கோட்டை , மருதானை ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், தேவை ஏற்பட்டால் ஏனைய நிலையங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்று (13) காலை சுமார் 40 அலுவலக ரயில்களை இயக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. கொழும்பு கோட்டைக்கு 15 காலை ரயில் பயணங்களும், புத்தளம் மார்க்கத்தில் இருந்து கொழும்புக்கு காலை 04 ரயில் பயணங்களும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. களனிவெளியில் இருந்து கொழும்பு கோட்டை வரை […]

214 மில்லியன் ரூபா நிகர இலாபம்! களுபோவிட்டியான தேயிலை கம்பனிக்கு கோப் குழு பாராட்டு! தொழிலாளர்களோ வெத்து வேட்டு!

களுபோவிட்டியான தேயிலை தொழிற்சாலை நிறுவனமானது   கடந்த 2022 இல் 2 பில்லியன் ரூபாய் வருமானத்தை பெற்று இருக்கிறது. இதில் வரி போக நிகர இலாபமாக 214 மில்லியன் ரூபாயை தனதாக்கி கொண்டுள்ளது. நீண்ட நாட்களின் பின்னர் இப்படியொரு நிறுவனத்தை சந்திக்கக் கிடைத்துள்ளது – கோப் குழுவின் தலைவர்தெரிவத்துள்ளதுடன் கோப் குழு பாரட்டியும் இருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர்  ரஞ்சித் பண்டார தலைமையில் 2023.09.08ஆம் திகதி கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) களுபோவிட்டியான […]

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரியை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம் – பாரத் அருள்சாமி

(க.கிஷாந்தன்) ” மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரியை வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.”  – என்று பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும், இ.தொ.காவின் உப தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார். அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்பட்டுவரும் இத்திட்டத்தின் பரீட்சார்த்த நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது எனவும் அவர் கூறினார். அட்டனில் (12.09.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் […]

கஹவத்த சம்பவத்தை வைத்துக் கொண்டு நாம் அரசியல் நடத்த முற்படவில்லை – அமைச்சர் ஜீவன் அறிக்கை

   ( நூரளை பி. எஸ். மணியம்)   “கஹவத்த சம்பவத்தை வைத்துக் கொண்டு நாம் அரசியல் நடத்த முற்படவில்லை. மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம்” – அமைச்சர் ஜீவன் தொண்டமான்“ மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அனைத்து மலையக அரசியல் வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாமும் இருக்கின்றோம்.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான […]

மருந்துகளின் தரத்தை குறைக்காதே ! பதுளையில் போராட்டம்

ராமு தனராஜா அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (12) பதுளை போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். அரசாங்கத்தின் தற்போதைய வரிக் கொள்கைகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிறுவுதல், மருந்துக்களின் விலை உயர்வு, மருந்துகளின் தரம் குறைவு மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமு தனராஜா

ஆஸாத் மௌலானா மீது பெண்ணொருவர் ஏமாற்றுத்திருமண வழக்கு!

  (பாறுக் ஷிஹான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செனல் 4 ல்   கருத்துக்களைத் தெரிவித்த  ஆஸாத் மௌலானா மீது பெண்ணொருவர் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து மோசடியான முறையில் தன்னைத்திருமணம் செய்து ஏமாற்றியதாக கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்துள்ளார். இம்முறைப்பாட்டிற்கமைய இன்று (12) கல்முனை நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் குறித்த பெண் தெரிவித்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டு மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு […]

போராட்டம் காரணமாக தையிட்டி காணி அளவீடு தற்காலிகமாக இடைநிறுத்தம் ! கஜேந்திரன் MP

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு காணி அளவீடு செய்து கையகப்படுத்துகின்ற நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட அளவீட்டு நடவடிக்கைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் காரணமாக அளவீட்டு நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் கூறினார். காணி உரிமையாளர்கள் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பாராளுமன்ற உறுப்பினரான எஸ் ஸ்ரீதரன்  என ஏராளமானோர் தங்களது  எதிர்ப்பை வெளியிட்டு இருந்தனர்.

மாத்தறையில் இருந்து புதிய அங்கத்தவர்களை சேர்க்க போகும் ஐக்கிய மக்கள் சக்தி! செப்16 ஆரம்பம்

கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் புதிய வேலைத்திட்டதினை ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் மாத்தறையிலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற இன்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்தார். இன்று நாட்டின் சகல துறைகளும் சரிந்துபோயுள்ளன.பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு நாட்டின் பெருன்பான்மையினர் பட்டினியில் இருக்கின்றனர்.மக்கள் வாழ்வதற்கான போராட்டதை முன்னெடுத்துள்ளனர்.சுகாதாரத்துறை முற்றிலுமாக சரிந்து விட்டது.இதற்கான காரணங்களை நாம் பாராளுமன்றத்தில் முன்வைத்தோம்.நாட்டு […]

யாழ் மாவட்டத்தில் போதைப்பொருளை தடுக்க குழு! உணர்வு பூர்வமாகசெயற்படுவோம் – அமைச்சர் டக்ளஸ்

  யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை மற்றும் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட மட்டத்திலான குழு ஒன்றினை அமைத்து இணைந்த நடவடிக்கையினை மேற்கொள்ளவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(12.09.2023) நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.   அரசாங்க அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், பொலிஸார், மற்றும் பாதுகாப்பு தரப்பினர் உள்ளடக்கப்பட்டுள்ள குறித்த குழுவின் ஊடாக தகவல்களை பரிமாறி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாணத்தில் புனர்வாழ்வு நிலையம் அமைப்பது […]

800′ படத்திலிருந்து ‘தோட்டக்காட்டான்’ வசனம் நீக்கம்!

உலக சாதனை பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமான ‘800’ இல் இருந்து ‘தோட்டக்காட்டான்’ என்ற வசனத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அத்திரைப்படத்தின் இயக்குநரான எம்.எஸ்.ஶ்ரீபதி தெரிவித்துள்ளார் என பிரபல ஊடகவியலாளர் சனத் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் […]