மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில் தகவல் கோரிய அதிபர் மீது விசாரணை

  பாறுக் ஷிஹான் பாடசாலை மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில் மாணவர் தலைவியிடம் தகவல் கோரிய அதிபர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி கோட்ட பாடசாலையொன்றின் அதிபரே இவ்வாறு அடிக்கடி விடுமுறை எடுக்கின்ற பாடசாலை மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில் மாணவத்தலைவிகளிடம் தகவல் கோரியதாக கல்முனை பிராந்திய மனித உரிமை காரியாலயத்தில் கடந்த 23.08.2023ம் திகதி முறையிடப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டினை மாணவத்தலைவி உள்ளிட்ட பெற்றோர்கள் மேற்கொண்டுள்ளதுடன், பாடசாலை அதிபருக்கு இவ்விடயம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக அழைப்பாணை […]

சாய்ந்தமருதில் வகை வகையான போசனை உணவுகள் !

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் போசனைமிக்க உணவுகளை தயாரித்து அதனை தாய்மார்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று 2023.08.31 ஆம் திகதி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் றிபாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் குறித்த அலுவலகத்தின் பொது சுகாதார மாதுக்களும் ஏனைய சுகாதார உத்தியோகத்தர்களும் இணைந்து சமகால […]

நள்ளிரவு முதல் எரிப்பொருள் விலை அதிகரிப்பு

எம நாசீர் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் அதிகரித்து புதிய விலை 361 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 42 ரூபாவினால் அதிகரித்து புதிய விலை 417 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் குறைத்து, புதிய விலை 341 ரூபாவுக்கு விற்பனை […]

அரசஅங்கீகாரத்துடன் தொழிலாளர்களுக்காக காப்புறுதி திட்டம்-அமைச்சர் ஜீவன்

( நூரளை பி. எஸ். மணியம்) மலையக பெருந்தோட்டத்துறையில் நாள் வேதன முறைமைக்கு பதிலாக இலாப பங்கீட்டு முறையை உருவாக்கி தொழிலாளர்களை உற்பத்தி பங்குதாரர்களாக மாற்றுவதே எமது நோக்காக உள்ளது. என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். தேசிய தொழிலாளர் ஆலோசனை சபைக்கூட்டம் தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார தலைமையில் தொழில் அமைச்சில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை முன்வைக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு […]

உலக சாதனை புரிந்த மலையக இளைஞர்கள்!

(க.கிஷாந்தன்) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இளைஞர் அணியின் அனுசரனையில் இடைவிடாது தொடர்ச்சியாக 24 மணிநேரம் நடனமாடி சோழன் உலக சாதனை புத்தகத்தில் மலையக பெருந்தோட்ட சமூகத்தை சார்ந்த 7 இளைஞர்களும், இரு யுவதிகள் இடம்பிடித்துள்ளனர். லிந்துலை,மெரேயா,அக்கரபத்தனை, டயகம ஹப்புத்தளை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குறித்த இளைஞர், யுவதிகள் 16 முதல் 26 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், இவர்கள் ஹட்டன் பகுதியில் உள்ள நடன பயிற்சி நிலையமொன்றில் பயிற்சி பெற்றவர்கள் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். சோழன் […]

காத்தான்குடி பூர்வீக நூதனசாலை திருத்த பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படுகிறது!

செப்டம்பர் 4 2023 முதல் செப்டம்பர் 14 2023 வரை திருத்தபணிகள் நடைப்பெறும் பாறுக் ஷிஹான் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி புராதன நூதனசாலையின் நிலைமை தற்போது உரிய பராமரிப்பின்றி குப்பைகள் தேங்கிக் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையில் நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இப்பூர்வீக நூதனசாலைக்கு அன்றாடம் பெரும் எண்ணிக்கையிலான உள்ளூர், வெளியூர் மக்கள் பார்வையிட்டுள்ளனர். இப்பிரமாண்டமான நூதனசாலை 90% முஸ்லீம் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகவே அமைகிறதுடன், குறித்த நூதனசாலையைப் பார்வையிடுவதற்கு […]

சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலய பரிபாலன சபையின் தலைவராக மீண்டும் இராதாகிருஸ்ணன்!!

(  நூரளை பி. எஸ். மணியம்) நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலய பரிபாலன சபை தலைவராக மீண்டும் இராதாகிருஷ்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலய பரிபாலன சபையின் 51 ஆவது பொதுச்சபை கூட்டம் நேற்று முன் தினம் நேற்று (30) புதன்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கலாச்சார மண்டபத்தில்,  நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ […]

செப்டம்பர் 16 , அலைகடலென திரண்டு வாரீர்! தலைவரின் நோக்கத்தை நிறைவேற்ற ஒன்றிணைவோம் ! ஹரீஸ் MP

நூருல் ஹுதா உமர். தனது கொள்கைகளை விதையாக வீழ்த்தி முஸ்லிம் அரசியலில் புதிய முகவரி எழுதி தனது அரசியலில் தனித்தன்மையை உறுதிப்படுத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜனாதிபதி சட்டத்தரணி பெருந்தலைவர் கலாநிதி எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் நினைவு தினமும் துஆ பிராத்தனையும் அடங்கிய தேசிய நிகழ்வு எதிர்வரும் 16ம் திகதி தலைவரின் தொகுதியான கல்முனை தொகுதியின் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், […]

சமாதான வீட்டுத்தோட்ட உபகரணங்களும், உலர் உணவு பொதியும் வழங்கி வைப்பு

நூருல் ஹுதா உமர் சமூக அபிவிருத்தி நிறுவனம் காரைதீவு ஸ்பீட் நிறுவனத்துடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் 10 கிராமங்களை உள்ளடக்கியதாக  சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இச் செயற்பாடுகள் ஊடாக 10 கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள கிராம ஒத்துழைப்பு மன்ற அங்கத்தவர்களின் இயலுமையை வழுப்படுத்தி அவர்கள் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இன்றைய பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பல்வேறு சமூக முரண்பாடுகளையும் ஏற்படுத்துகின்றது. இதனை குறைக்கும் நோக்குடன். குறிப்பிட்ட […]

நீதிக்கான போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் அமெரிக்கா துணை நிற்கும் – செனட்டர் ஹோலன்

    சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சில குடும்ப உறுப்பினர்களை Maryland  செனட்டரான கிரிஸ் வேன் ஹோலென் சந்தித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் செனட்டர் பல தரப்பட்ட பிரிவினர்களை சந்தித்து வருகிறார்.. இந்த சந்தப்பில் அமெரிக்க தூதுவர்  ஜூலி ஷாங் அம்மையாரும் கலந்து கொண்டார் இதன்போது, “நீதிக்கான போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுடனும், அவர்களது குடும்பத்தினருடனும் அமெரிக்கா என்றும் துணை நிற்கிறது. இவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் உறவுகளை எண்ணி கவலையுடனே பயணிக்கின்றனர். […]