CWC- ஜீவன்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச ;செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான்; இன்று (18) எட்டாம்பிடிய நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது நீர் வழங்கல் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து ஆராய்ந்தாக எமது செய்தியாளர் கூறினார். அத்துடன் அங்குள்ள ஊழியர்களின் அடிப்படை வசதிகள் குறித்தும் ;நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் கேட்டறிந்துள்ளார். லசந்த

காலநிலை நிதியுதவிக்கான 2023 திட்ட வரைபடத்தைத் தயாரிக்கும் பசுமை நிதிக் குழு

2023 ஆம் ஆண்டில் பசுமை நிதி திட்டங்களுக்கு நிதி திரட்ட, ஒரு வலுவான திட்ட வரைப்படத்தை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன தலைமையில் பசுமை நிதிக் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ருவான் விஜேவர்தன தலைமையில் நேற்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் இதற்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

அரசியல் அறிவை பெற்றுக் கொண்டு அதற்கேற்றவாறு இயங்காமல் தவிர்க்கும் போதுதான் மோசமான அறிவிலி ஆகிறான்

ஒருவன் தன் கல்வி அறிவை மேம்படுத்திக் கொள்ள எத்தனை பட்டங்களை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அனைத்தையும் தீர்மானிக்கின்ற அரசியல் அறிவை அவன் பெற்றுக் கொண்டு அதற்கேற்றவாறு இயங்காமல் தவிர்க்கும் போதுதான் மோசமான அறிவிலி ஆகிறான். அரசியல் நிலவரங்கள் குறித்து அவன் எதையும் கேட்காத போது, பேசாத போது அல்லது அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்டு கள நிலவரங்களை அறிந்து கொள்ளாத போது வெறும் புத்தகப் பூச்சியாகவும் அறிவிலியாகவும் பரிணாமம் பெறுகிறான். அரசியல் சாக்கடை என்றும் அதற்குள் […]

IMF- புதிய தகவல்

சீனாவின் கடன் மறுசீரமைப்பு ஆதரவு உத்தரவாதம் இல்லாமலே இலங்கைக்கான கடனை அனுமதிப்பது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலித்து வருவதாக வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுளளது. இதேவேளை, IMF நிதியத்தின் கடன் திட்டத்தை மார்ச் மாதத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், தற்போது குறைந்து வரும் பணவீக்கத்துக்கு ஏற்ப வங்கி வட்டி வீதத்தைக் குறைப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளது

தேர்தல் நடத்தப்பட வேண்டும், ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அதேவேளை, நாட்டுக்கும் வீட்டுக்கும் பயனுடையதாகவும் அமைய வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார். கண்டியில் இடப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக அவர் மேலும் பின்வருமாறு தெரிவித்தார். “உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளது. சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் அதிகார மோதலை ஏற்படுத்தி இருக்கின்றது. தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் மார்ச் மாதம் 9 […]

கொவிட் China

தமது நாடு கொவிட் – 19 வைரஸை தோற்கடித்துள்ளதாக கொவிட் உருவாகிய சீனா அறிவித்துள்ளது. கொவிட் 19 தொடர்பான துல்லியமான பிரச்சனைகளுக்கு மத்தியில். சீனா இதனை அறிவித்துள்ளது. கடந்த டிசம்பரில் கொவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு சீனா இறப்புகள் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கை சாதனையாக உயர்ந்துள்ளது. இருப்பினும், கொவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் கடந்த இரண்டு மாதங்களில் 80,000 கொவிட் நோயாளிகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரச அச்சகம் இணங்கியமைக்கு அமைய, உரிய தினத்தில் தபால் மூல வாக்குச்சீட்டுகளை அச்சிட்டு வழங்காமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடத்த […]

வன்முறை அரசியல் கலாச்சாரம் வேண்டாம் – ஜீவன்

“மலையக மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே, நெருக்கடியான காலகட்டத்தில் அமைச்சு பதவியை பொறுப்பேற்றேன். தற்போது கூட மலையக மக்களின் குரலாகவே அமைச்சரவையில் செயற்பட்டு வருகின்றேன். ”  என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். ” மலையகத்தில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தவே, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் பங்கேற்றேன். இதனை சிலர் விமர்சிக்கலாம். ஆனால் மக்களுக்காகவே என்பது அரசியல் […]

அஞ்சல் வாக்குச்சீட்டுகள்

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புப் பதிவை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 23, 24 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் இதுவரையில் அஞ்சல் வாக்குச்சீட்டுகள் வழங்கப்படாத காரணத்தினால் இவ்வாறு தபால் மூல வாக்களிப்புப் பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தபால் மூல வாக்களிப்பு தொடர்பான தினம் பின்னர் […]

IMF-கடன் திட்டம்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தை மார்ச் மாதத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், தற்போது குறைந்து வரும் பணவீக்கத்துக்கு ஏற்ப வங்கி வட்டி வீதத்தைக் குறைப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சிறிய மற்றும் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். எரிபொருள் விலை, மின் கட்டணம், […]