நோட்டன்பிரிட்ஜ் பஸ் விபத்து – இருவர் பலி – 28 பேர் காயம்

(அந்துவன்) நோட்டன்பிரிட்ஜ் – கினிகத்தேனை தியகல பிரதான வீதியில்  டெப்லோ பகுதியில் 19.02.2023 அன்று இரவு 9.30 மணியளவில் தனியார் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் படுங்காயமடைந்துள்ளனர். நல்லதண்ணியிலிருந்து கினிகத்தேனை தியகல வழியாக கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. கொழும்பு ரத்மலானை பகுதியிலிருந்து சிவனொளிபாதமலைக்கு சென்று, மீண்டும் கொழும்பு நோக்கி செல்லும் வழியிலேயே குறித்த பஸ் 19.02.2023 அன்று இரவு 9.30 மணியளவில் நோட்டன்பிரிட்ஜ் டெப்லோ எனும் பாதையை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதன்போது, பஸ்ஸில் […]

1000 ரூபா சம்பள உயர்வின் பின்னர், தொழிற்சங்கங்களுக்கும், கம்பனிகளுக்கும் இடையில் முரண்பாடு

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நீர்க்கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயசூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், மக்கள் நலன்கருதி குறுகிய காலப்பகுதிக்குள் நீர் கட்டண உயர்வை மீளக்குறைப்பதற்கான திட்டத்தை செயற்படுத்துவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். மாத்தளை பிரதேசத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாத்தளை மாநகர மேயர் சந்தானம் பிரகாஷ் மற்றும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சிவஞானம் ஆகியோரின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு […]

வருட இறுதிக்குள் பொருளாதாரத்தை சிறந்த நிலைக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை

ஒரு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்பதற்கு ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் அவசியம் எனவும், ஒழுக்கமான சமூகத்தின் ஊடாக இலங்கையை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இன்று மக்கள் பொருளாதார ரீதியாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்ற போதிலும் இதனை குறுகிய காலத்திற்கே எதிர்பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த வருட இறுதிக்குள் நாட்டு மக்களின் பொருளாதாரத்தை சிறந்த நிலைக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார். தேசிய மாணவர் […]

புதிய தேர்தல் முறையை உருவாக்குவது குறித்து ஆராய குழு

தேர்தலின் போது வேட்பாளர் ஒருவர் அதிக பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் ஏற்படாத வகையில் தேர்தல் முறையை உருவாக்குவது குறித்து ஆராய குழுவொன்று நியமிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக இளைஞர் குழுவொன்றுடன் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடந்த சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் இந்த இளைஞர்கள் குழு நாட்டின் பிரதான நாளிதழ் ஒன்றில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்ததுடன், அது தொடர்பில் […]

ஹக்கல பகுதியில் – Accident

நுவரெலிய – வெலிமடை பிரதான வீதியில் ஹக்கல பகுதியில் எரிபொருள் கொள்கலம் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொலன்னாவையில் இருந்து கெப்பட்டிபொல பகுதிக்கு எரிபொருள் ஏற்றி வந்த பவுசரே விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் எண்ணெய் ஏற்றிய பவுசருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் தெய்வாதீனாமாக தப்பியுள்ளனர். சும்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக லிசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உதயகுமார் அதிரடிப் பேச்சு…

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மொட்டு கட்சியால் ஒரு வட்டாரத்தையும் வெல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் மயில்வாகனம் உதயகுமார் இதனை தெரிவித்துள்ளார். அதேபோல், கிழட்டு யானை ஓடி ஒழியும். தொலைபேசியின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். திம்புள்ள பத்தனையில் நேற்று மாலை வட்டார வேட்பாளரை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் அவர் மேற்படி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மலையக தமிழர்

இலங்கைக்கான பிரான்சிய தூதுவர் ஜீன் பிரான்கொயிஸ் பேச்லட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி சந்தித்துள்ளார். இதன்போது கூட்டணி சார்பாக நுவரெலியா மாவட்ட எம்பி உதயகுமார் மற்றும் பிரான்சிய தூதரகம் சார்பாக நயன கணேசன் ஆகியோரும் உடன் இருந்துள்ளனர். பிரான்சிய தூதரகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு பற்றி மனோ கணேசன் எம்பி கூறியதாவது, இலங்கை அரசியல் பரப்பில் இந்திய வம்சாவளி மலையக தமிழ்  மக்கள் தொடர்பில் அறிவதில் தற்போது சர்வதேச சமூகம் பெரிதும் காட்ட தொடங்கி […]

30 வருடங்களுக்கு முன்பிருந்த நிலையில் மக்கள் தற்போது இல்லை

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், நீர் கட்டணத்தையும் அதிகரிக்க நேரிடும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தலவாக்கலையில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனை கூறினார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான  ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜீவன் தொண்டமான், மின் […]

கண்டி “Janaraja Perahera” பெரஹெரா

75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக நடத்தப்படும் கண்டி “ஜன ரஜ” பெரஹெரா (Janaraja Perahera’) இன்று (19) மாலை வீதி வலம் வரவுள்ளது. வீதி உலா மாலை 6.30 க்கு ஆரம்பமாகி தலதா வீதி, யட்டி கண்டி வீதி, ராஜா வீதி வழியாக பயணிக்க உள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க, மல்வத்து மற்றும் அஸ்கிரி மகா நாயக்க தேரர்களின் ஆலோசனையின் படி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேகளும், சதர மகா […]

ஜனாதிபதியின் நிலைப்பாடு

நாட்டின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும், நாட்டை அராஜகத்திற்குள் தள்ள இடமளிக்காமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  வலியுறுத்தினார். கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று (18) முற்பகல் நடைபெற்ற இலங்கை மற்றும் மாலைதீவுகளை உள்ளடக்கிய ரொட்டரி கழகத்தின், மாவட்ட இலக்கம் 3220 ஏற்பாடு செய்த 32 ஆவது ரொட்டரி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் விரைவில் வழமைக்குத் திரும்பும் என்று […]