தேசிய மீலாதுன் நபி விழா எதிர்வரும் 22 ஆம் திகதி மன்னாரில்!

( வாஸ் கூஞ்ஞ) மன்னாரில் நடைபெற இருக்கும் 39 ஆவது தேசிய மீலாதுன் நபி விழா எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 39 ஆவது தேசிய மீலாதுன்  நபி விழா முசலி சிலாவத்துறை முஸ்லிம் மகா வித்தியாலத்தில் இம்மாதம் 22 ஆம் திகதி ஜனாதிபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களின் தலைமையில் இடம்பெற இருக்கின்றது. இதற்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் புத்தசாசன சமய விவகாரங்கள் மற்றும் கலாச்சார அமைச்சர் கௌரவ  விதுர விக்ரமா நாயக்க […]

சர்வதேச பாராளுமன்ற ஒன்றிய இயக்குனரை சந்தித்தார் லெட்சுமனார் சஞ்சய்.

  (  நூரளை பி.எஸ். மணியம்) சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் இயக்குனர் ரோஜியருக்கும் மலையக மக்கள் முன்னணியின்  இளைஞரணி தலைவருமான லெட்சுமனார் சஞ்சய்க்கும் இடையிலான சந்திப்பு ஜெனிவாவில் உள்ள தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது. மலையக  மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஸ்ணனின் வேண்டுகோளிற்கு இணங்க ஜெனிவா பயணமான மலையக மக்கள் முன்னணியின் இளைஞரணி தலைவர் லேட்சுமனார் சஞ்சய் சரவதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் இயக்குனர் ரோஜிய்ரை சந்தித்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது நாட்டின் அரசியல் […]

அறிமுகமில்லாதவர்களின் நட்பு மற்றும் கைத்தொலைபேசிப் பாவனை மீது நாம் கவனமாக இருக்கவேண்டும் : நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா.

நூருல் ஹுதா உமர் ஆசிரியர்கள் மேய்ப்பாளர்கள் என்ற அடிப்படையில் என்றும் இறைவனிடத்தில் தங்களுடைய கடமைக்கு பொறுப்புச் சுமத்தப்பட்டு பொறுப்பு கூறுகின்றவார்களாக இருக்கின்றார்கள். ஆசிரியர்கள் மாணவர்களை வழிப்படுத்த வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றார்கள் அந்த மேய்ப்புப் பணியிலிருந்து ஆசிரியர்கள் தவறிவிட முடியாது. ஆனால் இன்று தமது கடமையைச் சரியாகச் செய்கின்ற ஆசிரியர்கள் கூட சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளையும், இன்னல்களையும் எதிர்கொள்கின்றனர் மாணவர்கள் ஆசிரியர்களுடைய வழிப்படுத்தலை உதாசினம் செய்வதனாலேயே பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன என அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா தெரிவித்தார். […]

புனரமைக்கப்பட்ட தாய் மற்றும் குழந்தை சுகாதார நிலையங்கள் கையளிப்பு

 (  நூரளை பி.எஸ். மணியம்) நுவரெலியா செங்கூஸ் (St Clair) தோட்டம் மற்றும் கிரேட் வெஸ்டர்ன் தோட்டத்தில் உள்ள  தாய் மற்றும் குழந்தை சுகாதார நிலையத்தை  ( UN-Habitat, KOICA) “கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்” நிதியுதவியுடன் 10 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு அன்மையில் உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. “இலங்கையின் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் கோவிட் 19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் சமூகப் பொருளாதார பின்னடைவை வலுப்படுத்துதல் என்ற திட்டத்தின்” கீழ் […]

மன்னார் சிவராஜா வித்தியாலயத்தில் பிள்ளையார் சரஸ்வதி சிலைகள் திறப்பு

( வாஸ் கூஞ்ஞ) சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மோட்டக்கடை சிவராஜா இந்து வித்தியாலயத்தில் பிள்ளையார் மற்றும் சரஸ்வதி தெய்வச் சிலைகள் திறந்து வைக்கப்பட்டன. இந்த சிலைகளை ஞாயிற்றுக்கிழமை  (15) காலை நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறிஸ்கந்த குமார் அவர்கள் திறந்து வைத்தார் இந்த நிகழ்வில் நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதான குரு சிவஸ்ரீ கதிரேசன் குருக்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் மாணவர்கள் பெற்றோர்கள் பாடசாலை […]

மத்திய மலைநாட்டில் கடும் மழை பொகவந்தலாவையில் மண்சரிவு 5 வீடுகள் சேதம்!

 மலைவாஞ்ஞன் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்;ந்து மத்திய மலை நாட்டில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. பொகவந்தலாவ பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ திரேசியா தோட்டத்தில் தொழிலாளர் தொடர் குடியிருப்பு ஒன்றின் மீது பாரிய மண்திட்டு ஒன்று இன்று 15 காலை 9.30 மணியளவில் சரிந்து வீழ்ந்ததனால் அந்த […]

மலையகத்தில் சீரற்றகால நிலையிலும் பரீட்சைக்கு விரைந்த மாணவர்கள்

மலைவாஞ்ஞன் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இந்த ஆண்டு 2,888 மத்திய நிலையங்களில் பரீட்சை இன்று 15 ம் திகதி காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது. இன்றைய தினம் நடைபெறவுள்ள பரீட்சைக்கு 3,37,596 மாணவர்கள் தோற்றவுள்ளனர். மேலும், பரீட்சையில் மாணவர்கள் முதலில் இரண்டாவது வினாத்தாளுக்கு விடையளிக்க வேண்டுமென திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் லசிக சமரகோன் தெரிவித்துள்ளார். மலையகப் பகுதியில் சீரற்ற காலநிலையினையும் பொறுப்படுத்தாது மாணவர்கள் மிகவும் ஆர்வமாக பரீட்சைக்கு தோற்றினர். ஹட்டன் கல்வி வலயத்தில் இவ்வருடம் பரீட்சைக்கு 34 […]

நாட்டு மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது – ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது என கூறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் வருமானம் ஈட்டும் திணைக்களங்களின் தலைவர்களுடன் நிதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர், அரசாங்கம் வருமானத்தை அதிகரித்து விரைவாக வருமான இலக்குகளை நோக்கி நகர வேண்டும். மேலும் இந்நாட்டு மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது, […]

தென்கிழக்கு பல்கலையில் அடையாள வேலை நிறுத்தம்!

நூருல் ஹுதா உமர் பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக்குழுவின் ஏகமனதான தீர்மானத்துக்கு அமைவாக ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து (இன்று) 2023.10.12 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் தலைமையில், ஒரு மணித்தியால அடையாள பணிப்பறக்கணிப்பு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்திலும் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்திலும் இடம்பெற்றது. இவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கள் தங்களது போராட்டத்தை […]

சிறுநீரகம் மற்றும் புற்றுநோயாளிகளுக்கான இரண்டு முக்கிய மருந்துகள் நாட்டில் இல்லை – சஜித்

  எமது நாட்டின் சுகாதாரத் துறையின் துன்பகர கதையின் மற்றொரு அத்தியாயம் தற்போது நடந்து கொண்டிருப்பதாகவும், டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு அவற்றை செயல்படுத்த தேவையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும்,Basiliximab, Antithymocytic Globulin என்ற மருந்துகளும் தடுப்பூசிகளும் இரத்தமாற்றம் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அவசியம் என்றாலும்,அவை தற்போது நாட்டில் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகளை வழங்க அரசாங்கம் தவறிவிட்டாலும்,மருந்துப் பொருள் […]