லாஃப் கேஸ் நிறுவனம் சமையல் எரிவாயு விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.

லாஃப் கேஸ் நிறுவனம் (laugfs gas) சமையல் எரிவாயு விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி லாஃப் சமையல் எரிவாயு 12.5 கிலோ கிராமின் புதிய விலை 5,280 என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன், 5 கிலோ கிராம் லாஃப் கேஸ் சமையல் எரிவாயுவின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 2,112 ரூபாவாகும். மேலும் 2 […]

சீறி பாய்ந்தது ஓடிய காளைகள்

வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த கீழ்பள்ளிபட்டில் எருது விடும் விழா நடந்தது. மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் லட்சுமி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் விஜயபாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் எழிலரசி அருள், வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் உமா, வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, மண்டல துணை தாசில்தார் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணியம்பாடி வருவாய் ஆய்வாளர் சந்தியா வரவேற்றார். இதில் 194 காளைகள் பங்கேற்றன. விழா நடந்த வீதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் […]

சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடைபோட்டு வரும் இந்தியா

ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9-ம் தேதி தொடங்குகிறது. 2014-க்குப்பின் அனைத்து பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர்களை தொடர்ச்சியாக வென்று வரும் இந்தியா 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை வரலாற்றில் முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து சரித்திர சாதனையுடன் கோப்பைகளை வென்றது. அது போக 2004-க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு […]

நவம் மஹா பெரஹர ஒரு சுப அடையாளம் – ஜனாதிபதி

ஆகஸ்ட் மாதம் எசல பெரஹர நடைபெறும் காலம் நெருங்கும் போது நாட்டுக்கு பொருளாதார நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். கொழும்பு கங்காராமை விகாரையின் நவம் பெரஹரா நேற்று (05) இரவு ஆரம்பமானது. இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நவம் பெரஹரா விழாவை வருடந்தோறும் நடத்துவது நாட்டுக்கு கிடைத்த பாக்கியம் என தெரிவித்த ஜனாதிபதி, இக்கட்டான காலத்தை கடந்து செல்வதற்கு இது பெரும் […]

2009 மே கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டும்

இலங்கை வந்துள்ள முன்னாள் ஐநா செயலாளர் பாங்கி-மூன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கட்டாயம் சந்தித்து, தான் கடைசியாக போர் முடிந்த  சில நாட்களில் இலங்கை வந்து, தமிழினம் எதிர்கொண்ட போரழிவுகளை பார்த்து விட்டு, ஊர் திரும்பும் போது அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுகள் நடத்தி, இருவரும் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த கோருகிறேன். மே 24, 2009 அன்று வெளியிடப்பட்ட அந்த கூட்டறிக்கையில் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தான் தமிழ் கட்சிகளுடன் பேச்சு நடத்தி 13ஐ அமுல் செய்து, அதை மென்மேலும் மேம்படுத்த […]

இராமகிருஷ்ண மிஷன் சிவாநந்த நலன்புரி நிலையத்திற்கு கொட்டகலையில் அடிக்கல் நாட்டு வைக்கும் நிகழ்வு

இராமகிருஷ்ண மிஷன் சிவாநந்த நலன்புரி நிலையத்திற்கு கொட்டகலையில் அடிக்கல் நாட்டு வைக்கும் நிகழ்வு நேற்று (05.02.2023) ஸ்ரீமத்  கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ராஜேஸ்வரானந்த ஜீ மஹாராஜ் தலைமையில் கொட்டகலை ஹரிங்டன் தோட்டத்தில் நடைபெற்றது. ஸ்ரீ ஸ்ரீ ராமகிருஷணர் பூஜை, ஹோமம், ஆரதி, பஜனை, ஆகியன இடம்பெற்று அடிக்கல் நாட்டும் வைபவம் ஆரம்பமாகியது. இதன் போது பிரதம அதிதிகள் மேளதாள வாத்தியங்கள் இசை முழங்க கலை, கலாசார அம்சங்களுடன் வரவேட்கப்பட்டனர். குறித்த நிகழ்வின் போது இராமகிருஸ்ண மிஷனுக்கு ஸ்ரீமான் […]

ஜப்பான் நன்கொடை (Photos)

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பாவனைக்காக ஜப்பான் அரசாங்கம் 150 மோட்டார் சைக்கிள்கள், 74 வேன்கள் மற்றும் சிறிய பஸ் வண்டிகள், 115 சோதனைக் கருவிகள் ஆகியவற்றை நன்கொடையளித்துள்ளது. இவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டம் கையளிக்கும் அடையாள நிகழ்வு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மேற்படி வாகனங்களை நன்கொடையளிப்பதுடன் தொடர்புடைய ஆவணங்களை ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டக்கே சுன்சூக்கி (Takei Shunsuke) ஜனாதிபதியிடம் கையளித்தார். வாகனங்களின் நிலைமைக் குறித்து கேட்டறிந்து கொண்ட ஜனாதிபதி, வெளிவிவகார இராஜாங்க […]

ஹட்டன் டிக்கோயா முத்துமாரியம்மன் ஆலயத்தில் தைப்பூச திருவிழா

ஹட்டன் டிக்கோயா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மஹா தைப்பூச திருவிழா மிக கோலாகலமாக இடம்பெற்றது. இவ்விழாவில் சங்காபிஷேகம் தொடக்கம் பால்குட பவனி,உள்வீதி சப்பரம்,மகேஸ்வர பூஜை, தொடக்கம் பல பூஜைகள் மேளதாளம் முழங்க இடம்பெற்றது. இத்திருவிழாவில் டிக்கோயா உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. நீலமேகம் பிரசாந்த்

இந்தியா கையளித்த பேருந்துகள் (படங்கள்)

75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500 பேருந்துகளில், 50 பேருந்துகள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அடையாள ரீதியிலாக கையளிக்கப்பட்டன. இதற்கான ஆவணங்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே, ஜனாதிபதியிடம் கையளித்தார். நாடாக்களை வெட்டி இரண்டு பேருந்துகளை திறந்து வைத்த ஜனாதிபதி, இந்தியா கையளித்த பேருந்துகளைப் பார்வையிட்டார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக […]

மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும்

மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும். கட்சி, தொழிற்சங்க பேதங்களின்றி பயனாளிகளுக்கு உரிய வகையில் வீடுகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், சவாலை எதிர்கொள்ள வேண்டுமெனில் களத்தில் இறங்கியாக வேண்டும். நெருக்கடியை கண்டு பின்வாங்கி நிற்பது ஏற்புடையதல்ல. அதனால்தான் நெருக்கடியான சூழ்நிலையில் அமைச்சு பதவியை ஏற்றேன். மாறாக பதவி ஆசையில் […]