பெண்கள் மற்றும் சிறுவர்களை யாசகத்துக்குப் பயன்படுத்துவதைத் தடுக்க விசேட திட்டம்!

வியாபார நோக்கத்தில் பெரும்பாலான சிறுவர்கள் மற்றும் பெண்கள் யாசகத்துக்குப் பயன்படுத்தப்படுவது அதிகரித்திருப்பதாக அறிக்கையிடப்பட்டிருப்பதாகவும், இதனைத் தடுப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்  என்றும் இராஜாங்க அமைச்சர்  கீதா குமாரசிங்க தெரிவித்தார். இதற்கமைய பொலிஸ், உள்ளூராட்சி மன்றங்கள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பூர்வாங்க கலந்துரையாடல்களை ஆரம்பித்து இந்தப் பணிகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு இராஜாங்க அமைச்சர்களான […]

“சொல் அல்ல செயல் என்பதே என் அரசியல் பயணம்! காணி உரிமை வழங்கலை துரிதப்படுத்துங்கள் அமைச்சர் ஜீவன் ஆலோசனை !

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று  அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது. பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வன் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற இச்சந்திப்பில் தோட்ட உட்கட்டமைப்பை  அமைச்சின் செயலாளர் எஸ்.சமரதிவாகர, காணி அமைச்சின் செயலாளர், காணி மறுசீரமைப்பு குழுவின் தலைவர், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, காணி ஆணையாளர், மற்றும் துறைசார் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். இந்த சந்திப்பு […]

பேசாலையில் 2 ஆம் கட்ட காற்றாலை அமைக்க காணி சுவீகரிப்பு. மக்கள் எதிர்ப்பு!

( வாஸ் கூஞ்ஞ) காணி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் தீவில் பேசாலை பகுதியில் காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கு காணியை அடையாளப்படுத்தும் நோக்குடன் மன்னார் பிரதேச செயலகத்திலிருந்து அதிகாரிகள் அடையாள விளம்பரத்தை காட்சிப்படுத்தப்பட்ட போது காணி உரிமையாளர்களும் பொது மக்களும் அவ்விடத்தில் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் இடம்பெற்றது. இச்சம்பவமானது புதன்கிழமை (06) காலை பேசாலை மேற்கு (மன்-55) கிராம அலுவலகப் பிரிவில் தனியார் காணிப் பகுதியில் இடம்பெற்றது. காணி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் தீவில் பேசாலை […]

சரத் வீரசேகரவின் பாராளுமன்ற உரை உண்மைக்கு புறம்பானது : முஸ்லிம் தரப்பில் கண்டனம் வெளியானது !

நூருல் ஹுதா உமர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சனல் போ ஒளிபரப்பிய நேர்காணல் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் உரையில்; “இஸ்லாமிய மத சிந்தனையின்படி” தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது என்ற அறிக்கையை நான் முற்றிலும் கண்டிக்கிறேன் என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது […]

மத்திய மலைநாட்டில் சீரற்ற காலநிலை தொடர்கிறது! திஸ்பனவில் மரம் முறிந்ததால் போக்குவரத்து பாதிப்பு.

மலைவாஞ்ஞன்  நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை மத்திய மலை நாட்டில் அடை மழை பெய்து வருகிறது இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளன. மழையுடன் பல பிரதேசங்களில் கடும் காற்றும் வீசுவதனால் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்து பொது போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதே வேளை நாவலபிட்டி பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட திஸ்பண பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீதியின் குறுக்கே வீழ்ந்ததனால் அவ்வீதியான போக்குவரத்து பல மணித்தியாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மரம் முறிந்து மின் இணைப்பு கம்பிகள் […]

புனகலயில் காட்டு யானையின் அடாவடி! 15 வயது சிறுவன் காயம்!

ராமு தனராஜா கொஸ்லந்த, புனகல பிரதேசத்தில் நேற்று (05) இரவு யானை தாக்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்து தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்தனர். புனகல அம்பிட்டிகந்த பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவனேபு காயமடைந்துள்ளார். தந்தையின் வியாபார நிலையத்தை மூடிவிட்டு தந்தையுடன் தனது வீட்டுக்கு செல்லும் போது வீதியில் வைத்து காட்டு யானை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தியத்தலாவ வைத்தியசாலையின் பேச்சாளரிடம் வினவியபோது, ​​யானை தாக்கியதில் மாணவனின் கால் பாதிக்கப்பட்டுள்ளதால் […]

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி ஆரம்பம்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி இன்று  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில்ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன்முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.தொல்பொருள் துறை சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், தடயவியல் காவல்துறையினர் உள்ளிட்ட தரப்பினரால் இவ் அகழ்வு பணிகள் இடம்பெறுகின்றன.   முல்லைத்தீவு […]

கடவுளுக்காக உண்டியலில் போட்ட பணத்தை ஆட்டைய போட்ட மூவர் பசறை பொலிஸாரால் கைது!

ராமு தனராஜ் பதுளை பகுதிகளில் ஆலயங்கள் மற்றும் விகாரைகளை உடைத்து அதிலிருக்கும் உண்டியல் பணம் நகைகள் மற்றும் பித்தளை பொருட்களை திருடி வந்த மூவர் பசறை பொலிஸாரினால் கைது. பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி E.M. பியரட்ண தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை வீதி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்த போது சந்தேகத்துக்கு இடமான முறையில் பயணித்த ஸ்கூட்டர் ரக உந்துருளி ஒன்றையும் மேலும் ஒரு உந்துருளியையும் நிறுத்தி சோதனைக்கு உட்படுத்திய போது ஸ்கூட்டர் ரக உந்துருளியின் […]

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து தயாசிறி நீக்கம! மைத்திரியின் அதிரடி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகரவை நீக்கும் கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.   அந்த கடித்ததில் தமக்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரமும் கட்சியின் யாப்பிற்கு அமைய தயாசிறி ஜயசேகர ஆகிய உங்களை கட்சியில்  அடிப்படை உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து  விலக்குவதோடு செயலாளர் பதவியையும் இரத்து செய்கிறேன் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரான மைத்திரி பால சிறிசேன  எழுதி இருக்கிறார் இதேவேளை, ஸ்ரீலங்கா […]

தமிழ் பாடத்தை தெரிவு செய்ய வேண்டாம்! வெலிகம சுமங்கலா தேசிய பாடசாலை அறிவிப்பு! முன்னாள் நகரபிதா கடுமையான எதிர்ப்பு!

வெலிகம சுமங்கலா மகளிர் தேசிய பாடசாலையில் கற்றுக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழி படத்தை தெரிவு செய்ய வேண்டாம் என பாடசாலை நிர்வாகம அறிவுறுத்தியுள்ளது. பாடசாலையில் தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியர்ஙள் இன்மையே இதற்கு காரணமான சொல்லப்படுகிறது. ஆயினும் தமிழர்கள்  முஸ்லிம் மக்கள் வாழும் மாத்தறை மாவட்டத்தில் இந்த நிலைமை ஏற்பட்டு இருப்பதை வெலிகம முன்னாள் நகர பிதா ரெஹான் ஜயவிக்ரம வன்மையாக தமது “x” ( டூவிட்டர்) ல் கண்டித்துள்ளார் அதில் வெலிகம சுமங்கல மகளிர் தேசிய […]