75ஆவது சுதந்திர தினம்

இலங்கை திருநாட்டின 75ஆவது சுதந்திர தினம் பெரும் பெருமிதத்துடன் இன்று கொண்டாடப்படுகின்றது. சுதந்திர தின பிரதான நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெறுகின்றது. ஜனாதிபதி நிகழ்வுகள் நடைபெறும் இடத்திற்கு வருகைதந்ததுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. சுதந்திரதினத்தை முன்னிட்டு காலி முகத்திடலுக்கு பிரவேசிக்கும் பிரதான வீதிகள் மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். அதேபோல் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படையினரின் விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

கரு ஜயசூரியக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ கௌரவ விருது

முன்னாள் சபாநாயகரும் நன்மதிப்பிற்குரிய அரசியல்வாதியுமான கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ கௌரவ விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தலைமையில் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கரு ஜயசூரிய தேசத்திற்கு ஆற்றிய, சிறந்த சேவையைப் பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் கரு ஜயசூரிய அவர்களுக்கு பதக்கம் அணிவித்து விருது வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வின் போது ‘கரு ஜயசூரியவின் பெருமைமிக்க வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகள்’ எனும் […]

IMF – China

IMFடம் இருந்து இலங்கை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ள கடன் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க தயார் என சீனா மீண்டும் தெரிவித்துள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாஓ நின்க் இதனை தெரிவித்துள்ளார். அண்மையில் அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது அவர் இலங்கை விடயத்தில் சீனா தலையீடு செய்வதை நிறுத்தி, ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில்அண்மையில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் சீன […]

பைடன் வாழ்த்து

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் விஸ்தரிக்கவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இலங்கை மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தவாறு அமெரிக்க ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்த , அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உப இராஜாங்கச் […]

திரைப்பட இயக்குநர் விஸ்வநாத் மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92). வயது மூப்பால் கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார். ஐதராபாத் இல்லத்தில் கே.விஸ்வநாத் நேற்று நள்ளிரவில் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல திரைப்பட இயக்குநர் விஸ்வநாத் மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மகா கலைஞர் விஸ்வநாத் மறைவு முகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது என […]

பழம்பெரும் இயக்குனர் கே.விஸ்வநாத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92). வயது மூப்பால் கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார். ஐதராபாத் இல்லத்தில் கே.விஸ்வநாத் நேற்று நள்ளிரவில் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பழம்பெரும் இயக்குனர் கே.விஸ்வநாத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இயக்குநர் கே.விஸ்வநாத்தின் மறைவு வருத்தமளிக்கிறது. சினிமா உலகில் […]

சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் நாம் அடைந்தவற்றை விட இழந்தவையே அதிகம். அவ்வாறு இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில் பாரிய பங்கை மீண்டும் பெறுவதற்கு தேவையான உத்திகளை வகுப்பதே இந்த ஆண்டு நமது முதன்மை நோக்கமாகும். அதற்கான புதிய பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்த திட்டத்தை நாட்டில் தற்போது முன்வைத்துள்ளோம். பெருமைமிகு தேசமாக இருந்த இலங்கையர்களின், கடந்த கால பலத்தை மீண்டும் […]

தேர்தலுக்கு இடையூறு ஏற்படாது

மீண்டெழும் செலவுகளை 6 வீதத்தால் குறைத்து வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இடையூறு ஏற்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான செலவை குறைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா கூறினார். ஏதேனுமொரு வகையில் திறைசேரியிடமிருந்து கோரப்பட்டுள்ள நிதி கிடைக்காமல் போகும் பட்சத்தில், அது பிரச்சினையை ஏற்படுத்தும் என அவர் கூறினார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ள […]

டிஜிட்டல் தாராசு

பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும், பொகவந்தலாவ மேல்பிரிவு தோட்ட பகுதியில் தேயிலை கொழுந்து அளவீடு செய்யும் டிஜிட்டல் தாராசு, அதிகாரிகளால் நேற்று (02) பறிமுதல் செய்யப்பட்டது. நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமையவே மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் அதிகாரிகளால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது கைப்பற்றப்பட்ட பச்சை தேயிலை கொழுந்து அளவீடு் செய்யப்படும் டிஜிட்டல் தாராசு, மூன்று ஆண்டுகளாக முத்திரை பதிக்கப்படாமல் காணப்பட்டுள்ளது. இதனால் பொகவந்தலாவ தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக சட்ட […]

தந்தை பொல்லால் தாக்கி கொலை

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதர்செட் (பூப்பனை மேல் பிரிவு) தோட்டத்தின் இலக்கம் 26 கங்காணி லயம் என அழைக்கப்படும் தொடர் லயக்குடியிருப்பில் மூத்த மகனால்  தந்தை பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை சம்பவத்தில் மூன்று அண் பிள்ளைகளின் தந்தையான குமாரவேல் தியாகபிரகாஸ் (வயது 45) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவத்தில் தனது தந்தையை தாக்கியதாக பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கிய மூத்த மகன் கந்தப்பளை பொலிஸாரால் கைதும்  செய்யப்பட்டுள்ளார். அத்தோடு, அயல் வீட்டார் […]