வடக்குகிழக்கில் இருந்து கொழும்பு செல்லும் சொகுசு பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் உடனடி நடவடிக்கை! அங்கஜன்

வடக்கு கிழக்கிலிருந்து கொழும்பு வரை பயணம் செய்யும் தனியார் பேரூந்துகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுதல் மற்றும் அனுமதி பத்திரமின்றி பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என 26.05.2023 அன்று இடம்பெற்ற அமைச்சு மட்ட ஆலோசனைக்குழு கூட்டத்தில் யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் பிரேரணை முன்வைத்திருந்தார். அதற்குரிய பதிலறிக்கை இன்று (24.08.2023) இடம்பெற்ற அமைச்சு மட்ட ஆலோசனைக்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி தேசிய போக்குவரத்து […]

யாழ் சொகுசு பஸ் தீ பிடித்த காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை!

யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பேருந்து நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்துள்ளது.குறித்த சம்பவம் இன்று (24-08-2023) அதிகாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.புதன்கிழமை (23-08-2023) இரவு எட்டு மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து 35 பயணிகளை ஏற்றுக் கொண்டு விமான நிலையம் நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. இதற்கமைய இன்று (24.08.2023) அதிகாலை 4.30 மணி அளவில் நீர்கொழும்பு தளுவகொட்டுவ […]

பிரிந்த‌ வ‌ட‌க்கு கிழ‌க்கில் த‌மிழ், முஸ்லிம் ஒற்றுமையாய் வாழ்வதே சிறப்பு! அப்துல் மஜித்

(ஏ.எல்.எம்.சலீம்) இர‌ண்டு மாகாண‌ங்க‌ளை இணைக்க‌ நாடாளும‌ன்றில் மூன்றில் இர‌ண்டு தேவையில்லை, சாதாரண‌ பெரும்பான்மை போதும் என்ப‌து 25 வ‌ருட‌ங்க‌ளாக‌ நாடாளும‌ன்ற‌ எம்பியாக‌ இருக்கும் ர‌வூப் ஹ‌க்கீமுக்கு தெரியாதா என‌ ஐக்கிய‌ காங்கிரஸ் க‌ட்சி த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வ‌ட‌க்கு கிழ‌க்கை இணைக்க‌ மூன்றில் இர‌ண்டு தேவை என்ப‌தால் அது ப‌ற்றி முஸ்லிம் ச‌மூக‌ம் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை என‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ர‌வூப் […]

தலைமன்னாரில் ஜீப் தடம் புரண்டு விபத்து!

(வாஸ் கூஞ்ஞ)மாடு வீதியின் குறுக்கே பாய்ந்ததால் வாகனம் தடம் புரண்டதில் வாகனத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டபோதும் சாரதி பயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தலைமன்னார் மன்னார் பிரதான வீதியில் வியாழக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது தலைமன்னார் மன்னார் வீதியில் பேசாலையிலிருந்து மன்னார் நோக்கி மகேந்திரா என்ற இனம் கொண்ட வாகனம் பயணித்துக் கொண்டிருந்தபொழுது தாராபுரம் என்ற இடத்தில் இவ்வீதியின் குறுக்கே மாடுகள் பாய்ந்தபோது இவற்றிலிருந்து மீள்வதற்கு வாகனத்தை திருப்பியதும் வாகனம் […]

மடுல்சிமையில் அநாதவரான நிலையில் சடலம் மீட்பு!

இன்று (24) பிற்பகல் மடுல்சிமை விராலிப்பத்தன பகுதியில் நபரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மடுல்சிமை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 55 வயதான தங்கவேலு ராசையா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் இவர் விராலிப்பத்தன மடூல்சிமை என்ற இடத்தில் வசித்து வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது விராலிப்பத்தன விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்கு அருகில் நபர் ஒருவர் கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மரணத்திற்கான காரணம் இதுவரை […]

அடம்பனில் சுட்டு கொல்லப்பட்டவர்கள் இருவரும் விவசாயிகள்!

( வாஸ் கூஞ்ஞ)    மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவில் வேளாண்மைக்கு நீர் பாச்சிவிட்டு வீடு திரும்பிய இரு விவசாயிகளின் மீது துவக்குச் சூடு. நடத்தப்பட்டதில் இருவரும் ஷ்;தலத்திலேயே மரணித்துள்ளனர். இச்சம்பவம் வியாழக்கிழமை (24) காலை ஒன்பது மணிக்குப் பிற்பாடே அடம்பன் முள்ளிக்கண்டல் குளக்கட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது மன்னார் அடம்பன் முள்ளிக்கண்டல் குளக்கட்டில் ஒரு மோட்டர் சைக்கிள் விழுந்து கிடப்பதையும் மோட்டர் சைக்கிளுக்கு அருகில் இருவர் கிடப்பதையும் இக்குளக்கட்டுக்கு அருகாமையிலுள்ள பிரதான […]

மட்டு.கருவேப்பங்கேணி தமிழரசுக்கட்சி வேட்பாளர் மீது தாக்குதல்!

சஷி புண்ணியமூர்த்தி இலங்கை தமிழரசுக்கட்சியின் கருவேப்பங்கேணி வட்டரக்கிளையின் தலைவர் தனுச பிரதீப் மீது நேற்றிரவு சுமார் 9.20 மணியளவில் கொலைவெறித்தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. தனது வீட்டிலிருந்து உணவுப்பொருட்கள் வாங்குவதற்கு கடைக்குச்சென்று கொண்டிருந்த வேளை, கூழாவடிச் சந்தியிலுள்ள டிஸ்கோ விளையாட்டு மைதானம் அருகே இனந்தெரியாத நபர்களால் தலையில் பலமாகத் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக இன்று காலை சத்திர சிகிச்சை கூடத்திற்கு மாற்றப்பட்டு, அறுவைச்சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. […]

மன்னார் அடம்பனில் துப்பாக்கிசூடு இருவர் பலி!

அஸ்ரப் அலீ மன்னார் – அடம்பன் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மன்னார் – அடம்பன் – முல்லிகந்தல் பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்களில் பயணித்தவர்கள் மீது, இனந்தெரியாதவர்களால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்கள் 46 மற்றும் 53 வயதுடைய பள்ளிமடு, உளியன்குளம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. கொலையாளிகள், மற்றும் கொலைக்கான காரணம் குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறாத நிலையில், சம்பவம் […]

ரிதிதென்னை இக்ரஹ் வித்தியாலய ஆசிரியரைப் பலி கொண்ட விபத்து : சாரதி கைது

  எஸ்.எம்.எம்.முர்ஷித். மட்டக்களப்பு-கொழும்பு வீதியில் ஓட்டமாவடி – புனாணை எனும் இடத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியரிருவர் மரணமடைந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். ரிதிதென்னை பிரதேசத்திலிருந்து ஓட்டமாவடி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற தனியார் சொகுசு பஸ் வண்டியும் புனானை பிரதேசத்தில் வைத்து நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயத்தின் ஆங்கிலப்பாட ஆசிரியரான […]

சந்திராயன் ராக்கெட்டுக்கே 263 மில்லியன் செலவினம்! சிச்சிக்கு இலங்கை செலவிட்டதோ 320 மில்லியன்! கணக்கை சமர்ப்பியுங்கள் சபையில் சஜித் !

  இந்தியா 2008,2019 மற்றும் 2023 ஆகிய வருடங்களில் முறையே சந்திரயான் 1, 2 மற்றும் 3 என மூன்று தடவைகள் முயற்சிகளை மேற்கொண்டு இறுதியாக எப்படியோ நிலவை அடைந்ததனர் என்றும், எனினும்,இந்த 3 செயல்முறைகளுக்கும் 263 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும், 2012 ஆம் ஆண்டு நமது நாட்டிலிருந்து அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் சுப்ரீம் சாட் 1 செயற்கைக்கோளுக்கு 320 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான அறிக்கை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் […]