உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை நவீனமயமாக்கும் செயற்றிட்டம்

நூருல் ஹுதா உமர் கனேடிய உதவியின் கீழ் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தினால் அமுல்படுத்தப்படுகின்ற உள்ளூர் பெண் தலைமைத்துவத்தை வலுவூட்டுவதன் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை நவீனமயமாக்கும் செயற்றிட்டத்தின் கீழ் மட்டக்களப்பு- கோறளைப்பற்று பிரதேச சபைக்கான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இலங்கை உள்ளூராட்சி மன்றங்கள் சம்மேளன பிரதம நிறைவேற்று அதிகாரி ஹேமந்தி குணசேகர அவர்களின் ஆலோசனை, வழிகாட்டலின் கீழ், இலங்கை உள்ளுராட்சி மன்றங்கள் சம்மேளன நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம். வலித் அவர்களின் பங்கேற்புடன் பாசிக்குடா அமந்தா […]

“நம்ம ஏரியா உள்ளே வராதே” ஹக்கீம் சாய்ந்தமருதில் கால்வைக்க கூடாது : ஊர்கூடி உருவபொம்மை எரித்து போராட்டம் ! 

“ நூருல் ஹுதா உமர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதுக்கு வரக்கூடாது எனவும், தலைவர் அஷ்ரபின் நினைவு தினத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது எனவும் சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசளுக்கு முன்னால் ஜும்மா தொழுகையை தொடர்ந்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாளை (16) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரபின் 23 வது நினைவு நாள் சாய்ந்தமருதில் தேசிய நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த […]

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற விவாதம் !எதிர்வரும் 21 -22 திகதிகளில்

ஈல்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்புத் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 21, 22ஆம் திகதிகளில் பாரளுமன்றத்தில் நடைப்பெறுகிறது . சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்  நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

மலையக மக்களின் நலன்சார் தேவைகள் குறித்து ஐ.நா பிரதிநிதியுடன் அமைச்சர் ஜீவன் பேச்சு!

  (க.கிஷாந்தன்) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் அழைப்பையேற்று, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ட்ரூ ப்ரான்ஸ், மலையகத்துக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி, அமைச்சர் ஜீவன் தொண்டமானை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவானில் இன்று (14.09.2023) சந்தித்து பேச்சு நடத்தினார். இ.தொ.காவின் சர்வதேச விவகார பொறுப்பாளரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான […]

அரசால் தடைவிதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்த வேண்டாம்! ஆளுநர் செந்தில்

நூருல் ஹுதா உமர் திருகோணமலையில் நேற்று மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களை இன்று ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தனர். இந்நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பாக மீனவ சங்கத்தினருடனும், கடற்படையினர், கரையோர பாதுகாப்பு படையினர், பொலிஸ் அதிகாரிகள்,அதிரடி படையினர் ஆகியோருடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த கூடாது […]

சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களின் நிதியத்தையும் கொள்ளையடிக்க அரசாங்கம் திட்டம்!

  நாட்டின் தேயிலை கைத்தொழில் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன் தற்போதைய ஜனாதிபதிக்கு தேயிலை கைத்தொழிலை அபிவிருத்தி செய்யும் திட்டம் எதுவும் இல்லை எனவும் இலங்கையில் தேயிலை கைத்தொழில் இன்னும் சிறிது காலத்தில் இல்லாது போகலாம் என்றும் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா இன்று தெரிவித்தார். சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் பல பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும்,சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் 2500 ரூபாவிற்கு உரத்தை பெற்று வந்ததாகவும் தற்போது உரம் 11,500 முதல் […]

கல்வி இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சி அடைய முடியாது! தம்மிக பெரேரா தெரிவிப்பு!

எம். நாசீர் கல்வி இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சி அடைய முடியாது” என்று -DP கல்வி நிலையத்தின் தலைவர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார். ‘டி.பி.கல்வி நிலையம் மற்றும் தொழிநுட்ப வளாகத்தின் 60 ஆவது கிளை கண்டி மாவட்டத்தின் வல்கம் பிரிவிலுள்ள புசெல்லாவ ஸ்ரீ மணிந்தாராம விகாரையில் டிபி கல்வி நிலையத்தின் தலைவர் தம்மிக பெரேராவினால் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இதன்போதே டிபி கல்வி நிலையத்தின் தலைவர் தம்மிக பெரேரா […]

செனல் 4 காணொளி பற்றிய உள்ளக விசாரணை திருப்தியளிக்காது – திகாம்பரம் MP

  செனல் 4 வெளியிட்ட காணொளி தொடர்பில் உள்ளக விசாரணை திருப்தியளிக்கும் வகையில் அமையாது என பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் எமது நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் என்பது பல அப்பாவி உயிர்களை காவுகொண்ட கசப்பான சம்பவம். இதன் பின்னணியில் உள்ளவர்களுக்கும் சூத்திரதாரிகளுக்கும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க நாம் வலியுறுத்தி வந்துள்ளோம். தற்போது செனல் 4 காணொளியினூடாக பல விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதனை முழுமையாக உண்மைதன்மையற்றது என மறுத்துவிட முடியாது. இது தொடர்பில் […]

திருக்கேதீஸ்வர மனித புதைகுழி மாதிரி எச்சங்கள் பரிசோதனைக்கு விலைமனு கோரப்பட்டபின் அனுப்பப்படும்

(வாஸ் கூஞ்ஞ) மன்னார் திருக்கேதீஸ்வர மனித புதைக்குழியில் அகழ்வு செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்ட மாதிரிகள் அமெரிக்கா புலோரிடா நிறுவனத்துக்கு காபன் பரிசோதனைக்காக அனுப்புவதற்கான விலைமனு கோரல் இன்னும் நிறைவு பெறாது இருப்பதால் இது பூர்த்தியானதும் நடவடிக்கை எடுக்கப்படும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக இவ் வழக்கில் முன்னிலையாகி வரும் சிரேஷ்ட சட்டத்தரனி; வீ.எஸ்.நிரஞ்சன் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார். திருக்கேதீஸ்வர மனித புதைகுழி வழக்கு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (13) மன்னார் மாவட்ட […]

மட்டக்களப்பு சிறையிலிருந்து 40 கைதிகள் விடுதலை!!

  சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் நேற்று (13) மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 1 பெண் உட்பட 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் ஆலோசனைக்கமைவாக இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜெயிலர் ஏ.பீ.பானுக தயந்த சில்வா உட்பட பலரும் கலந்து கொண்டனர். சிறு குற்றம் புரிந்த தண்டணைப்பணம் செலுத்தாத கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. DMU