சனல் 4 விவகாரம் குறித்து விசாரணை குழுவுடன் மேலதிகமாக புலான்ய்வு பிரிவும் விசாரிக்க வேண்டும்

நூருல் ஹுதா உமர்நாட்டை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல் ஆட்சி மாற்றத்தை இலக்குவைத்து நடத்தப்பட்டதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் செயலாளராக இருந்த ஆசாத் மௌலானா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள கருத்தினால் மக்கள் பல்வேறு சந்தேகங்களுடன் இப்போது இருக்கிறார்கள். மக்கள் பிரதிநிதி என்றவகையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான ஆசாத் மௌலானாவின் ஊடக வெளிப்படுதலை அடிப்படையாக கொண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகளை கொண்டு ஜனாதிபதி நியமிக்கவுள்ள விசாரணைக்குழுவுக்கு மேலதிகமாக புலனாய்வு பிரிவின் குழுவொன்றும் இந்த விசாரணைக்காக நியமிக்கப்பட வேண்டும் என்று […]

பம்பரகந்த நீர்வீழ்ச்சி பகுதியில் காணமால் போன புதுமண தம்பதிகள் GPS தொழிநுட்பம் ஊடாக பொலிஸார் மீட்பு!

ராமு தனராஜா ஹல்துமுல்லை பம்பரகந்த யலதென்ன நீர்வீழ்ச்சிப் பகுதியின் காட்டுப்பகுதியில் 02 நாட்களாக காணாமல் போயிருந்த தம்பதி நேற்று (11) பிற்பகல் ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தின் மூலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காட்டுப்பகுதியில் காணாமல் போயிருந்த நிலையில், கருவலகஸ்வெவ நெலும்வெவ நவோத்யா மதுரங்க (24) மற்றும் தம்புத்தேகம செவ்வந்தி சந்திபனி (22) ஆகிய புதுமணத் தம்பதிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த நவோத்யா மதுரங்க, எங்களுக்கு திருமணமாகி மூன்று மாதங்களே ஆகிறது. கடந்த 8 திகதி […]

சண்டியரை கழிவறைக்கு அழைத்து சென்ற கான்ஸ்டபிள் மாயம்! கண்டுபிடிக்க உதவுங்கள் பொலிஸ் அறிவிப்பு

குற்றப்புலனாய்வு திணைக்கள வளாகத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஹரக் கட்டாவை கழிவறைக்கு அழைத்துச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் தற்போது காணாமல் போயுள்ளார். காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிளின் புகைப்படம் தற்போது பொலிஸ் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, கீழே உள்ள புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 071-85917774 அல்லது 0718594929 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறது. கழிவறைக்கு சென்ற “ஹரக்கட்டா” தனது கைகளுக்கு கைவிலங்கு போடப்பட்டுள்ளது போன்று நடித்தவாறு […]

கேகாலை -,அவிசாவளை பிரதான வீதியில் பஸ் விபத்து 15 பேர் காயம் அதில் நால்வரின் நிலைமை மோசம்!

செய்தி – அவிசாவளை நிருபர் கேகாலை – அவிசாவளை பிரதான வீதியில் கன்னந்தொட்ட பகுதியில் இன்று மாலை பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.   வவுனியாவில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் எம்பிலிப்பிட்டியில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் நால்வர் படுகாயங்களுடனும் 11 பேர் சிறுகாயங்களுடனும் கரவனல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.     வவுனியாவில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி புறப்பட்ட பஸ் லொறியொன்றை […]

ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை அவசியம்!

  (எஸ்.அஷ்ரப்கான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றினை வலியுறுத்தி நாடு பூராகவும் நடைபயணமொன்றினை மேற்கொள்வதற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகள் முன்வர வேண்டுமென கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார். ஏறாவூர் பிரதேச இமாம்கள், முஅத்தீன்கள் மற்றும் ஆலிம்களுக்கு உலருணவுப்பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (10) ஏறாவூர் முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கௌரவ அதிதியாகக்கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த […]

ஐ.நாவின் சகல பரிந்துரைகளையும் நிராகரித்த இலங்கை! நம்பகதன்மையற்ற ஆணை என தெரிவிப்பு

இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் குறித்த விடயத்தில் கடைபிடிக்கும் மெதுவான போக்கு குறித்து ஐ.நா உயர்மட்ட மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய கடற்பாடு இலங்கைக்கு அதிகரித்துள்ளது என ஐக்கிய நாடுகளின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடா சீவ் கூறுகிறார். பேரவைமின் 54 மாநட்டில் இன்று அலர் பேசும் போதே இதனை சுட்டிக்காட்டினார். "Truth seeking alone would not be sufficient. " […]

கொக்குத்தொடுவாய் மனித படுகொலை குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் – கஜேந்திரகுமார் MP வேண்டுகோள்.

  கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வை நேரடியாக காணொளிப்பதிவு செய்ய அனுமதி மமறுக்கப்பட்டுள்ளாகவும் உள்ளக விசாரணை நம்பிக்கை தராது  என்றும் சர்வதேச விசாரணை வேண்டும் என பாரளுமன்ற உறுப்பினரான  கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள்  ஐந்தாவது நாளாக இன்று (11) இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாரளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர்  குறித்த பகுதிக்கு சென்று அகழ்வுப் பணிகளை […]

சாய்ந்தமருதுவில் தேவையுடைய பயனாளிகளுக்கு வளர்ப்பு ஆடுகள் வழங்கி வைப்பு!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் கீழ் வசிக்கும் தேவையுடைய பயனாளிகளுக்கு விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வாழ்வாதார உதவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள சாய்ந்தமருது அரச கால்நடை வைத்திய காரியாலயத்தில் வைத்து வளர்ப்பு ஆடுகள் இன்று (11) சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சாய்ந்தமருது அரச கால்நடை வைத்திய அதிகாரி, பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட்,  கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, […]

ஆசிரியர் சு.தவச்செல்வனின் “ஆவேசம்”, ” மலையக சமூகத்தின் இலக்கியம்” நூல்களின் வெளியீட்டு விழா!

(அஷ்ரப் ஏ சமத்) மலையக மகளிர் மன்ற அனுசரணையில் ஆசிரியர் சு.தவச்செல்வனின் இரு நூல்கள் ஆவேசம் மற்றைய நூலான .மலையக சமூகத்தின் இலக்கியமும் என்ற நூல்கள் அறிமுக விழா ஞயிற்றுக்கிழமை 10 ல் உள்ள கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் சிரேஸ்ட சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக – சண்முகப்பிரியா கார்த்திக் (தலைவி எஸ்கே.எம் வணிக குழுமம்) நுாலின் முதல் பிரதியை – .இலட்சுமணன் வேலு (கணக்காளர் வரி […]

ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் மாதாவின் சொரூபத்தில் இரத்த கண்ணீர் கசியும் அதிசயம்! பெருந்திரளான பக்தர்கள் தரிசனம்

மலைவாஞ்ஞன் ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள மாதா சிலையில் கண்களில் இரத்தச் கசியும் அதியசயம் நிகழ்;ந்துள்ளது.இதனை அறிந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஹடட்டன் திருச்சிலுவை ஆலயத்திற்கு வருகை தந்து மாதா சிலையினை தரிசித்து இரவு பகலாக வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த மாதா சிலை ஹட்டன் குடாகம பகுதியில் உள்ள கிறிஸ்த்தவ வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்துள்ளது. குறித்த மாதா வழிபடுவதற்காக சிறுவன் ஒருவன் சென்ற போது மாதா சிலையிலிருந்து இரத்தம் கசிவதை கண்டு தாயிடம் கூறியுள்ளார் அதனை […]