அரசாங்கத்தின் புதிய வருமான வரி முறைக்கு எதிராக தபால் ஊழியர்கள் அட்டனில் போராட்டம்

அரசாங்கத்தின் புதிய வருமான வரி முறைக்கு எதிராக தபால் ஊழியர்கள் கறுப்பு பட்டி அணிந்து தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெறப்பட்ட கடனுக்கான வட்டியை அதிகரிக்கக் கூடாது எனவும், வருமான வரியை உடனடியாக இரத்துச் செய்யுமாறும் கோரியும் அட்டன் பிரதேசத்திலுள்ள அனைத்து தபால் நிலைய ஊழியர்களும் தொழிற்சங்க பேதமின்றி அட்டன் தபால் நிலையத்திற்கு முன்பாக (09) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். . (09) காலை முதல் தபால் நிலைய ஊழியர்கள் கறுப்பு பட்டி அணிந்தும், கறுப்புக் கொடிகளால் […]

மர்மமான முறையில் உயிரிழந்த தாய் மற்றும் மகளின் சடலங்கள்

படுக்கை அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த தாய் மற்றும் மகளின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. கினிகத்தேனை- பேரகஹமுல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய தாயும் 30 வயதுடைய மகளுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த வீட்டிலிருந்து சில நாட்களாக எவரும் வெளியே வராமை மற்றும் அவர்கள் வசித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக பிரதேசவாசிகள் கினிகத்தேனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் குறித்த வீட்டை உடைத்துச் சென்று உள்ளே பார்த்த […]

தொழில் அமைச்சுக்கு ஜீவன் தொண்டமான் கோரிக்கை

தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வேலைசெய்யும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான பரிந்துரையை முன்வைக்கும்படி,  சம்பள நிர்ணய சபைக்கு பணிப்புரை விடுக்குமாறு தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம், கோரிக்கை விடுப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. பணவீக்கத்தால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச்சுமை அதிகரிப்புக்கமைய சம்பள உயர்வு வழங்குமாறு கோரப்படவுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் ஊடாக இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் உட்பட […]

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சகோதர சிங்கள மக்கள் அச்சம் கொள்ளவேண்டியதில்லை – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சகோதர சிங்கள மக்கள் அச்சம் கொள்ளவேண்டியதில்லை. மாகாணசபை முறைமை என்பது வடக்கு, கிழக்குக்கு மட்டும் உரித்தானது அல்ல. நாட்டில் ஏனையப் பகுதிகளில் உள்ள மக்களும் அந்த முறைமையின் ஊடாக சிறந்த சேவையைப் பெறலாம் – என்று இலங்கை தொழிலார் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அக்கிராசன உரையானது காலத்தின் கட்டாய தேவையாகும். அதிலுள்ள விடயங்களை அமுல்படுத்துவதற்கு காங்கிரஸ் முழு ஆதரவையும் வழங்கவும் […]

ஜனாதிபதி – திறைசேரி செயலாளருக்கு பணிப்புரை

அரச வருமான நிலைமை மேம்படும் வரை அரச சேவையைப் பேணுவதற்கு அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் திறைசேரி செயலாளருக்குவிக்ரமசிங்க, ப் பணிப்புரை விடுத்துள்ளார். முன்னர் மேற்கொள்ளப்பட்டது போன்று அரசாங்க நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்பு, மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் தடையாக இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் […]

சுமஷ்டி- கடுப்பானார் சி.வி

சுமஷ்டி முறையிலான ஆட்சி ஒன்றை பெற்ற பின்னரே பின் நோக்கி பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அங்ராசன உரையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறினார். ’13 ஆவது திருத்தம் நல்லதுதான் ஆனால் எமது பிரச்சினைகளுக்கு அது தீர்வாகாது. முன்னாள் வட மாகாண முதலமைச்சர் ன்ற ரீதியில் மத்திய அரசு எவ்வாறு எம்மை வேலை செய்ய முடியாதவாறு தடையாக இருந்தது என்பதை அறிவேன. 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது நல்லது. […]

ரணில் சொல்வதை எதிரணியில் இருந்தபடி வரவேற்கிறோம்

மலையக மக்களின் பல்வேறு பட்ட  பிரச்சினைகள் தொடர்பில் மலையக மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுக்ககளை நடத்த விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறி இருப்பதை நாம் எதிரணியில் இருந்தபடி வரவேற்கிறோம். நீண்டகாலமாக, இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகள் பற்றி நமது மக்கள் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனியாக பேச வேண்டும் என நான் வலியுறுத்தி வந்துள்ளேன். அதன்மூலம் இந்நாட்டின் முழுமையான குடிமக்களாக மலையக தமிழ் மக்களும் வாழும் நிலை ஏற்பட வேண்டும் என நாம், […]

பெருந்தோட்ட மக்கள் தொடர்பாகவும் நாம் விசேட கவனம் செலுத்துவோம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்டது. புதிய அமர்வின் ஆரம்ப நிகழ்வு காலை 9.30 அளவில் ஆரம்பமானதுடன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் வருகையே முதலில் இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகை காலை 9.40 அளவில் இடம்பெற்றது.. சபாநாயகர் ஜனாதிபதியை வரவேற்றார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை ஆற்றினார். “கடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் […]

மலையகத் தமிழர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு அமெரிக்காவின் பங்களிப்பும் அவசியம் – அமெரிக்க தூதுவரிடம் அமைச்சர் ஜீவன் கோரிக்கை

மலையகத் தமிழர்களின்  பொருளாதார மேம்பாட்டுக்கு அமெரிக்காவின் பங்களிப்பும் அவசியம். அதற்காக உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்  (Julie Chung) அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் நேற்று (07.02.2023) பேச்சு நடத்தினார். நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு மலையக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்த ஜீவன் தொண்டமான்,  மலையக […]

GGGI ஒப்பந்தம் (PhotoS)

இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை வளர்ச்சி அபிவிருத்தியை வலுவூட்டுதல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக, உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் (GGGI) இலங்கை அரசாங்கம் நேற்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இந்த ஒப்பந்தமானது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐ.நாவின் முன்னாள் செயலாளர் நாயகமும் பொதுச்சபையின் தலைவரும் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனச் சபையின் தலைவருமான பான் கி மூன் ஆகியோர் முன்னிலையில் இன்று (07) பிற்பகல் கைச்சாத்திடப்பட்டது. அரசாங்கமும் GGGIயும் பசுமை […]