காட்டுத் தீ

வெலிமட எரனவெல பகுதியில் நேற்று பரவிய காட்டுத் தீ கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் ஓரளவு கட்டுப்பத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். பிரதேசத்தில் நிலவும் கடும் வெப்பம் காரணமான காட்டுத் தீ வேகமாக பரவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் தீ இன்றும் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறினார். தீயால்   அரச மற்றும் தனியார் காணிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.  

66% மின் கட்டண அதிகரிப்பிற்கு PUSL அனுமதி

இன்று (15) முதல் அமுலாகும் வகையில், 66% மின் கட்டண அதிகரிப்பிற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தவிர்ந்த ஏனைய 03 உறுப்பினர்களின் இணக்கப்பாட்டிற்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபைக்கு மேலதிகமாக 287 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டும் நோக்கில், அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்ட 66% மின் கட்டண அதிகரிப்பு யோசனை கடந்த மாதம் 02 ஆம் திகதி இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. […]

ஆர்ப்பாட்டங்களால் அரசாங்கம் எவரையும் பதவி நீக்கம் செய்யாது – ஜனாதிபதி

குறிப்பிட்ட சில அதிகாரிகளை நீக்கக் கோரி வேலை நிறுத்தம் நடப்பதற்காக நாம் யாரையும் தன்னிச்சையாக நீக்க மாட்டோம். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கென சில விதிமுறைகள் இருப்பதனால் அரசாங்கம் அவற்றை முறைப்படி பின்பற்றியே செயற்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு ட்ரேஸ் சிட்டியிலுள்ள இலங்கை தொழில்நுட்பக் கல்லூரியின் (SLTC) ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் நேற்று (15) காலை, நிர்வாகம் மற்றும் பொதுக் கொள்கைக்கான மையத்தை (C-GaPP) உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு […]

ஜேர்மன்-இலங்கை இருதரப்பு உறவு

ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் ராம்சோர் (Peter Ramsauer) நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை சந்தித்தார். ஜேர்மன்-இலங்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பீட்டர் ராம்சோர் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். பீட்டர் ராம்சரை மிகவும் அன்புடன் வரவேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான கடந்த கால உறவுகளை நினைவு கூர்ந்து கலந்துரையாடலை ஆரம்பித்தார். ஜேர்மன் அரசாங்கத்தின் அனுசரணையுடன் கராப்பிட்டிய […]

சிறு போகத்தில் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் TSP உரம் விநியோகிக்கப்படும்

வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக எதிர்வரும் போகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான TSP உரத்தை தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய பிரச்சினைகள் தொடர்பாக கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இக்கலந்துரையாடலில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, உணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் […]

எதிர்கால சந்ததியினருக்காக நீர்வளத்தை பாதுகாக்க வேண்டியது எம் அனைவரினதும் தலையாய கடமையாகும்

நீர் முகாமைத்துவம் தொடர்பில் தற்போது நிலவும் பிரச்சினைகளால், நீர் வீண்விரயமாவதுடன், நீர் மாசடைதலும் அதிகரித்துள்ளது. எனவே, எமது எதிர்கால சந்ததியினருக்காக நீர்வளத்தை பாதுகாக்க வேண்டியது எம் அனைவரினதும் தலையாய கடமையாகும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தேசிய நீர் கொள்கைத்திட்டமொன்றை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் மகாவலி அதிகார சபையில் அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த கலந்துரையாடலின் போது, நீர்வழங்கல் […]

விமர்சன அரசியல் தேவையில்லை – எம்.பி. ராமேஷ்வரன்

” 2018 இல் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் வெற்றி நடைபோட்டதுபோல, இம்முறையும் காங்கிரஸ் வெற்றிவாகை சூடும். ஏனெனில் அன்றும் இன்றும் என்றும் மக்கள் சக்தி எம்பக்கமே.”  – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் கொட்டகலை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஆரம்பக் கட்ட பிரச்சார கூட்டம் இறை வழிபாடுகளுடன் நேற்றைய தினம் (14.02.2023) கொட்டகலை பகுதியில் ஆரம்பித்து […]

சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த நான்கு சந்தேக நபர்கள் கைது

பொகவந்தலாவ பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் சுற்றித்திரிந்த சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுத்தையைக் கொன்று அதன் இறைச்சியை விற்பனை செய்து கொண்டிருந்த போது நான்கு சந்தேக நபர்களையும் கொல்லப்பட்ட சிறுத்தையின் உடலின் ஒரு பகுதியையும் பொகவந்தலாவ பொலிஸார் 14.02.2023 அன்று கைது செய்தனர். சந்தேகநபர்கள் பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தின் மேல் பகுதியில் வசிப்பவர்கள் என்பதுடன், அதனை அண்டிய சமனல இயற்கை சரணாலயத்தில் சுற்றித்திரியும் சிறுத்தைகள் […]

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் படுங்காயம்

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில்  மூவர் படுங்காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து 14.02.2023 அன்று இரவு இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை நகரத்தை நோக்கி பயணித்த போதே வீதியை விட்டு விலகி பாதுகாப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கடந்த ஜனவரி 20ம் திகதி 7 உயிர்களை காவுகொண்ட கோர விபத்து இடம்பெற்ற அதே இடத்திலேயே இந்த விபத்தும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது. இவ்விபத்து குறித்து […]

தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர்

இலங்கையில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பல நல்ல செய்திகள் விரைவில் அறிவிக்கப்படும் என  எதிர்பார்க்கப்படுவதாக தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் குப்புசாமி அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், 13 ஆவது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை ஜனாதிபதியை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய பிரதமரின் தனிப்பட்ட ஆர்வத்துடன் கூடிய பொறுப்பான திட்டமிடலால் மட்டுமே, இலங்கையில் வாழும் […]