IMF – உடன்பாடு ஜனாதிபதி வழங்கிய உறுதி

தற்போதைய வரிக் கொள்கையானது சாதாரண வரிக் கொள்கையன்றி மீட்பு நடவடிக்கை எனவும் இந்த செயற்பாடு சீர்குலைந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடுளை மேற்கொள்ள முடியாது நிலை மட்டுமன்றி எந்தவொரு நாட்டுடனும் கொடுக்கல் வாங்கல் செய்யும் வாய்ப்பை இலங்கை இழக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சாதாரண வரவு செலவுத் திட்டம் அல்ல எனவும், பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற […]

பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறைந்துள்ளன

நாட்டில் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டுமெனவும், தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள பொருளாதார வேலைத்திட்டத்தின் காரணமாக கடந்த சில மாதங்களாக இருந்த பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறைந்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இவ்வாறு வீழ்ச்சியடைந்த நாட்டிற்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியத்தை தவிர உலகில் வேறு எந்த நிறுவனமும் இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதாரத் தைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு மாற்று முன்மொழிவுகள் இருப்பின், அவற்றை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிப்பதற் […]

மூன்று கோடி பாடப் புத்தகங்கள் – கல்வி ராஜாங்க அமைச்சர்

2023 இன் புதிய கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை மார்ச் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்க உள்ள நிலையில் நாட்டின் அனைத்து அரச பாடசாலைகளுக்குமாக 3000 கோடி ரூபா செலவில் மூன்று கோடியே 7 லட்சம் பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அதன் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் உரிய நேரத்தில் பாடப் புத்தகங்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் கல்வி ராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் ஹோமாகமை களஞ்சிய சாலையிலிருந்து […]

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம்-GL

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் இன்று (20) நள்ளிரவு முதல் ஜனாதிபதிக்கு கிடைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரீஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (20) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஆகவே தனக்குள்ள குறித்த அதிகாரத்தை ஜனாதிபதி பாவிப்பார் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார். கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலின் பின்னர் அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவுக்கு, அரசியலமைப்பின் 70 1 (அ) உறுப்புரையின் பிரகாரம் நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார ஆணைக்குழு – ஜனாதிபதி (Photos)

உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் முதலீடுகளுக்கான அனுமதியை துரிதமாக பெற்றுக்கொடுக்க பொருளாதார ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் தமது வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி பெறுவதற்கு நீண்ட காலம் செல்வது சிக்கலானது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதனால் நாடு பாரியளவு வருமானத்தை இழந்து வருவதாகவும் குறிப்பிட்டார். கண்டி, ஹந்தானையில் நிர்மாணிக்கப்பட்ட நாட்டின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா மற்றும் சூழல் சுற்றுலா வலயத்தை […]

நகர அபிவிருத்தி திட்டம்

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி நகரை முழுமையாக அபிவிருத்தியடைந்த நகரமாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, கட்டுகஸ்தோட்டைக்கு செல்லும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தை துரிதமாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கட்டுகஸ்தோட்டை, கண்டி மற்றும் குண்டசாலையை மையமாகக் கொண்ட விசேட அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிப்பதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபை, கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழு, மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், நகர திட்டமிடல் துறை அறிஞர்கள் அடங்கிய விசேட […]

கலை நிகழ்வுகள்

ஹட்டன் வனராஜா வோர்லி தோட்ட இளைஞர்களின் ஏற்பாட்டில் ஊரில் கலைஞர்களையும் அவர்களின் கலையாற்றலையும் வெளிக்கொண்டுவரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்வுகள் வோர்லி தோட்ட ஆலயத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊரில் பல இளைஞர் யுவதிகள் தங்களை கலையாற்றல்களை மேடையேற்றதோடு ஆடல்,பாடல், பேச்சு என பலவகையிலும் திறமைகளை வெளிக்காட்டினர். இந்நிகழ்வில் ஊர்பொதுமக்கள் உட்பட பல பகுதிகளில் இருந்தும் பல பார்வையாளர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்ப்பிடத்தக்கது.

நோட்டன்பிரிட்ஜ் பஸ் விபத்து – மூவர் பலி – 21 பேர் காயம் – ஐவர் கவலைக்கிடம்

(அந்துவன்) நல்லதண்ணியிலிருந்து கொழும்பு மஹரகம நோக்கி சிவனொளிபாதமலை யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்ததோடு, 21 பேர் படுங்காயமடைந்ததோடு, ஐவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர். நோட்டன்பிரிட்ஜ் கினிகத்தேனை பிரதான வீதியில் நோர்டன்பிரிட்ஜ் டெப்லோ பகுதியில் நேற்று (19.02.2023) இரவு 09.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. எதிர்திசையில் இருந்து வந்த மற்றுமொரு பஸ்ஸுக்கு வழிவிட […]

34 ஆண்டுகளுக்கு பிறகு குடியரசு பெரஹரா

வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் முப்பத்து நான்கு வருடங்களின் பின்னர் இடம்பெற்ற குடியரசு பெரஹரா நேற்று இரவு (19) கண்டி நகரில் வீதி உலா வந்தது. இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்த பெரஹரா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று மாலை 6.45 மணியளவில் கண்டி மங்களகூடத்தில் இருந்து ஆரம்பித்த பெரஹரா, தலதா […]

விபத்துக்கான காரணம்: அதிர வைக்கும் தகவல்

நோட்டன்பிரிட்ஜ் – கினிகத்தேனை தியகல பிரதான வீதியில் டெப்லோ பகுதியில் நேற்று (19) இரவு பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 26 பேர் படுங்காயமடைந்துள்ளனர். நல்லதண்ணியிலிருந்து கினிகத்தேனை தியகல வழியாக கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. கொழும்பு ரத்மலானை பகுதியிலிருந்து சிவனொளிபாதமலைக்கு சென்று, மீண்டும் கொழும்பு நோக்கி செல்லும் வழியிலேயே குறித்த பஸ் நோட்டன்பிரிட்ஜ் டெப்லோ எனும் பாதையை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் […]