” டாம் வீதி” மலசல கூட சர்ச்சை குறித்து முறையிட்ட ராஜூ பாஸ்கரன்! அன்னை ப்ர்தாவின் வேண்டுகோளின் எதிரொலி

கொழும்பு டாம் வீதியிலுள்ள பொது மலசல கூடத்தின் பெண்கள் பிரிவில் ஆண்களை அனுமதிக்கும் செயலை புறக்கோட்டையில் தேசிய பத்திரிகைகளை விநியோகிக்கும் அன்னை ப்ரிதா நேற்றைய தினம் கருத்து வெளியிட்டு இருந்தார்…!!!  சிரேஷ்ட ஊடகவியலாளரான அஷ்ரப் ஏ ஷமிட் அவர்கள் பாதிக்கப்பட்ட அன்னையை சந்தித்து பேட்டியொன்றை எடுத்தார். அதில் தாய் மலசல கூடத்தில் தாம் பட்ட அவமானத்தை வேதனையோடு சொன்னார். குறிப்பாக பொது மலசல கூடத்தை நிர்வாகிக்கும் பெண் அங்கு வரும் ஆண்களை பெண்கள் பகுதக்கு செல்ல அனுமதிப்பதால் […]

நீர் தொட்டியில் வீழ்ந்த இரண்டு வயது குழந்தை மரணம்!

வவுனியா நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டு வயது பெண்குழந்தை ஒன்று மரணமடைந்த சம்பவம் அந்த பகுதியையே சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில நேற்று (26.08.2023) மாலை வீட்டுமுற்றத்தில் குறித்த சிறுமி விளையாடிக்கொண்டிருந்தார். எனினும் சிறிது நேரத்தில் குழந்தையை காணாதநிலையில் பெற்றோர் அவரைத் தேடியுள்ளனர். இதன்போது குறித்த குழந்தை கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் வீழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டது. உடனடியாக மீட்கப்பட்ட சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் ஏற்கனவே மரணமடைந்ததாக […]

கொழும்பு புதுக்கடை பொதுமலசல கூடத்தில் கோடூரம்..பெண்கள் பகுதிக்குள் ஆண்கள்! தட்டி கேட்கும் அன்னை ப்ரீதா

கொழும்பு புதுக்கடை டாம் வீதியிலுள்ள  பொது மலசல கூடத்தில் பாவனைக்காக செல்லும் ஏழை பெண்களை தலைகுனிய செய்யும் நிகழ்வொன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.   இலங்கையின் முன்னணி பத்திரிகைகளை  விநியோகம் செய்யும் ஏஜன்டான அன்னை ப்ரிதா காலை கடன்களை கழிப்பதற்காக டாம் வீதியில் உள்ள பொது மலசலகூடத்திற்கு சென்றுள்ளார். அங்கே ஆண்களில் சில காமூகர்கள் அரை நிர்வாணமாக அங்குமிங்கும் நடமாடுவதை பார்த்த தாய் அதிர்ச்சி அடைந்தார். இதனை அவர் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்த போதும் […]

அருகம்பே குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்க்குமாறு ஜனாதிபதி பணிப்புரை.! அபிவிருத்தி செய்யவும் தீர்மானம்

அம்பாறை, அருகம்பே சுற்றுலா வலயத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.   அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய துறைகளை அடையாளம் கண்டு, முறையான திட்டத்தின் ஊடாக அந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, பிரபலமான நீர் சறுக்கு போன்ற விளையாட்டுக்களை அருகம்பே கடற்பிரதேசத்தில், ஊக்குவிப்பதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்பு […]

லிந்துலை – 30 அடி பள்ளத்தில் வேன் புரண்டது! டிரைவர் உட்பட இருவர் காயம்!

கௌசல்யா  ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை சமுர்த்தி வங்கிக்கு அருகாமையில் வேனொன்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும் அவரோடு பயணித்தவரும் படுகாயமடைந்துள்ளனர். இன்று மாலை 5.  மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. டிக்கோயாவிலுள்ள கராஜில்  வாகனத்தை திருத்தி லிந்துலை மட்டுல்லை தோட்டத்திற்கு செல்லும் போதே வேன் பள்ளத்தில் புரண்டு விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்கள் நுவரெலிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்பதாக  பொலிஸார் கூறினர்

மக்கள் வாழாத வனப்பகுதிகளில் கிரவள் அகழ்வதே நல்லது ! சோதையன் கட்டு முறுகல் குறித்து ஆளுநர் கருத்து

மக்கள் வாழும் பகுதிகளில் குறிப்பாக சூழலுக்கு ஆபத்தான பகுதிகளில் கிரவள் மணல் எடுப்பது நிறுத்தப்பட வேண்டும் , அத்துடன் அகழும்  உரிமம் பெற்றவர்களூக்கு மக்கள் நடமாட்ட இல்லா பகுதிகளில் அகழ வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கிழக்கு மாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கூறுகிறார். மட்டக்களப்பு சோதையன்கட்டுவில் இன்று இடம்பெற்ற கிரவள் அகழ்வு பிரச்சினை குறித்து ஆளுநரின் கருத்தை கேட்ட போதே இதனை கூறினார். இன்றைய தினம் மட்டக்களப்பு – சோதையன்கட்டு பகுதியில்  கிரவள் அகழ்வு நடந்து […]

கல்குடாவில் சுருக்குவலையில் மீன்பிடித்தாக கூறப்படும் 36 பேர் கைது

  எஸ்.எம்.எம்.முர்ஷித் கல்குடா கடலில் சட்டவிரோதமான மீன்பிடி முறையான சுருக்கு வலை மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மீனவக்குழுவினர் இன்று (25) வெள்ளிக்கிழமை பேத்தாழை மீனவர்களால் சுற்றி வளைத்துப் பிடிக்கப்பட்டு மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளிடம் சட்டநடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கையின் போது பத்து (10) மீன்பிடிப் படகுகளில் முப்பத்தாறு (36) மீனவர்களும் மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள், கல்குடா பொலிஸார் ஆகியோரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளதாக பேத்தாழை மீனவ சங்கச்செயலாளர் பிரான்சிஸ் ரமேஸ் பாலு தெரிவித்தார். மாங்கேணி, காயான்கேணி, […]

அகில இலங்கை இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் கல்முனை மாணவன் வெற்றி!

நூருல் ஹுதா உமர் இலங்கைப் பொறியிலாளர்கள் நிறுவனம் (Institute of Engineers, Sri Lanka -IESL) வருடத்திற்கான இளம் கண்டுபிடிப்பாளர் (“Junior Inventor of the Year 2023) எனும் தலைப்பில் மாகாண ரீதியில் அண்மையில் போட்டி ஒன்றை நடத்தியது. அதில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான அகில இலங்கை ரீதியில் இறுதிச் சுற்று அண்மையில் இலங்கைப் பொறியிலாளர்கள் நிறுவன தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கல்முனை கல்வி வலய கல்முனை ஸாஹிறாக் கல்லூரி (தேசிய பாடசாலை) சார்பில் […]

தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தில் பயிற்சிப்பட்டறை!

நூருல் ஹுதா உமர் “அம்பாறை மாவட்ட நூலகர்களின் வினைத்திறனை மேம்படுத்துமுகமாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாள் பயிற்சிப்பட்டறை” இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாள் பயிற்சிப்பட்டறை கடந்த 19.08.2023 ஆம் திகதி சனிக்கிழமை தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தின் கேட்போர் கூடத்தில் “Empowering Libraries with the power of Research” எனும் தலைப்பில் Y.M. Trust அனுசரனையுடன் இடம்பெற்றது. இந் நிகழ்வு தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் எம்.எம். […]

அடம்பிட்டிய பெண் பண்டாரவளை ஹோட்டலில் படுகொலை! சந்தேகநபரை தேடி பொலிஸார் வேட்டை!!

  ராமு தனராஜா பண்டாரவளையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு விஷம் வைத்து கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரின் சடலம் பண்டாரவளை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பண்டாரவளை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸாருக்கு நேற்று (24) பிற்பகல் தகவல் கிடைத்தது. அதன்படி, களனி கொனவல பிரதேசத்தைச் சேர்ந்த ஐம்பது வயதுடைய ஒருவரே குறித்த பெண்ணை நேற்று ஹோட்டலுக்கு […]