பிரபலம் அல்லாத கடினமான தீர்மானங்களை எடுப்போம்”

பிரபலமான தீர்மானங்களால் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதால், நாட்டின் எதிர்காலத்திற்காக அனைத்து அரசியல் தலைவர்களும் பிரபலமற்ற ஆனாலும் நாட்டுக்கு சாதகமான கடினமான தீர்மானங்களை எடுப்பார்கள் என தான் நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். வரி விதிப்பு செய்யப்பட்டது நாட்டு மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை அறியாமல் அல்ல என்றும் நாட்டின் பொருளாதாரத்தை கொண்டு நடத்தும் நோக்கிலேயே அத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அதேபோல வெகு விரைவில் நாட்டு மக்களுக்கு நிவாரணத்தை வழங்க முடியுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். […]

ஜீவன் தொண்டமானின் பணிப்புரையின் கீழ் அதிரடியாக நீக்கம்

இராகலை, ஹைபொரஸ்ட் பகுதியில் வாழ்வாதாரத்துக்காக வீதி ஓரத்தில் மரக்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்த மலையக பெண்ணிடம் அடாவடித்தனமாகவும், அராஜகமாகவும் நடந்துகொண்ட மத்துரட்ட பெருந்தோட்ட யாக்கத்தின் நிர்வாகி ஒருவர் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பணிப்புரையின் கீழ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் கண்டிப்பான உத்தரவின் பிரகாரமே, மத்துரட்ட பெருந்தோட்ட யாக்கத்தால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் எழுத்துமூலம் மன்னிப்பு கோருவதற்கும் மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. மத்துரட்ட பெருந்தோட்ட […]

ஆர்ட் ஒப் ஶ்ரீலங்கா’ சித்திரக் கண்காட்சி (Photos)

75ஆவது தேசிய சுதந்திர தினத்தையொட்டி கொழும்பு 07 இல் அமைந்துள்ள கட்புல, அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் ஜே.டி.ஏ பெரோ அரங்கில் நடைபெற்று வரும், ‘ஆர்ட் ஒப் ஶ்ரீலங்கா’ எனும் சித்திரக் கண்காட்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (09) பிற்பகல் பார்வையிட்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘ஆர்ட் ஒப் ஶ்ரீலங்கா’ சித்திரக் கண்காட்சியை இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பொஜ் ஹார்ன்பொல் (Poj Harnpol) கடந்த 04 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து […]

பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜனாதிபதியை சந்தித்தார்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா (Sahir Shamshad Mirza) இன்று (10) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். நட்பு நாடுகள் என்ற வகையில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலுள்ள நீண்டகால நெருங்கிய உறவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா உள்ளிட்ட குழுவினருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார். இச்சந்திப்பைக் குறிக்கும் வகையில் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் […]

CWC

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்களுடன் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், யாழ்ப்பாணம் இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஆகியோர் யாழ் நூலகத்தை பார்வையிட்டதுடன், அங்குள்ள டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் உருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் யாழ்ப்பாணம் ஆளுநர் அலுவலகத்தில் மரியாதை நிமிர்த்தம் சந்திப்பொன்றும் இடம்பெற்றது

பௌத்தத்தை உலகுக்கு எடுத்துச் செல்ல அவசியமான அரச அனுசரணை வழங்கப்படும் – ஜனாதிபதி

தேரவாத பௌத்தத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்கவும் அதனை சர்வதேச மட்டத்தில் வியாபிக்கவும் அவசியமான அனைத்து அரச அனுசரணையையும் வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். “சிங்கள தம்மசதகனீப்பகரண” நூல் வெளியீட்டு விழா நேற்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். புத்தசாசன அமைச்சின் வழிகாட்டலின் கீழ் பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ள திரிபீடகச் சுருக்கத் தொகுப்புப் பேரவையின் 28ஆவது நூலாக ‘சிங்கள […]

அரசு அநாவசியமான செலவுகளை குறைக்க வேண்டும்

அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்குமாறுகோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் ராகலை நகரில் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போராட்டத்துக்கு மக்களும் ஆதரவு வழங்கினர். கறுப்பு கொடிகளை ஏந்தி, பதாதைகளையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அரசின் நியாயமற்ற வரிவிதிப்பு கொள்கைக்கும் எதிர்ப்பை வெளியிட்டனர். ” அரசு அநாவசியமான செலவுகளை குறைக்க வேண்டும், அடக்குமுறைகளை நிறுத்த வேண்டும்.” எனவும் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டனர். (அந்துவன்)

IFM – இலங்கைக்கு…

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட நிதியுதவி தொடர்பான தீர்மானமானது, கடன் நிவாரணம் தொடர்பாக இருதரப்பு கடன் வழங்குநர்கள் வழங்கும் உடன்படிக்கைகளை பொறுத்தே அமையும் என சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது. நீட்டிக்கப்பட்ட நிதி வசதி குறித்த பணியாளர் ஒப்பந்தம், கடனாளிகளிடமிருந்து தொடர்புடைய உடன்படிக்கைகள் பெறப்பட்டவுடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று நிதியம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு அத்தியாவசியமான நிதி வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என சர்வதேச நாணய […]

VS அதிரடி (வீடியோ)

ஐக்கிய மக்கள் சக்தியில் தான் வகித்த சகல பொறுப்புகளில் இருந்தும் விலக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் அந்த கட்சிக்கு அறிவித்துள்ளதாக அவர் ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார். “இன்று மடுல்சீமை நகரில் ஒரு கூட்டத்தை சஜித் தலைமையில் ஒழுங்கு செய்திருந்தோம். ஆனால் சுகயீனம் காரணமாக தான் வரவில்லை என அவர் தெரிவித்தார். ஆனால் வெளிமடையில் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுவிட்டு செல்வதை நான் கண்டேன். இதனால் எமது மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கட்சியில் […]

நலன்புரி நன்மைகள் சபையின் தரவுக் கணக்கெடுப்பு தொடர்பான மீளாய்வுக் கூட்டம்

நலன்புரி நன்மைகள் சபையின் தரவுக் கணக்கெடுப்பு தொடர்பான மீளாய்வுக் கூட்டம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களையும் குறைந்த வருமானம் பெறுபவர்களையும் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை விரைவாக வழங்குவதே இதன் நோக்கமாகும். நலன்புரி நன்மைகளை வழங்கும்போது வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். அதற்கு தகுதியானவர்களை அடையாளம் காண்பது சமூகப் பாதுகாப்பு நன்மைகள் […]