அரசியல் என்பது சேவை – ஜீவன்

“ அரசியல் என்பது மக்களுக்கு சேவைசெய்வதற்கானதோர் சிறந்த களமாகும். எனது அரசியல் பயணமும் மக்களுக்கானது. மக்களுக்கு சேவை செய்யவே அரசியல் பலத்தையும், அமைச்சு பதவியையும் பயன்படுத்தி வருகின்றேன். எனவே, மக்கள் தமது பிரச்சினைகளை என்னிடம் தாராளமாக எடுத்துக்கூறலாம். என்னால் முடிந்தவற்றை செய்து தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு தயாராக உள்ளேன்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் […]

பெண்களின் உரிமைகளை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்

ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பெண்கள் முன்னிலையில் இருப்பதாகவும், அந்த நிலைமையை மேலும் விரிவுபடுத்தி, உலகில் முன்னேறிய நாடுகளைப் போன்று பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். “பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல் தொடர்பான தேசிய கொள்கை” மற்றும் “பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய செயற்திட்டம்” ஆகியவை அதற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். சார்க் அமைப்பில் பெண்களின் […]

கற்றல் உபகரணங்கள்

கொட்டகலை ஹரிங்டன்  தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்கும்  மாணவர்கள் அனைவருக்கும் கற்றல் உபகரணங்கள் கொட்டகலை பகுதி சமூக சேவகரும் அரசியல் ஆய்வாளருமான ராமன் செந்தூரன் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.  பாடசாலை அதிபர் திருமதி ராஜேஸ்வரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை மற்றும் மாணவர்கள் உட்பட ஹரிங்டன் தோட்ட உரிமையாளர் விஜயபாலவும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ரமழான் பண்டிகை: ஜனாதிபதி அறிவுறுத்தல்

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில், இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்திற்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்டங்கள் பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்வரும் ரமழான் பண்டிகை காலத்திற்கான நிவாரண நடவடிக்கையாக ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இதன்படி, 01 கிலோ பேரீச்சம்பழத்திற்கு 200 ரூபா வீதம் விதிக்கப்பட்டிருந்த வரி , 01 கிலோவுக்கு 01 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி செலவிடப்படாத வகையில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் பரிந்துரையின் பேரில் பல்வேறு […]

“கோதுமை மா” பற்றிய அறிவிபபு

ப்ரீமா மற்றும் செரன்டிப் கோதுமை மாவின் விலையை குறைக்க ப்ரீமா மற்றும் செரன்டிப் நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி, ஒரு கிலோ கிராம் ப்ரீமா மற்றும் செரன்டிப் கோதுமை மாவின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, 450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படுவதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலாகவும் வகையில் பாணின் விலை குறைக்கப்படுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

மலையக இளைஞர் – யுவதிகளுக்கு விஷேட தொழிற்பயிற்சித் திட்டம்

பல்வேறு திறமைகளைக் கொண்டுள்ள மாணவர்கள் (OL) சாதாரண தரத்தின் பின்னர் உயர்தரத்துக்கு செல்லமுடியாத நிலையில்  தொழிலின்றி அவலப்படுவதை காணமுடிகிறது. இத்தகைய இளைஞர் யுவதிகளை இனம்கண்டு கல்வி அமைச்சின்கீழ் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையங்களின் ஊடாக அவரவரின் திறமைக்கேற்ப தொழிற்பயிற்சிகளை வழங்க விஷேட திட்டமொன்றை முதற்கட்டமாக 11 ஆம் திகதி சனிக்கிழமை பதுளை மாவட்டத்தில் ஆரப்பித்து வைக்கவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கல்வி இராஜாங்க அமைச்சின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, […]

ஜனாதிபதியின் கைகளை பலப்படுத்த தயார்

பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கத்திற்கு சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (SLPP) தெரவித்துள்ளது. ஜனாதிபதியின் கைகளை பலப்படுத்த தயார் எனவும் நேற்று விஜயராமயில் கூடிய பொதுஜன பெரமுண தீர்மானித்ததாக பா.உ ரோஹித் அபேகுணவர்தன கூறியுள்ளார். அதேபோல் எந்தவொரு தேர்தலுக்கும் தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

$1 billon

1 பில்லியன் ($1 billon ) அமெரிக்க டொலர் இந்திய கடன் வசதியை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க, இலங்கை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கடன் வசதி இந்த ஆண்டு மார்ச் 17 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இதுவரை பெறப்பட்ட கடன் வசதியில், மூன்றில் இரண்டு பங்கு மருந்து மற்றும் உணவுக்காக இலங்கை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“அவள் நாட்டின் பெருமை”

சர்வதேச மகளிர் தினம் இன்று (08) அனுஷ்டிக்கப்படுகின்றது. 1975 ஆம் ஆண்டு இந்நாளை சர்வதேசப் பெண்கள் தினமாக ஐ.நா. அங்கீகரித்தது. வேலை நேரத்தை குறைக்கவும் கொடுப்பனவை உயர்த்தவும் வலியுறுத்தி, வாக்களிக்கும் உரிமை கோரி 15,000 தொழில் புரியும் பெண்கள் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 1908 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி பேரணியொன்றை நடத்தினர். இந்த நாளை, அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சி அறிவித்தது. சமூகம், அரசியல், பொருளியல் போன்ற […]

தபால் மூல வாக்கெடுப்பு…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு மார்ச் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவாவிடம் வினவியபோது, ​​எதிர்வரும் மார்ச் மாதம் 28, 29, 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று […]