‘செனல் 4’ உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறுகிறது! அசாத் மௌலானாவும் விசாரிக்கப்பட வேண்டும்! பிள்ளையான் கண்டனம்!!

ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் channel 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட உண்மைக்கு புறம்பான செய்தி தொடர்பில் தமது கடுமையன  கண்டனத்தை தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சியின் தலைவரும் இராஜங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ( பிள்ளையான்) வெளியிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் கன்சீர் அசாத் மௌலானா என்பவர தனது தனிப்பட்ட அரசியல் புகலிடக் கோரிக்கைக்காக எங்களை வீழ்த்துவதற்கு காத்திருந்த அந்நிய சக்திகளுக்கு துணை நிற்கும் விதமாக ஈஸ்டர் குண்டு தாக்குதல் குறித்து எம்மையும் தொடர்பு படுத்தி உண்மைக்கு […]

“கத்தோலிக்க மக்களை அவமதிப்பதை நிறுத்துங்கள்” சர்வதேச விசாரணை நடத்துங்கள் – எதிர்கட்சி தலைவர் சஜித் வேண்டுகோள்!.

*கத்தோலிக்க மக்களை அவமதிப்பதை நிறுத்துங்கள்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு செல்லுங்கள்.* என்கிறார்எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக அப்போதைய காதினால் உட்பட பெரும்பான்மையானவர்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வந்தனர் என்றும், தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியிலுள்ள சூத்திரதாரிகளை வெளிநாட்டு விசாரணை மூலம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,இது தொடர்பில் உண்மையைக் கண்டறிய இந்நாட்டு ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காமைக்கு வருந்துவதாகவும்,இதற்குக் காரணமான சூத்திரதாரிகளை கண்டறிவதை […]

அக்கரப்பத்தனை வெவர்லி தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை!

சிரேஷ்ட ஊடகவியலாளர் சோ.ஸ்ரீதரன் அக்கரப்பத்தனை வெவர்லி தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக தோட்ட முகாமையாளர் உடனான பேச்சுவார்த்தை ஒன்று அட்டன் உதவி தொழில் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், நிதிச் செயலாளர் சோ. ஸ்ரீதரன், தொழிற்சங்க முக்கியஸ்தர் டாக்டர். அ.நந்தகுமார், தொழில் உறவு அதிகாரி சிங்கராயர்,டயகம பணிமனை உத்தியோகத்தர் திருமதி ராஜேஸ்வரி,வெவர்லி தோட்ட முகாமையாளர் அத்தநாயக்க,உதவி தொழில் ஆணையாளர் அமரதிலக்க மற்றும் தொழிலாளர் தேசிய […]

மன்னார் மாவட்டத்தில் கணித பிரிவில் முதல் வந்தார் தியாகன் டேவதரன்!!

(வாஸ் கூஞ்ஞ) ஏந்தவித தனியாh பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லாமலேயே தான் மன்னார் மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதல் இடத்தைப் பெற்றுள்ளேன் என தற்பொழுது வெளியாகியுள்ள  கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்iசியில் மன்னார் மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதல் இடத்தைப் பெற்றுள்ள மாணவன் தியாகன் டேவதரன் இவ்வாறு தெரிவித்தார். தற்பொழுது வெளியாகியுள்ள 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் மன்னார் மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதல் நிலையை மடு கல்வி […]

சிறுவர்களுக்கு எதிரான சைபர் வன்முறைகள் குறித்து சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அவதானம்!

பாடசாலைப் பிள்ளைகளுக்கான இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் பாலியல் கல்வி, இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான சைபர் வன்முறைகள் குறித்து சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அவதானம் செலுத்தியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்  ரோஹினி கவிரத்ன தலைமையில் அண்மையில் கூடிய பாராளுமன்ற  சிறுவர் ஒன்றியத்தில் பாடசாலை பிள்ளைகளுக்கான இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் பாலியல் கல்வி, இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான சைபர் வன்முறைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் பாலியல் கல்வி தொடர்பில் பாடசாலை மாணவர்களை முதற்கட்டமாகத் தெளிவூட்டும் வேலைத்திட்டத்தைப் நவீன […]

வலி வடக்கு மக்களின் முகாம் வாழ்விற்கு முற்றுப்புள்ளி! காணிகளை வழங்கினார் செயல் வீரர் டக்ளஸ்!

  வலி வடக்கு அன்ரனிபுரத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட அரச காணிகள் பொது மக்களுக்கு இன்று(05.09.2023) பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நீண்ட காலமாக அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்ற வலி வடக்கை பூர்வீகமாக கொண்ட சுமார் 49 குடும்பங்களுக்கு தலா ஒன்றரை பரப்பு வீதம் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. குறித்த பிரதேசம் உயர் பாதுகாப்பு பிரதேசமாக இருந்து வந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கடந்த பெப்ரவரி மாதமளவில் விடுவிக்கப்பட்டிருத்ததுடன், விடுவிக்கப்பட்ட அரச காணிகளை முகாம்களில் வாழும் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான […]

இலங்கை வனவியல் கல்வியகம்

  (நூரளை பி. எஸ். ரமணன்) நுவரெலியா, ஹவாஎலியா, சந்ததன்ன பிரதேசத்தில் சர்வதேச தரத்திற்கு அமைவாக நிர்மாணிக்கப்பட்ட இலங்கை வனவியல் கல்வியகம் (Sri Lanka Forestry Institute) நேற்று முன் தினம் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சியினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 53 ஹெக்டெயர் பரப்பளவில் இந்த நிறுவனம் 1500 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் , சர்வதேச வனவிலங்கு , சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த வனவியல் நிறுவனத்தில் பயிற்சி பெறலாம். […]

தாவிப்பாய்ந்து மீண்டும் தஞ்சம் அடைவோருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தாரை வார்க்க முடியாது: பிரதி பொருளாளர் ஆவேசம்!

நூருல் ஹுதா உமர் செப்டம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள மாமனிதர் அஷ்ரப் நினைவு தினம் கட்சியின் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீத் தலைமையில் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மு. கா கட்சியின் பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் நினைவு தினத்தை முன்னிட்டு நானும் மத்திய குழுவும் இணைந்து சாய்ந்தமருதில் ஏற்பாடு செய்த கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது. அதேவேளை சாய்ந்தமருது […]

தோட்ட நிர்வாகங்கள் சர்வாதிகார திமிரில் செயல்படுகின்றனர் – திருமுருகன் கண்டனம்

(  நூரளை பி. எஸ். மணியம்) மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி பெற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை தரம் உயர்த்த அனைவரும் ஒன்று திரல்வோம். திருமுருகன்  கோரிக்கை. மலையக இந்தியவம்சாவழி பெருந்தோட்ட தொழிலாளர்கள் தோட்டங்களில் குடியேரி 200 வருடங்கள் கடந்தும் தங்களுக்கென ஒரு முகவரி இல்லாமல் வாழும் சூழ்நிலையிலே இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள். நாம் இலங்கையில் குடியேரி 200 வருடங்கள் கடந்து விட்டோம் என்பதை நினைவு கூர்ந்து பல இடங்களில் “மலையகம் 200” நூல்கள் வெளியிடப்பட்டன. அதேபோல எழுச்சி […]

சிறுமியின் இடது கை இழந்தமைக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை சுகாதார அமைச்சு அறிவிப்பு!

காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் இடது கை, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை தற்போது கோரப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜீ.விஜேசூரிய கூறினார். யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியொருவர் காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 25 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிறுமிக்கு […]