திருகோணமலை கப்பல்துறையில் தியாக தீபம் தீலிபனின் ஊர்தி மீது தாக்குதல்

திருகோணமலை கப்பல்த்துறையில் தியாகதீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திமீது அப்பகுதியை சேர்ந்த சிங்கள இனத்தை சேர்ந்த கோஷ்டியொன்று   தாக்குதல்  நடத்தியுள்ளனர்   தியாகி திலீபன் 36 வது நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் தற்போது எழுச்சியான முறையில் நடைப்பெற்று வருகிறது. இன்று திருகோணமலையில் நடைப்பெற்ற ஊர்தி ஊர்வலத்தின் போது அந்த பகுதியில் வசிக்கும் சிங்கள இளைஞர் கோஷ்டியே கற்களால் தாக்குதல் நடத்தியதாக விக்பல செய்தி வெளியிட்டுள்ளது. උපවාසයක යෙදී සිටියදී 1987-09-26 දා ජීවිතය පරිත්‍යාග කළ 'තිලීපන්ගේ' […]

ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் முத்தான முப்பெரும் விழா – பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர்

  எம்.ரீ.எம்.பாரிஸ் ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் முத்தான முப்பெரும் விழா கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. கல்லூரி அதிபர் அல் ஹாஜ் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் (SLPS-01) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த் குமார் கலந்து கொண்டார். கெளரவ அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் எஸ்.எம்.எம்.அமீர், லெப்டினண்ட் கேர்ணல் அனஸ் தாவூத், பேராசிரியர் கலாநிதி எம்.ஏ.சீ.நாஸர், சிறப்பதிதியாக கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கோட்டக்கல்வி அதிகாரி வீ.ரீ.அஜ்மீர், […]

கிளிநொச்சில் அனுமதி பெற்ற மணல் அகழ்விற்கு தற்காலிக தடை – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

  கிளிநொச்சி, இரணைமடுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த சட்ட விரோத மணல் அகழ்வு பூரணமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதேபோன்று ஏனைய பகுதிகளிலும் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வுகளும் பூரணமாக கட்டுப்படுத்தப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அதிகாரிகளினால் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது.   சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று(16.09.2023) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த விசேட கூட்டத்தினை தொடர்ந்து, அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய இரணைமடு பகுதிக்கு […]

மரக்கிளை முறிந்து விழுந்ததில் அக்ரபத்தனையை சேர்ந்த திவ்யராணி மரணம்!

பூண்டுலோயா பாலுவத்தை பகுதியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் 17 வயது இளம் பெண் மரணமாகியுள்ளார். பூண்டுலோயாவில் இருந்து அக்கரப்பத்தனை பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் செல்லும் போதே மரக்கிளை முறிந்து விழுந்துள்ளது. இச்சம்பவம நேற்று  மாலை 6.30 மணியளவில் பூண்டுலோயா நியாகந்தை பாலுவத்த பகுதியில் நிகழ்ந்துள்ளது இவ்வாறு இறந்தவர் அக்கரப்பத்தனை உருவள்ளி பகுதியை சேர்ந்த 17 வயதான விஜயராஜ் திவியராணி என அடையாளம் காணப்பட்டுள்ளது.¶ சடலம் கொத்மலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர். செய்தி -கௌசல்யா, பாலேந்திரன் […]

ரத்மலானை ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபைக்குள் குழப்பம்! சுமூக தீர்க்க வேண்டுமென கோரிக்கை!

(அஷ்ரப் ஏ சமத்) ரத்மலானை ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு கடந்த வருடம்2022 ல் வக்பு சபையினால் 7 பேர் கொண்ட ஒர் சிறந்த நிருவாக சபை நியமிக்கப்பட்டு அச் சபை கடந்த ஒர் வருடமாக சிறப்பாக இயங்கிவந்தது. அந்தச் சபை இருக்கத்தக்க அரசியல்வாதிகளின் பலத்துடன் மேலும் ஒரு சபை நியமிககப்பட்டு கடந்த வாரம் இன்னும் ஒரு நிருவாக சபையை முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவலகப் பணிப்பாளர் கையொப்பமிட்டு 5 பேர் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.. மேற்படி […]

சாய்ந்தமருதில் தலைவர் அஸ்ரப்பின் 23வது நினைவேந்தல் : ஹக்கீம் உடப்பட மு.கா பிரமுகர்கள் சகலரும் பங்கெடுப்பு !!

நூருல் ஹுதா உமர்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் 23 வது வருட நினைவு தின தேசிய நினைவேந்தல் நிகழ்வு இன்று (16) சாய்ந்தமருது பௌசி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இந்தியா வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் கவிமாமணி பேராசிரியர் முனைவர் அப்துல் காதர் கலந்து கொண்டு தலைவர் அஷ்ரபின் அரசியல் முன்னெடுப்புகள், இலங்கை அரசியலில் அஸ்ரபின் வகிபாகம், […]

கொழும்பு கோட்டை – தலைமன்னார் ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்!!

கொழும்பு கோட்டை தலைமன்னார் துறை நேரடி புகையிரத சேவை இன்றிலிருந்து (15.09.2023) ஆரம்பம். புகையிரத இலக்கம் 5003 கொழும்பு கோட்டை – தலைமன்னார் துறை கொழும்பில் இருந்து பி.ப 15.55க்கு புறப்பட்டு தலைமன்னார் துறை வரை பின்வரும் நிலையங்களில் நிறுத்தப்படும். பொல்கஹவெல சந்தி(17.10), குருநாகல்(17.40) ,மாஹோ சந்தி(18.26) ,கல்கமுவ(07.02), தம்புத்தேகம(07.34),அனுராதபுரம்(20.22), மதவாச்சி சந்தி(20.45), செட்டிக்குளம்(21.03) , மடு ரோட்(21.22), முருங்கன்(21.34),மன்னார்(21.54), பேசாலை(10.07), தலைமன்னார்(10.18),தலைமன்னார் துறை[10.21] புகையிரத இலக்கம் 5004 தலைமன்னார் துறை/ கொழும்பு கோட்டை. தலைமன்னார் துறையில் […]

சிரேஷ்ட நிருவாக சேவை அதிகாரிகளுக்கான கடிதங்கள் ஆளுனரால் வழங்கி வைப்பு

(அபு அலா ) வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் பதில் செயலாளராகவும் ஏ.மன்சூர் மற்றும் பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) எம்.எம்.நசீர் ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநராகப் பதவியேற்ற செந்தில் தொண்டமான் அவர்களின் இற்றைவரையான காலப்பகுதியில் மதம் சார்ந்து எந்த நியமனங்களையும் வழங்கவில்லை. தகுதி மற்றும் திறமைகளை அடிப்படையாகக் கொண்டே அரச நியமனங்களை அவர் வழங்கி வருகின்றார் என கிழக்கு மாகாண […]

தியாக தீபம் தீலிபனின் 36 வது நினைவேந்தல்!

தமிழர் உரிமைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்த் தியாகம் செய்த, தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, யாழ். நல்லூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் ஆரம்பமானது. நல்லூரில் திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த இடத்திலும் நினைவேந்தல் ஒன்று இடம்பெற்றது. அத்துடன் பொத்துவில் நகரிலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்! இதுவரை 17 எழும்பை கூடுகள் மீட்பு!!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் 9ஆவது நாளாக அகழ்வுப் பணிகள் இடம்பெற்றதோடு, 3 எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்ட நிலையில் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 17 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அக்டோபர் மாதம். 3ஆம் வாரம் அகழ்வு மீள ஆரம்பிக்கப்படலாம்.” மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி  க. வாசுதேவா தெரிவித்தார் “கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் 9ஆவது நாளாக அகழ்வுப் பணிகள் இடம்பெற்றதோடு, 3 எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்ட நிலையில் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 17 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. ஒக். 3ஆம் வாரம் […]