சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் – கொழும்பு வீதியில் பனிமூட்டம் ! சாரதிகளே நிதானம்!

மலைவாஞ்ஞன் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்;ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டில் அடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஹட்டன் கொழும்பு பிரதான வீதியிலும் ஹட்டன் நுவரெலியா வீதியிலும் கடும் பனிமூட்டம் காணப்படுவதனால் மலையகத்திற்கான போக்குவரத்தில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் நுவரெலியா மாட்டத்தின் பிரதான வீதிகளில் தற்போது நிலவும் காலநிலையுடன் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கலுகல பிட்டவல,கினிகத்தேனை,கடவல […]

மாயனத்தில் மாயமான சிறுமியின் சடலம் ! வவுனியாவில் அதிர்ச்சி ! சடலத்தை தேடி பொலிசார் வேட்டை

வவுனியாவில் நீர்தொட்டியில் வீழ்ந்து இறந்த சிறுமியின் சடலம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. கடந்தமாதம் வவுனியா நெளுக்குளம் பகுதியைசேர்ந்த சிறுமி ஒருவர் கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் தவறி வீழ்ந்து மரணமடைந்திருந்தார். குறித்த சிறுமியின் சடலம் மரணவிசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் அவரது வீட்டில் இறுதிச்சடங்குகள் இடம்பெற்று இராசேந்திரங்குளம் பகுதியில் அமைந்துள்ள மயானத்தில் சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அடக்கம் செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் கடக்கின்ற நிலையில் அவரது சடலம் […]

யாழ் 8 வயது சிறுமியின் வழக்கில் திருப்பம்! தாதியருக்கு பயண தடை!

  யாழ். நிருபர் பிரதீபன் யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் தாதியருக்கு யாழ். நீதவான் நீதிமன்று பயண தடை விதித்துள்ளது. காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட “கானுலா” தவறாக பொருத்தப்பட்டதால், சிறுமியின் பாதிப்புக்கு உள்ளான நிலையில், சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன், அகற்றப்பட்டது. அது தொடர்பில் சுகாதார அமைச்சு, யாழ். போதனா வைத்திய சாலை, வடமாகாண […]

“ஈழத்து ஊடக சிகரம்” வி.என் மதியழகனின் ” சொற்கோ” புத்தகம் புத்திஜீவிகள் முன்னிலையில் வெளியீடு!

எம நாசீர் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  மூத்த ஊடகவியலாளரான வி.என்.மதியழகன் அவர்களின்  ” சொற்கோ வி.என்.மதியழகன்” நூல்  நேற்று புத்திஜீவிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. கொழும்பு தமிழ்ச் சங்கம் – சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைப்பெற்ற இவ் வெளியீட்டு விழாவான புரவலர் ஹாசிம் உயர் அவர்கள் (ஆலோசகா, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) முன்னிலையில் இடம்பெற்றது. விழாவிற்கு எழுத்தூடாக விற்பன்னர் அனந்த் பாலகிட்ணர் அவர்கள் தலைமை வகித்தார்.   பிரதம விருந்தினராக .மா. தவயோகராஜா (தலைவர், அகில இலங்கை […]

குறுந்தூர் விகாரை தொடர்பில் தொல்பொருளியல் திணைக்களம் மேற்கொண்ட தலையீடு குறித்து பாரளுமன்ற குழு ஆராய்வு!

  தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் சில நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற ஒன்றியக் கூட்டத்தில் கலந்துரையாடபட்டது. தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்  ஜயந்த சமரவீர தலைமையில் அண்மையில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடபட்டது. இக்கூட்டத்தில் தொல்பொருளியல் திணைக்களம், இலங்கை பொலிஸ், சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம், கலாசார அலுவல்கள் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வன விலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம், வனப் பாதுகாப்புத் […]

ராஜபக்ஷ பரமபரையின் கீர்த்தியை கறுமையாக்கும் பொய்யான அறிக்கையையே செனல் 4 வெளியிட்டது! முன்னாள் ஜனாதிபதி கோத்தப்பாய

ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானியாவின் செனல் 4 ஊடக நிறுவனம் காணொளி ஒன்றை வௌியிட்டு முன்வைத்துள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2005 இலிருந்து ராஜபக்ஷர்களின் பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, ராஜபக்ஷர்களுக்கு எதிராக குறித்த ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்ட முந்தைய படங்களைப் போலவே இதுவும் பொய்கள் என கோட்டாபய ராஜபக்ஸ வௌியிட்டுள்ள அறிக்கையில் […]

5 இலட்சம் ரூபா பெறுமதியான குளியலறை பொருட்களை களவாடிய இருவர் கைது!

( வாஸ் கூஞ்ஞ) மன்னாரில் குளியல் அறையிலிருந்து திருடப்பட்ட சுமார் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான குளியல் அறை உபகரணங்களுடன் இரு சந்தேக நபர்கள் மன்னார் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டு களவாடப்பட்ட ஒரு தொகுதி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் செவ்வாய் கிழமை (05) இடம்பெற்றுள்ளது. மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றின் குளியல் அறைகளிலிருந்து சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான குளியல் அறை உபகரணங்கள் […]

நிந்தவூரில் முதற் தடவையாக வைத்திய துறைக்கு தெரிவான ஜனுசிகாவுக்கு பெஸ்ட் ஒப் யங் கௌரவம்..!

நூருல் ஹுதா உமர். நிந்தவூர் கமு/கமு/அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் இருந்து வைத்தியத்துறையில் கால் பதிக்கும் குணசேகரம் ஜனுசிகாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று 2023.09.06 இடம்பெற்றது நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரீ.கலையரசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார் கௌரவ அதிதிகளாக நிந்தவூர் கோட்டக் கல்வி பணிப்பாளர் எம் சரிபுத்தீன், […]

கந்தளாயில் சோகம் ! வேகமாக வந்த இரயிலில் மகளை தள்ளி தானும் தற்கொலை செய்த தந்தை!

தகவல் K.K திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் இரவு தபால் ரயிலில் இருந்து தந்தை மகளை தள்ளிவிட்டு , தந்தையும் ரயிலிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தந்தையும் மகளும் நீண்ட நேரமாக ரயில் தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்ததாகவும், ரயில் வந்ததும் தந்தை மகளை தள்ளி விட்டு தானும் ரயில் முன் குதித்ததாகவும் அவர்கள் அடையாளம் தெரியவில்லை என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர் திருகோணமலை -கந்தளாய் புகையிர நிலையத்திற்கு அருகில் இச்சம்பவம் இன்றிரவு […]

ஹப்புத்தளையில் விபத்து! இருவர் காயம்!

ராமு தனராஜா ஹப்புத்தளை பண்டாரவளை வீதியில் பார ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர் கொழும்பில் இருந்து பண்டாரவளை பகுதிக்கு பொருட்கள் ஏற்றி வந்த பார ஊர்தி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து பண்டாரவளை ஹப்புத்தளை வீதியில் ஓத்தகடை புகையிரதக்கடவைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் பார ஊர்தியில் பிரேக் இல்லாமல் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது பார ஊர்தியின் சாரதியான 44 வயதுடைய நபர் பலத்த […]