“தோட்டத்தொழிலாளர்களின் உரிமையை தா ” ஹட்டனில் ஆரம்பமான கையெழுத்து வேட்டை

தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக பெருந்தோட்ட மக்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஹட்டனில் நகரில் இன்று (23) ஆரம்பமானது. அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பியின் பெருந்தோட்ட தொழிற்சங்க கிளையான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தால் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ” மலையக மக்கள் இந்நாட்டுக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ளன, எனினும், அவர்களின் பொருளாதார மேம்பாடு, வாழ்வாதார மேம்பாடு, உரிமைகள் தொடர்பில் எந்தவொரு […]

ஹஜ் யாத்திரிகர்களுக்கு வழங்கப்படும் தடுப்பு ஊசி தட்டுபாடு! எதிர்கட்சி தலைவர் சபையில் கவலை!!

*நாட்டின் சுகாதாரத் துறைக்கு இறைவனே துணை நிற்க வேண்டும்.*எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார். மனித வளங்களை முறையாக நிர்வகிக்காத காரணத்தால் சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்து போகும் அபாயம் உள்ளதாகவும், ஏற்கனவே பணிபுரியும் மருத்துவர்கள் முன்னறிவிப்பின்றி நாட்டை விட்டு வெளியேறுவதும், வெளிநாட்டில் படிக்கும் விசேட மருத்துவர்கள் நாடு திரும்புவதாக இல்லை என்றும்,புதிய வைத்தியர்கள் சுகாதார அமைச்சுடன் இணைந்து சேவையாற்ற மறுப்புப்பதும்,பட்டபின் படிப்பு கற்கைகளை மோற்கொள்ளாமை போன்ற காரணங்களால் விசேட வைத்தியர்கள் உட்பட வைத்தியர்களின் பற்றாக்குறை நாட்டில் ஏற்பட்டுள்ளதாகவும், […]

“நாட்டின் சுகாதார நெருக்கடி குறித்து ஜெனிவா செல்ல தயார்…டாக்டர் காவிந்த ஜயவர்தன MP

  நாட்டின் தற்போதைய சுகாதார சீர்கேடு குறித்து “ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில்” மகஜர் ஒன்றை சமர்ப்பிக்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன மற்றும் சட்டத்தரணி வசந்த யாப்பா பண்டார ஆகியோர் நேற்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பணியகத்திற்குச் சென்றனர். இவ்வருடம் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஹப்புத்தளை சுற்றுலா விடுதி துப்பாக்கி சூட்டில் உயிரழந்தவர் மாத்தறையை சேர்ந்தவர்! பொலிஸார் தீவிர விசாரணை

ராமு தனராஜா ஹப்புத்தளை பெரகல வீதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். . உயிரிழந்தவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், காயமடைந்தவர் விடுதி உரிமையாளர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நபர் காயமடைந்து தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு […]

ஹாலிஎலயில் பால் வேன் கவிழ்ந்தது! மூவர் ஆஸ்பத்திரியில்

ராமு தனராஜா ஹாலிஎல உனுகொல்ல வீதியில் இன்று (23) காலை லொறியொன்று வீதியில் கவிழ்ந்ததில் லொறியில் பயணித்த மூவர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹாலிஎலயிலிருந்து உனுகொல்ல பிரதேசத்திற்கு பால் சேகரிப்பதற்காக சென்ற லொறியே. இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதே விபத்துக்கான காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். ஹாலிஎல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ருவான் குணதிலக்கவின் பணிப்புரையின் பேரில் போக்குவரத்துப் பிரிவினரால் […]

மலையகத்தில் தொடரும் வறட்சி! நீர் நிலைகள் வறண்ட காட்சி! தேயிலை விளைச்சலில் வீழ்ச்சி!

நாட்டில் நிலவும் க டும் வறட்சியால் மலையகத்திலுள்ள நீர்த்தேக்கங்கள், ஆறுகள் மற்றும் குளங்களின் நீர் மட்டம் சடுதியாக குறைவடைந்து வருகின்றது. சில பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், விவசாய நடவடிக்கைகளுக்கு நீரை பெறுவதில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் வறட்சியால் தேயிலை விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது, கடும் சிரமத்துக்கு மத்தியிலேயே கொழுந்து கொய்து வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். வறட்சியான காலநிலையால் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மேலும் குறைவடைந்துள்ளது.   அத்துடன், மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கம் அமைக்கும்போது […]

சாணக்கியனுக்கு பிக்கு பலமான எச்சரிக்கை! கைது செய்யப்பட வேண்டும் என கோரிக்கை!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு வருகைதந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை. பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழுவானது நேற்றைய தினம் சிறைப்பிடித்த சம்பவத்தின் போது அங்கு அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்ட பிக்கு எனது பெயரை சொல்லி அங்கு சென்றவர்களுக்கும் பாரிய எச்சரிக்கை ஒன்றை வழங்கியிருந்தார். என பாராளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் பிக்குகளுக்கும் அவரை சார்ந்த பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் பொலிஸ் சட்ட […]

“தென்றல்” சஞ்சிகையின் 60 ஆவது இதழ் வெளியீடும், கலைஞர் கௌரவிப்பும்!

( ஏ.எல்.எம்.சலீம்) மட்டக்களப்பு கல்லடியிலிருந்து கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக வெளிவந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கும் “தென்றல்” சஞ்சிகையின் 60 ஆவது இதழ் வெளியீடும், 50 கலைஞர்கள் கௌரவிப்பும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது. “தென்றல்” சஞ்சிகை ஆசிரியர் கதிரேசபிள்ளை கிருபாகரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், கிழக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் எம்.கோபாலரெத்தினம் பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் […]

லிந்துல்லையில் ஐந்து பக்கம் கடிதமெழுதி உயிரை மாய்த்து கொண்ட இளந்தாய்!!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை, லோகி தோட்டத்தைச் சேர்ந்த இளம் தாயொருவர், தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்துள்ளார். அவரின் சடலம் இன்று (23) காலை மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரின் ஒரு வயது குழந்தைக்கு என்ன நடந்தது என்பது இன்னும் தெரியாமல் உள்ளது. தனது குழந்தையுடன் அவர் குளத்தில் குதித்தாரா அல்லது என்ன நடந்தது என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். லோகி தோட்டத்தைச் சேர்ந்த மகாமணி தயானி (வயது – 26) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஐந்து பக்கததில் […]

அமைச்சர் டக்ளஸ் சீனா விஜயம்! இந்திய, சீனா அமைச்சர்களுடன் விசேட சந்திப்பு!

  சீனாவில் நடைபெறவுள்ள சுற்றுசூழல் தொடர்பான மாநாட்டில் பல்வேறு நாடுகளின் அமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ள நிலையில், குறித்த சந்தர்ப்பத்தினை இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு சார்பாக பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் தன்னுடைய சீன விஜயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், குறித்த மாநாட்டில் இந்திய பிரதிநிதிகளும் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்தியா மற்றும் சீனா உட்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஒன்றாக கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தினை இந்த மாநாடு […]