ஈஸ்டர் தாக்குதலின் உண்மைகளை கோத்தபாய மறைத்தது போல் ரணிலும் மறைக்கிறார்! சஜித் குற்றச்சாட்டு

  முறைமையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என நாட்டு மக்கள் கோரும் இவ்வேளையில்,உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும் அதனால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையையும் அரசியலாக்காது முழுமையான உண்மையைத் தேடுவதே எதிர்க்கட்சியின் நோக்கம் என்றும், அரசாங்கம் உண்மைகளையும் தரவுகளையும் மறைப்பதால், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தமக்கும் சரியான உண்மைகள் தெரியாது என்பதனால்,இது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்துமாறே எதிர்க்கட்சி கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இங்கு உண்மையை மறைப்பது என்பதிலிருந்து கைகளில் இரத்தம் தோய்ந்த நபர்களின் சதியோ என்று […]

கஜேந்திரன் MP மீதான தாக்குதலை கண்டித்து முல்லைதீவில் போராட்டம்! சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது.

பாரளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட தரப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 பேர் சீனன்குடா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தியாகி திலீபனின் 36 வருட நினைவேந்தலை முன்னிட்டு திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியொன்று வாகனப் பேரணி பொத்துவிலில் இருந்து அவர் உயிர்நீத்த இடமான யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. இந்நிலையில் நேற்று மூதூர், சேனையூர், தம்பலகாமம் பகுதிகள் ஊடாக திருகோணமலை நகரத்தை நோக்கி, குறித்த வாகனப் பேரணி பயணித்துக் கொண்டிருந்தபோது சர்தாபுரம் […]

தாராபுரம் அல் மினா மகா வித்தியாலய புதிய அதிபர் பொறுப்பேற்றார்!

( வாஸ் கூஞ்ஞ) கடந்த ஒரு வருடத்துக்கு மேல் மன்னார் தாராபுரம் அல் மினா மகா வித்தியாலயத்துக்கு இருந்து வந்த பாடசாலை அதிபர் வெற்றிடம் திங்கள் கிழமை (18) முதல் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. தகுதியான ஒருவரையே இப்பாடசாலை அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது. இப்பாடசாலையின் புதிய அதிபராக எஸ்.எம்.சுல்ஹார் திங்கள் கிழமை (18) காலை 7.10 மணிக்கு தனது புதிய பதவியேற்பை ஏற்றுள்ளார். ஒரு வருடத்துக்கு மேலாக அதிபர் அற்ற நிலையில் பதில் அதிபரே […]

இனி பிணக்கு இல்லை மக்கள் சேவையே நமது வேலை! புதிய நிர்வாகிகள் மத்தியில் இராதாகிருஷ்ணன் சூளுரை!

( நூரளை பி. எஸ். மணியம்) மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிற்சங்க பிரிவான மலையக தொழிலாளர் முன்னணியில் அதிரடி மாற்றம். மலையக மக்கள் முன்னணி மற்றும் அதன் தொழிற்சங்க பிரிவான மலையக தொழிலாளர் முன்னணி யில் மறுசீரமைப்பு ஹட்டன தலைமை காரியாலயத்தில் அக் கட்சியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன்  தலைமையில் நேற்று  (17) ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதன் போது புதிய நிர்வாக சபை மற்றும் கவுன்சில் உறுப்பினர்கள் தெரிவு […]

சாய்ந்தமருது மீனவர்களின் போராட்டத்தின் எதிரொலி! களத்திற்கு சென்ற ஹரீஸ் MP , கடலரிப்பு குறித்து கலந்துரையாடல்

நூருல் ஹுதா உமர் கடந்த சில வாரங்களாக அகோரமாக கடலரிப்பை சந்தித்துள்ள சாய்ந்தமருது பிரதேசத்தில் மீனவ வாடிகள், பள்ளிவாசல், பூங்காக்கள் என்பன கடலரிப்பில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீன்பிடி நடவடிக்கையும் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களுடனான கலந்துரையாடல் இன்று சாய்ந்தமருதில் இடம்பெற்றது. அதிக மீன் உற்பத்தியை கொண்ட இந்த பிரதேச மீனவர்களின் பிரச்சினைகளை கள விஜயம் மேற்கொண்டு கேட்டறிந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் இராஜங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் […]

சாய்ந்தமருதில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேசத்தில் கடலரிப்பினால் தமது மீனவ வாடிகள் முழுமையாக கடலுக்குள் அடித்துச் செல்வதாகவும், மீனவ நடவடிக்கைகளுக்கு இடையூறாக பாராங்கற்களை கொண்டு வீதிகளை மறித்து வைத்திருப்பதனால் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக தெரிவித்தும் சாய்ந்தமருது மீனவர்களும், மீனவ வாடி உரிமையாளர்களும் சாலை மறியல் போராட்டத்தில் இன்று (18) காலை முதல் ஈடுபட்டனர். கரையோரம் பேணல் திணைக்களம் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கடலரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் பாராங்கற்களை சாய்ந்தமருது கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் தேக்கி வைத்திருப்பதாகவும் இதனால் […]

அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்த சர்வதேச சக்திகளுடன் இணைந்த தாக்குதலே ஈஸ்டர் தாக்குதல் – ஹாரீஸ் MP

நூருல் ஹுதா உமர் அண்மையில் வெளியான சனல் 04 காணொளி விடயம் பொய்யாக புனையப்பட்ட விடயமல்ல. அதில் அவிழ்க்கப்படாத இன்னும் பல மர்மங்கள் உள்ளது போன்றே தெரிகிறது. சக்திவாய்ந்த அந்நிய நாடுகளின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே இப்படியான சம்பவங்கள் இலங்கையில் அரங்கேறுகிறது. இலங்கை முஸ்லிங்களை குறிவைத்து அதிகார கதிரையை நோக்கியதாக முன்னெடுக்கப்பட்ட பெரிய சக்திகளின் பந்தாடலுக்குள் இலங்கை முஸ்லிம் சமூகம் சிக்கிக்கொண்டுள்ளது. பெருந்தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் கொலையுடனையே முஸ்லிம் சமூகத்தின் மீதான பந்தாடல்கள் ஆரம்பித்துள்ளதாக […]

தாராபுரத்தில் புதிய அதிபர் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்!

( வாஸ் கூஞ்ஞ) 18.09.2023 மன்னார் தாராபுரம் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெற்றோர் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலாவதியான தாராபுரம் பகுதி நிர்வாகங்கள் தான்தோன்றித் தனமாக செய்ல்பட்டு வருவதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டது. மன்னார் தாராபுரம் அல் மினா மகா வித்தியாலயத்துக்கு நீண்ட நாட்களுக்குப்பின் திங்கள் கிழமை (18) புதிய அதிபர் நியமிக்கப்பட்டு அவர் இன்றையத் தினம் (18) தனது பணி பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்த புதிய அதிபர் தங்கள் […]

உத்திக பிரேமரத்ன MP யை இலக்கு வைத்தது யார்? சுயாதீனமாக இயங்குவதால் வந்த எதிர்ப்பா?

அஸ்ரப் அலீ நாடாளுமன்ற உறுப்பினரும், நாடறிந்த நடிகருமான உத்திக பிரேமரத்னவை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது அவர் அநுராதபுரத்தில் உள்ள தனது வீட்டுக்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் இந்தத் துப்பாக்கிச் சூடு, மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாகனமொன்றில் வருகை தந்த மர்ம நபர்கள், உத்திக பிரேமரத்ன எம்.பி.யின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். எனினும் அதிர்ஷ்டவசமாக அவர் காயங்களின்றி தப்பித்துக் கொண்டுள்ளார். பொதுஜன பெரமுணவின் நாடாளுமன்ற உறுப்பினரான உத்திக பிரேமரத்ன, அண்மையில் […]

பசறையில் சட்ட விரோதமாக 45 கிலோ மாட்டிறைச்சி கடத்தல் ! விசேட அதிரடி படையால் கடத்தியவர் கைது!

ராமு தனராஜா சட்டவிரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி முச்சக்கர வண்டியில் 45 கிலோ கிராம் மாட்டு இறைச்சி கொண்டு சென்ற ஒருவரை ஆக்கரத்தன்னை விஷேட அதிரடி படையினர் கைது செய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். கடந்த காலங்களில் பசறை பகுதியில் அதிக அளவான பசு மாடுகள் காணாமல் போவதாக பசறை பிரதேச மக்களினால் மொனராகலை பிராந்திய விஷேட அதிரடி படையினரின் தளபதி குணசிறிக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் அசோகவின் ஆலோசனைக்கு அமைய […]