிய புதிய அறிவிப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கங்களோடு இணைந்து செயல்பட்டதனால் மலையகதில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடிந்தது என  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும், ஜனாதிபதியின் செயலணியின் கல்வி அபிவிருத்தி உறுப்பினருமான கணபதி கனகராஜ்  தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தோடு இணைந்து செயல்படுவது தொடர்பாகவும், அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்று இருப்பது தொடர்பாகவும் சிலர் விமர்சனங்களை முன்வைத்து  வருகின்றனர். மலையக மக்கள் இலங்கையில் உரிமைகள் பறிக்கப்பட்ட ஒரு ஒதுக்கப்பட்ட இனமாக இருந்த நிலையை மாற்றி அமைத்தது இலங்கை தொழிலாளர் […]

உள்நாட்டில் ஒன்றிணைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள்

கைத்தொழில் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட, இலங்கையில் வாகன உற்பத்தி, ஒன்றிணைத்தல் மற்றும் உதிரிப்பாக உற்பத்திக்கான நிலையான செயற்பாட்டு நடைமுறையின் (SOP) பிரகாரம் உற்பத்தியை ஆரம்பித்த செனாரோ (SENARO GN 125) புதிய மோட்டார் சைக்கிள்களை ஜனாதிபதி அலுவலகத்திற்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (15) முற்பகல் இடம்பெற்றது. செனாரோ மோட்டார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரொஷான வடுகேவினால் வாகன சாவி மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் என்பன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. இலங்கை வங்கியின் முழுமையான […]

ரயில்வே பொது முகாமையாளரின் அறிவிப்பு

ரயில்வே ஊழியர்களின் விடுமுறை ரத்துச் செய்யப்பட்டுள்ளது தொடர்ச்சியான ரயில் சேவையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கோடு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டபிள்யு.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார். ரயில் சேவை அதிவிசேட வர்த்தமானியின் மூலம் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சேவைக்கு சமூகமளிக்காத அனைவரிடமும் அது பற்றி விளக்கம் கோரவிருப்பதாகவும் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் இன்று(15) 20 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக ரயில்வே பொது முகாமையாளர் W.A.D.S.குணசிங்க தெரிவித்துள்ளார். பெலிஅத்த, காலி, அவிசாவளை, கண்டி, ரம்புக்கனை, அளுத்கம […]

PMD முக்கிய அறிவிப்பு

பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் நாடளாவிய ரீதியில் 265 இலங்கை வங்கிக் கிளைகள் மற்றும் 272 மக்கள் வங்கிக் கிளைகள் ஆகியன இன்று (15) இயங்குவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வழமையான முறையில் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்காக 300 பெட்ரோல் மற்றும் டீசல் பௌசர்கள் தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.  

பணி புறக்கணிப்பு போராட்டத்தால் மலையகத்தின் இயல்பு நிலையும் சற்று ஸ்தம்பித்தது

(அந்துவன்) நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்களால் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் மலையகத்தின் இயல்பு நிலையும் சற்று ஸ்தம்பித்தது. அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள், மின்சார பொறியியலாளர்கள், வங்கி சேவை ஊழியர்கள், பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், வீதி அபிவிருத்தி, கல்வி நிர்வாகம், நில அளவை திணைக்களம், வருமான வரி உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்கள் இணைந்தே பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றன. நியாயமற்ற வரி விதிப்புக்கு எதிர்ப்பு உட்பட பல […]

தேவைக்கேற்ப பேருந்துகள்

பொது மக்கள் சிரமமின்றி பயணிக்கக்கூடிய வகையில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இன்று (15) தேவைக்கேற்ப தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத துறையினர் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்ட்டுள்ளதால் மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையும் பொது மக்களின் நலன்கருதி மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் […]

ஜனாதிபதி நன்றி

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பாரிஸ் கழகம்,  ஜப்பான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது நன்றியை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கம் பாரிய சீர்திருத்தங்களை ஏற்கனவே அமுல்படுத்தியுள்ளதாக இலங்கையின் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குனர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார். இலங்கையை ஒழுங்குபடுத்துவதற்கு முன்னர் கடன் வழங்குநர் குழுவுடன் இணக்கம் காணப்பட்ட எந்தவொரு கடன் […]

மன்னர் முன்னாள் பாடப்பட்ட நம் நாட்டு பாடல்

இந்த முறை இங்கிலாந்தின் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அண்மையில் பொது நலவாய தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் மன்னர் மூன்றாம் சார்லஸ் உட்பட பல அரச குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இதன்போது இலங்கை கலைஞர்களான ரொஷானி மற்றும் நுவன் ஆகியோர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு பாடலை பாடி அசத்தினர்.

வேலை நிறுத்தம்…

சுகாதாரத் துறை, துறைமுகம், மின்சாரம், குடிநீர், ரயில்வே, தபால், வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இன்று காலை முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வரித் திருத்தங்கள், மின்சாரக் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்போது, நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. மருத்துவ உத்தியோகத்தர்கள், தாதியர்கள், ஆய்வக சேவைகள், மருத்துவமனை கனிஷ்ட ஊழியர்கள் உள்ளிட்ட சுகாதார […]

தொழிற்சங்க போராட்டம்…

கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன. ஆரசாங்கத்தின் புதிய வரி விதிப்பு உள்ளிட்ட பல காரணங்களுசக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதேவேளை, இன்று (15) 10 அலுவலக ரயில்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்றைய தினத்தை (15) பணிப்பகிஷ்கரிப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளனர். அரச, அரச அனுசரணை பெற்ற பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்த […]