வாழைச்சேனையில் அமைதிப்பேரணி

  எஸ்.எம்.எம்.முர்ஷித் ‘சிறுவர்களுக்கான பாதுகாப்புச்சூழலை உருவாக்குதல்’ என்ற தொணிப்பொருளில் இலங்கை மெதடிஸ்த திருச்சபை வாழைச்சேனை சேகரத்தினால் கனியேல் சிறுவர் அபிவிருத்தித்திட்டத்தின் மூலம் சிறுவர்களுக்கான பாதுகாப்புச் சூழ்நிலையை உருவாக்குவதற்கான அமைதிப்பேரணி வாழைச்சேனை பிரதேசத்தில் நடைபெற்றது. பேரணியில் கலந்து கொண்டோர் ‘அன்பான தாய்மார்களே பிள்ளைகளைத் தவிக்க விட்டு வெளிநாடு செல்லாதீர்கள்’, ‘என்னை விட்டுப்போகாதே அம்மா’, ‘எங்களது பாதுகாப்பு உங்களது கைகளில்’ என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாக நடந்து சென்றனர். அமைதிப்பேரணியானது வாழைச்சேனை சுற்றுவளைவு மையப்பகுதியிலிருந்து […]

லொறி மோதியதில் ரதெல்ல சமர்செட் தோட்டத்தை சேர்ந்த ராஜு மரணம்!

  (  நூரளை பி. எஸ். மணியம் ) அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்ல கார்லிபேக் பிரதேசத்தில்  நேற்று  (27) ஞாயிற்றுக்கிழமை  நபர் ஒருவர் பாதையில் வெள்ளைக் கோட்டில் வீதியைக் கடக்க முற்பட்டபோது  மிக வேகமாக சென்ற லொறி மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். நானுஓயா ரதெல்ல  சமர்செட் தோட்டத்தின் லேங்டல் பிரிவில் வசித்து வந்த தோட்ட தொழிலாளி யான ராஜு கிருஷ்ணகுமார் (வயது 33) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். […]

யாழில் 09 தொழிற்சங்கங்கள் இணைந்து போராட்டம்

யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்று (28) மதியம் 12.00 மணி முதல் 1.00 மணி வரையிலான ஒரு மணி நேரம் குறித்த போராட்டம் இடம்பெற்றது. அமைச்சரவையில் 2023 ஜூலை 01ஆம் திகதி நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட பரிந்துரையின் மூலமாக ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதி (ETF) நிதிகளை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்குப் பயன்படுத்த அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் போது, இத்தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த முனைவதன் மூலம் EPF/ETF நிதியங்களில் கணக்குகளைக் கொண்டுள்ள சுமார் […]

போதைப்பொருள் வியாபாரிகளிடமிருந்து மாணவர்களை காப்பாற்ற தனியான படைப்பிரிவு அவசியம்!

  போதைப்பொருள் வியாபாரம் காரணமாக, நம் நாட்டின் குழந்தைகள் மற்றும் பாடசாலை கட்டமைப்பு மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளதாகவும்,ஈஸி கேஷ் போன்ற முறைகள் மூலம் போதைப்பொருள் அரக்கன் பாடசாலை கட்டமைப்பு மற்றும் பாடசாலை மாணவர்களை விழுங்கிவிட்டதாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற பாடசாலைகளுக்கு செல்லும்போது பெற்றோர்கள் கூறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். எனவே,பாடசாலை மாணவர்களிடமிருந்து போதைப்பொருளை அகற்றுவதற்கான அவசர வேலைத்திட்டம் அவசியம் என்றும், பிள்ளைகளை மையமாகக் கொண்ட போதைப்பொருள் வியாபாரத்துக்கு எதிரான கடுமையான சட்ட கட்டமைப்பு மற்றும் வேலைத்திட்டம் தேவை […]

புதிய மடு ஆலய பரிபாலகராக அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் 

(தலைமன்னார்  நிருபர் வாஸ் கூஞ்ஞ)மன்னார் மறைமாவட்டத்தில் மன்னார் ஆயரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பங்குத் தளங்களங்களின் பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் அருட்பணியாளர்களின் இடம்மாற்றம் தற்பொழுது இடம்பெற்றுள்ளது. இந்த வருடாந்த இடம்மாற்றங்கள் பெரும்பாலும் ஆவணி மாத மருதமடு அன்னையின் பெருவிழாவை தொடர்ந்து இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. இதற்கமைய மன்னார் மறைமாவட்த்தின் பாதுகாவலியும் உலகப் பகழ்பெற்ற புனித ஸ்தலமான மருதமடு அன்னையின் ஆலயப் பரிபாலகராக கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து இற்றை வரை இவ் ஆலய பரிபாலகராக கடமையாற்றி வந்த அருட்பணி […]

நீர் வழங்கும் செயற்திட்டத்தினை ஆரம்பித்தார் ராமேஸ்வரன் MP

 ( நூரளை பி. எஸ். மணியம்) நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட “புதிய வாழ்கை வீடமைப்பு திட்டத்தின்” வீடுகளுக்கு நீர் வசதியை வழங்குமுகமாக நேற்று  (27) நீர் வழங்கும் செயற்திட்டத்தின் ஆரம்பகட்ட பணிகள் நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைவாக  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , இ.தொ.கா வின் தவிசாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் தலைமையில்  மஸ்கெலியா கிளெணுகி , பொகவந்தலாவை ,கெம்பியன் […]

மாற்றுப் பயிராக பயறு செய்யப்பட்டத்தில் மன்னாரில் அறுவடை பிரமாதம்.!

(தலைமன்னார்   நிருபர் வாஸ் கூஞ்ஞ)  மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் மாற்றுப் பயிராக பயறு செய்யப்பட்டத்தில் கூடிய பலாபலன்களை விவசாயிகள் பெற்றுள்ளனர். அதிலும் இதன் மூலம் பெண்கள் நாளாந்தம் ஐயாயிரம் ரூபா வருமானத்தை பெறும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட கமநல சேவைப் பணிப்பாளர் திருமதி சாகிரா பாணு இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக மன்னார் மாவட்ட கமநல சேவைப் பணிப்பாளர் திருமதி சாகிரா பாணு மேலும் தெரிவிக்கையில் இந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் சிறுபோக செய்கையில் […]

வேலையற்ற இளைஞர்களினூடாக உற்பத்திப்பொருட்களை ஊக்குவிக்கும் நிகழ்வுகள்!!

நூருல் ஹுதா உமர். பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வலயம் மற்றும் வெளிநாட்டுத் திட்டப்பிரிவு இணைந்து கிராமத்தில் வேலையற்ற இளைஞர்களினூடாக உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்கும் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வலயம் மற்றும் வெளிநாட்டு திட்டப்பிரிவு ஆகியவற்றின் நிதியனுசரனையில் நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தின் செயற்படுத்தலின் கீழ் கிராமிய உற்பத்திகளை பொதியிடும் நிலையம் மற்றும் கிராமிய உற்பத்திகளுக்கான கண்காட்சியும் சம்மாந்துறை சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நியூ […]

பட்டம் பறக்கவிடத் தடை!

அஸ்ரப் அலீ இரத்மலானை, கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டங்கள் பறக்கவிடப்படுவதன் மூலம் பயணிகள் விமானங்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் இப்பகுதிகளில் பட்டம் பறக்கவிடுவது தடை செய்யப்பட வேண்டும் என விமான நிலைய அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் 300 அடி அல்லது அதற்கு மேற்பட்ட உயரத்தில் காத்தாடிகளை பறக்கவிடுவதும், ஆளில்லா விமானங்களை பறக்கவிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. காத்தாடிகளை பறக்கவிட பயன்படுத்தப்படும் தடிமனானகயிறு வான்வெளிக்கு அச்சுறுத்தலாக […]

திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பிக்குகள்!

அஸ்ரப் அலீ திருகோணமலை, நிலாவௌி பிரதேசத்தில் பௌத்த விகாரையொன்றை அமைக்கும் பணிகளை இடைநிறுத்துமாறு செந்தில் தொண்டமான் அண்மையில் உத்தரவிட்டிருந்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், ஆளுனர் அலுவலகம் அமைந்துள்ள மாவட்ட செயலகம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டது திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டம் காரணமாக மாவட்ட செயலகத்தின் வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டு அலுவலர்கள் உள்ளே சிக்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் செந்தில் தொண்டமான் தனது முன்னைய உத்தரவை […]