களத்தில் இறங்கிய ஜீவன் ! கடுக்கடுப்பான கஹாவத்தை தோட்ட நிர்வாகம்

  கஹவத்த, வெள்ளந்துர தோட்டத்தில் தமிழ் குடும்பம் வாழ்ந்த வீட்டினை கஹவத்தை பெருந்தோட்ட கம்பெனியின் கீழ் இயங்கும் வெள்ளந்துர தோட்ட நிர்வாகம், காடையர்களை கொண்டு உடைத்து நொறுக்கியதையடுத்து, தோட்ட மக்கள் இது குறித்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் அவர்களுக்கு தெரிவித்ததை அடுத்து, அவர் உடனடியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமாகிய  ஜீவன் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்   அதனை தொடர்ந்து,  அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் […]

இரத்தினபுரி வெள்ளந்துர தோட்ட சம்பவமானது மிலேச்சத்தனத்தை வெளிப்படுத்துகிறது- திகா கடும் கண்டனம்

  இரத்தினபுரி வெள்ளந்துர தோட்டத் தொழிலாளர் குடியிருப்பொன்று தாக்குதலுக்கு உள்ளான சம்பவமானது தோட்டக் கம்பனிகளின் மிலேச்சத்தனத்தை வெளிப்படுத்துகிறது என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இரத்தினபுரி மாவட்டத்தில் காவத்தைப் பெருந்தோட்டக் கம்பனி நிர்வாகத்தின் கீழ் இருக்கும் வெள்ளந்துர தோட்டத்தில் குடியிப்பாளர் ஒருவரின் குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுவொரு மிலேச்சத்தனமானது. இது பெருந்தோட்ட கம்பனிகளின் சர்வாதிகார போக்கினையும், அவர்களின் காட்டுமிராண்டித்தனத்தையும் […]

ஈஸ்டர் குண்டு தாக்குதலை திசை திருப்பாதே! பிள்ளையானின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு ஊர்வலம்!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை திசைதிருப்பாதே உண்மையை உலகறியச்செய் எனும் தொனிப்பொருளில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை பகிரங்கப் படுத்த கோரி போராட்டம் இடம்பெற்றுள்ளது. அன்மையில் செனல் 4 தொலைக்காட்சியில் மௌலானா என்பவர் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை ( பிள்ளையான்) குற்றஞ்சாட்டி இருந்தார். இதனை கண்டிக்கும் முகமாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள், தொண்டர்கள், உறுப்பினர்கள், நலன் விரும்பிகளால் எதிர்ப்பு ஊர்வலம் இன்றைய தினம  இடம்பெற்றது. கட்சியின் தலைமையகத்தில் ஆரம்பமான இந்த எதிர்ப்பு நடைப்பயணம்  அரசடி மணிக்கூட்டு […]

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொரோனா ஜனாஸாக்கள் தகனம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் !

நூருல் ஹுதா உமர் ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொரோனா ஜனாஸாக்கள் தகனம் தொடர்பாக சர்வதேச விசாரணை அவசர தேவையாக உள்ளது.  அந்தத் தேவையை நிறைவேற்றும் அதே வேளையில், “தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு” மற்றும் “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு” மற்றும் “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு” போன்றவற்றின் அறிக்கைகளில் உள்ள அனைத்து பரிந்துரைகளையும் அரசாங்கம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அமுல்படுத்த வேண்டும் என்பதே இந்த நாட்டின் அமைதியை விரும்பும் மக்களின் […]

பாகிஸ்தானின் 58வது பாதுகாப்பு தின நிகழ்வு!

  (அஷ்ரப் ஏ சமத்) 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 7  கொழும்பு ஷங்கரிலா ஹோட்டலில் பாகிஸ்தானின் 58 வது பாதுகாப்பு தினத்தை கொண்டாடும் வகையில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் வரவேற்பு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு நிலை ) ஜிடிஎச் கமல் குணரத்ன இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். 1965 இல் தாய்நாட்டைப் பாதுகாப்பதில் ஆயுதப் படைகளின் தியாகங்களை பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர், கர்னல் முஹம்மது ஃபரூக் புக்டி சுட்டிக்காட்டியதோடு பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஒழித்து, நாட்டில் […]

நானுஓயா கிரிமிட்டிய நீரோடையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

    (   நூரளை பி. எஸ். மணியம்) நானுஓயா கிரிமிட்டிய நீரோடையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு. நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிலாரண்டன் பகுதியில் நேற்று  வெள்ளிக்கிழமை (08) இரவு காணாமல்போன ஆண் ஒருவரின் சடலம்  இன்று(09) சனிக்கிழமை காலை கிரிமிட்டிய பகுதியில்  உள்ள சிறிய  நீரோடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டவர் நானுஓயா கிலாரண்டன் கீழ் பிரிவைச் சேர்ந்த நான்கு  பிள்ளைகளின் தந்தையான சித்திரபாலன் மகேஸ்வரன் , […]

பாராளுமன்ற செயற்பாடுகளும், ஒழுங்குமுறைகளும்

நூருல் ஹுதா உமர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் விஞ்ஞானத் துறை, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்துடன் இணைந்து பல்கலைக்கழக உள்வாரி இளங்கலைப்பட்டதாரி மாணவர்களுக்கான அரசியல் செயற்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் பற்றிய குறுங்காலக் கற்கைநெறி பாராளுமன்ற செயற்பாடுகளும் இன்று 09.09.2023 தொடக்கம் 10.09.2023 வரை கலை கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் விஞ்ஞானத் துறை தலைவர் கலாநிதி எம். அப்துல் ஜப்பாரின் நெறிப்படுத்திலில் நடைபெற்ற […]

மன்னாரில் திருக்குறள் போட்டி! தனது ஓய்வூதிய பணத்தை குழந்தைகளுக்கு பரிசாக வாரி வழங்கிய வள்ளல் மணி மாஸ்டர்!

(வாஸ் கூஞ்ஞ) 08.மன்னாரில் மணி மாஸ்ரர் விருதுக்கான திருக்குறள் போட்டி பரிசளிப்பு விழாவில் 41 மாணவர்களுக்கு பத்து லட்சம் பணமும் பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இ ந்த நிதியானது மணி மாஸ்ரரின் ஓய்வுதிய பணத்தில் 05 இலட்சமும் மிகுதி பணம் இக்குடும்பத்தின் நான்கு பிள்ளைகள் இணைந்து பங்களிப்பு செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிளிப்பு நிகழ்வானது வெள்ளிக்கிழமை (07) மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினர்களாக மடு . மன்னார் வலயக் […]

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான மீள் விசாரணைகளை ஷானி அபேசேகரவிடம் ஒப்படையுங்கள்- சஜித் சபையில் வேண்டுகோள்

*உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மீள் விசாரணையை ஷானி அபேசேகரவிடம் ஒப்படைக்குமாறு எதிர்ரக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் கோரிக்கை.* தற்போது கொழும்பு பிரதேசத்தில் பாரபட்சமின்றி வெளிப்படைத் தன்மையுடன் செயற்படும் பல நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படும் நிலை காணப்படுவதாகவும், இந்த விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற முறையில் ஆராயுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். சமகாலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் இலத்திரனியல் ஊடகங்கள்,அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களை நசுக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து […]

ஓட்டமாவடி பாலத்தடியில் விபத்து – 12 வயது மகள் மரணம், தந்தை காயத்துடன் வைத்தியசாலையில்

  நியாஸ் ஹாஜியார் அக்கீல் அவசர சேவை சற்று முன்னர் ஓட்டமாவடி பாலத்தடியில் இடம்பெற்ற விபத்தில் 12 வயதுச்சிறுமி பலியாகியுள்ளதுடன், விபத்தில் கையுடைந்து காயமடைந்த நிலையில் தந்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். காவத்தமுனை பனிச்சையடி வீதியைச்சேர்ந்த கலீல் என்பவரும் அவரது மகளும் காவத்தமுனையிலிருந்து மாவடிவேம்பு செல்லும் வழியிலேயே இவ்விப்பத்து இடம்பெற்றுள்ளது.