ஸ்பீடாக மோட்டார் சைக்கிள் ஓட்டியவரும் , நம்பி பின்னால் அமர்ந்த யுவதியும் டிக்கோயா வைத்தியசாலையில்!

அதிக வேகத்துடன் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இளைஞர் ஒருவரும், யுவதியும் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் மல்லியப்பு ஸ்டிதரன் தோட்டப் பகுதியிலேயே இன்று மாலை 4 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. ஹட்டனில் இருந்து கொட்டகலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த மோட்டார் சைக்கிள், அதிக வேகத்தால் சறுக்கி சென்று, ‘காட் கல்லில்’ மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த இருவரும் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என பொலிஸார் […]

விறகு தேடி சென்ற சென் கூம்ஸ் தோட்டத்து இளைஞன் பிணமாக வீடு திரும்பினார்!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வோல்ட்றீம் தோட்டத்தில் காட்டுக்கு விறகுதேடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். தலவாக்கலை, கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு நீரேந்திச்செல்லும் எல்ஜின் ஓயாவில் மூழ்கியே அவர் உயிரிழந்துள்ளார். இன்று இடம்பெற்ற அவ்வனர்த்தத்தில் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் கூம்ஸ் தோட்டத்தில் கீழ் பிரிவைச் சேர்ந்த 20 வயதுடைய பிரபாகரன் கஜேந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த தோட்டத்தில் உள்ள மேலும் இரு இளைஞர்களுடன் இணைந்து இவர் விறகு தேடச்சென்றுள்ளார். அவ்வேளையில் எல்ஜின் ஓயாவில் சிலர் குளித்துக்கொண்டிருந்துள்ளனர்.  […]

“ஜெயிலரை தாக்கிய கைதி” ! பல்லேகல சிறைச்சாலையில் சம்பவம்!

அஸ்ரப் அலீ  பல்லேகெல சிறைச்சாலையில் கைதியொருவரின் தாக்குதல் காரணமாக ஜெயிலர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் பல்லேகெல சிறைச்சாலையின் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய விசேட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கட்டிடத்தில் சட்டவிரோத மொபைல் போன் பயன்படுத்தப்படுவதாக சிறைச்சாலை ஒழுக்காற்றுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது அதன் பிரகாரம் சோதனை மேற்கொள்ளப்பட்டு மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கைதிகள் ஒன்று திரண்டு சிறைச்சாலை ஊழியர்களை தாக்கியுள்ளனர். அதன் போது ஒரு கைதியின் தாக்குதல் காரணமாக ஜெயிலர் ஒருவர் காயமுற்று சிறைச்சாலை […]

மலையகம் 200 வருட வரலாறு நூல் வெளியீடு விழா

(  நூரளை பி. எஸ். மணியம்) இந்தியவம்சாவளி மக்கள் மலையகத்தில் குடியேரி 200 வருடங்கள் கடந்திருக்கும் இவ் வேளையில் “மலையகம் 200” ஆண்டு கால வரலாற்றை நினைவு கூறும் முகமாக  “தேயிலை கொழுந்தின் தொலை நோக்கு பார்வை” என்ற தலைப்பின் கீழ் தேயிலை தோட்ட வரலாறு மற்றும் தொழிற்சங்க வளர்ச்சி தொடர்பான ஆய்வு கட்டுரை ஒன்றை கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக இயக்குனரும் சட்டத்தரணியுமான ஏ. பி. கணபதிபிள்ளை புத்தகமாக நுவரெலியாவில் வெளியிட்டு வைத்தார்.  நுவரெலியா கொல்ப் கழக […]

நுவரெலியா மாவட்ட பெண்களுக்கு சுயத்தொழில் திட்டம்!

(  நூரளை பி. எஸ். மணியம்) கொரியா நாட்டின் “செமாவுல்” அறக்கட்டளை அமைப்பின் ஊடாக நுவரெலியா மாவட்ட செயலகம் இணைந்து சுயத்தொழிலில் பெண்களை ஊக்குவிக்கும் திட்டத்தின்  ஆரம்பக்கட்ட நிகழ்வு நுவரெலியா சாந்திபுர,கலாபுர மற்றும் பம்பரக்கலை கிராமங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பெண்கள் கிராமத் திட்டத்தின் கீழ் கொரியா நாட்டின் “கியாசாங்புக்டோ” மாநில அரசு மற்றும் “செமாவுல்” அமைப்பின் ஆதரவுடன் இவ் அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள பெண்கள் சுயத்தொழிலில் நிலையான அபிவிருத்தி வளர்ச்சியை அடைய வேண்டும். என்ற அடிப்படையில் இத் […]

“எண்ணங்களில் வண்ணங்கள்” நூல் வெளியீடு

  ராமு தனராஜா அரச கவிஞர் காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா எழுதிய எண்ணங்களின் வண்ணங்கள் நூல் வெளியீட்டு விழா பசறை நூலக கேட்போர் கூடத்தில் வெளியிடப்பட்டது. காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா எழுதிய எண்ணங்களின் வண்ணம் எனும் நூலை ஊவா தமிழ் இலக்கிய பேரவை வெளியிட்டு வைத்தது. குறித்த நிகழ்வில் மங்கள விளக்கேற்றல் மற்றும் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. குறித்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கல்வி ராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் மற்றும் வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர் […]

மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய பழைய மாணவ சங்கத்தின் உத்தியோகபூர்வ முகநூல்!

  மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க ஊடகப்பிரிவினரால் படசாலையின் பழைய மாணவர் சங்கத்துக்கான தனியான முகநூல் பக்கமொன்று தொடங்கப்பட்டுள்ளது.   அதன் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (25.08.2023) மாலை இஷாத்தொழுகையின் பின் 08.30 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் அதிபர் ஏ.ஜே.மர்ஸுக் (SLEAS) தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கோட்டக் கல்விப்பணிப்பாளரும், மூத்த ஊடகவியலாளருமான எம்.சுபைர் கலந்து கொண்டு முகநூல் பக்கத்தினைத் தொடங்கி வைத்தார். ஊடகக்குழுப்பொறுப்பாளர் ஏ.எம்.எம்.மபாழில் ஆசிரியரின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற […]

பாலர் பாடசாலை மாணவர்களின் சுகாதார மேம்பாடு தொடர்பில் விசேட நிகழ்வுகள்

நூருல் ஹுதா உமர். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக பாலர் பாடசாலை மட்டங்களில் சுகாதார மேம்பாட்டினை விஸ்தரிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது.. பணிமனையின் சுகாதார கல்வி உத்தியோகத்தர் எம்.ஜே.எம் பைரூஸ் அவர்களினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வில் விசேட வளவாளர்களாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தாய் சேய் நலப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் […]

பண்டாரவளை விடுதியில் பெண் ஒருவரை கொலை செய்த சந்தேக நபர் கைது.

ராமு தனராஜா பண்டாரவளை விடுதி ஒன்றில் 40 வயதுடைய எட்டாம்பிடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பண்டாரவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். எட்டாம்பிடி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய 3 பிள்ளைகளின் தாய் ஒருவரை பண்டாரவளை விடுதி ஒன்றுக்கு வரவழைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு தலைமறைவாகி […]

தொழில் வழிகாட்டல் மற்றும் திறன் மேம்படுத்தல் செயலமர்வு – 2023

நூருல் ஹுதா உமர். மெற்றோ பொலிட்டன் கல்வி நிறுவனம் மற்றும் மனித மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் முழுநாள் தொழில் வழிகாட்டல் மற்றும் திறன் மேம்படுத்தல் சம்பந்தமான செயலமர்வு சம்மாந்துறை அல் – மர்ஜான் தேசிய பாடசாலை எம்.எஸ். காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது. மெற்றோ பொலிட்டன் கல்வி நிறுவனத்தின் ஸ்தாபக தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அல்-மர்ஜான் வித்தியாலய அதிபர் எச்.எம். அன்வர் அலி, மனித மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் எஸ்.ஏ. முஹம்மட் அஸ்லம், […]