கடல் கொந்தளிப்பு! கரை திரும்ப முடியா தலைமன்னார் மீனவர் இருவர் கச்சதீவில் தஞ்சம்!

(வாஸ் கூஞ்ஞ)தலைமன்னாரிலிருந்து மீன்பிடியில் ஈடுபடுவதற்காக ஒரு படகில் சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பவில்லை. இவர்களைத் தேடிச் சென்ற படகுகளில் இரண்டு கடல் கொந்தளிப்பு மற்றும் கடும் காற்றின் காரணமாக கச்சத்தீவல் தரித்து நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரிய வருவதாவது செவ்வாய் கிழமை (12) மாலை 07.30 மணியளவில் தலைமன்னார் கிராமம் கடற்கரையிலிருந்து வட கடலில் இரு மீனவர்கள் ஒரு படகில் வலிச்சல் மூலம் மீன்பிடிக்காகச் சென்றுள்ளனர். ஆனால் இவர்கள் வழமையாக கரை திரும்பும் நேரத்தில் […]

அரசியல், சமூகப் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்த துணிவுமிக்க மூத்த ஊடகவியலாளர் சலீம்! அவரது 75 அகவையை வாழ்த்தும்! சிரேஷ்ட ஊடகவியலாளர் தனபாலசிங்கம்

மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் அவர்களின் வாழ்த்து செய்தி அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக பிராந்திய செய்தியாளர்களாக பணியாற்றிவருபவர்கள் என்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒரு இன்று  சிலரே இருக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் அதுவும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் அத்தகைய நீண்டகால அனுபவமுடைய பத்திரிகையாளராக ஏ.எல்.எம். சலீம் அவர்களை குறிப்பிட முடியும்.தொடர்ந்தும் துடிப்புடன் பணியாற்றிவரும் அவர் இன்று 75 வது அகவையில் பிரவேசிக்கிறார். அவரை  ஆரோக்கியத்துடன் நீடூழி வாழவும் ஊடகத்துறைக்கு மேலும் பயனுறுதியுடைய  பங்களிப்பைச் செய்யவும் வாழ்த்துவோம்.நிந்தவூரைச் […]

அட்டன் கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு

(க.கிஷாந்தன்) அட்டன் கொழும்பு பிரதான வீதியில் அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அவிசாவளை கிரிவன்தல பகுதியில் இன்று (13.09.2023) இரவு 7.30 மணியளவில் பாரிய மரம் ஒன்று பிரதான வீதியில் விழுந்துள்ளமையினால் அவ்வீதியினுடான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த மரம் அவ்வீதியினூடாக பயணித்த முச்சக்கர வண்டியொன்றின் மீதும் ஸ்கூட்டி மோட்டர் சைக்கிள் ஒன்றின் மீதும் முறிந்து விழுந்துள்ளது.   இதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும், ஸ்கூட்டி மோட்டர் சைக்கிளில் பயணித்த ஒருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மரத்தை அகற்றும் […]

மேற்கு வங்காள முதல்வர் மம்தாவை டுபாய் விமான நிலையத்தில் சந்தித்த ஜனாதிபதி ரணில்!

இலங்கை ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க கியூபாவிற்கு உத்தியோக பயணம் மேற்கொண்டுள்ளார். டுபாய் விமான நிலையத்தில் மாற்று விமானத்திற்காக காத்திருந்த ஜனாதிபதி ரணில்  அதிதிகள் தங்கும அறையில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தார். அந்நேரம் அதே இடத்திற்கு வந்திருந்த மேற்கு வங்காள முதல்வர் மம்தா பனர்ஜியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மம்தா பானர்ஜியிடம், “எதிர்க்கட்சி கூட்டணிக்கு (இந்தியா) தலைமை வகிக்க போகிறீர்களா” என்று கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த மம்தா, “இது மக்களை சார்ந்தது தான். அவர்கள் […]

வவுனியா பல்கலைக் கழக மாணவர் வரவேற்பு பதாதையில் தமிழ் மொழி புறக்கணிப்பு

  வவுனியா பல்கலைக் கழகத்தின் மாணவர் வரவேற்பு பதாதையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. வவுனியா பல்கலைக் கழகத்தில் 2021 (22) ஆம் வருடத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி வவுனியா பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ள பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கை வவுனியா பல்கலைக் கழகத்தில் நேற்று (12.09) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த மாணவர்களை வரவேற்கும் முகமாக பல்கலைக்கழக விடுதி மற்றும் அதனுடன் இணைந்த பகுதியில் வரவேற்பு பதாதைகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. குறித்த பதாதையில் சிங்கள […]

காத்தான்குடியில் 17ம் திகதி வரை ஸவுதியின் இலவச கண் சத்திர சிகிச்சை முகாம்

  மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் நிவாரண, மனிதநேய உதவிகளுக்கான மையத்தின் ஏற்பாட்டில் ஸவுதி தமாம் சர்வதேச கண் பார்வை அமைப்பின் உதவியுடன் இலங்கையில் கண் பார்வைக்குறைபாட்டு நோயினைக் குறைப்பதற்கான ஸவுதியின் ‘அந்நூர்’ இலவசத்திட்டம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகின்றது. எதிர்வரும் 17ம் திகதி வரை தொடரவுள்ள இச்சேவையில் இன, மத வேறுபாடின்றி அனைவரும் பயனடையும் வகையில் மிகவும் உயர்ரக சேவை வழங்கப்படுகின்றது. இம்மருத்துவமுகாமில் சுமார் 500 சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. […]

நோர்வூட், சென்ஜோன் டிலரியில் 50 அடி பள்ளத்தில் புரண்டு விழ்ந்த ஆட்டோ ! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயம்!

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட், சென்ஜோன் டிலரி பகுதியில் ஆட்டோவொன்று வீதியை வி்ட்டு விலகி ஐம்பது அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். இன்று (13) மதியம் 12.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவ, மோரா தோட்டபகுதியில் இருந்து, ஹட்டனுக்கு வந்துகொண்டிருந்த ஆட்டோவே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆட்டோ சாரதி, அவரது மனைவி மற்றும் ஒன்றரை வயது குழந்தை ஆகியோர் ஆட்டோவில் பயணித்துள்ளனர், ஆட்டோ சாரதிக்கு தலைப்பகுதியில் பலத்த […]

உன்னதமான ஊடகவியலாளர் ஏ.எல். எம் சலீம்! 75 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!

கிழக்கிழங்கையினைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரும் கிழக்கு இலங்கை செய்திளார் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம் 14.09.2023 அன்று தமது 75 ஆவது அகவையில் கால்பதிக்கின்றார். அவருக்கு அண்ணாச்சி செய்தி ஊடாக வாழ்த்துக்கள் இதனையொட்டி இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் துறையின் சிரேஷ் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி உன்னதமான ஊடகவியலாளர் ஏ.எல். எம் சலீம் (றமீஸ் அப்துல்லா தென்கிழக்கு பல்கலைக்கழகம்) நிந்தவூர் நிருபர்  ஏ.எல். எம் சலீம் என்று அறியப்பட்ட பத்திரிகையாளனுக்கு […]

தகுதியான தொண்டர் ஆசிரியர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் – அமைச்சர் டக்ளஸ் உறுதி

  வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான கல்வி அமைச்சுக்களினால் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.   வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிகள் இ்ன்று(13.09.2023) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பொன்னாடை போர்த்தி நன்றியை தெரிவித்த நிலையிலேயே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர்களாக சேவையாற்றுகின்றவர்களுக்கு, நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் […]

பெருந்தோட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக சகல தரப்பினரையும் அழைத்து உடனடியாக பேசுங்கள்! ஜனாதிபதிக்கு மனோ MP அவசர கடிதம்

  இரத்தினபுரி மாவட்ட காவத்தை பெருந்தோட்ட நிறுவன வெள்ளந்துரை தோட்டம், இதற்கு முன் மாத்தளை மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் முடிவுக்கு வரவில்லை. இவை தொடர்கின்றன. இரத்தினபுரி, மாவட்ட செயலாளர் வசந்த குணரத்ன, “பெருந்தோட்டங்களுக்கு உள்ளே செயற்பட முடியவில்லை. தயவு செய்து அரசியல் உயர் மட்டத்தில் பேசி நடைமுறை அதிகாரத்தை பெற்றுத்தாருங்கள்” என என்னிடம் கோரினார். பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண “இந்த கம்பனிகாரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை” என்று ஜனாதிபதியிடம் முறையிடும்படி என்னிடம் கூறினார். இவை தொடர்பில் […]