“சிறந்த சமூக பணிக்காக” லைக்கா குழுமத்தலைவர் சுபாஸ்கரனை கௌரவித்த மகாசங்கத்தினர்

லைக்கா குழுமத்தின் தலைவர் கலாநிதி அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் விஷ்வ கீர்த்தி, ஸ்ரீ அபிமான, ஸ்ரீஜனரஞ்சன தேசாபிமான்ய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த நிகழ்வு வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினரின் முன்னிலையில், இன்று பிற்பகல் வரலாற்று சிறப்பு மிக்க மாத்தறை வெஹேரே ஸ்ரீ பூர்வராம விகாரையில் இடம்பெற்றிருந்தது. சிறந்த சேவை, உள்ளார்ந்த திறமை மற்றும் தகுதியான நடத்தை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது. முப்பெரும் சங்கத்தின் அதி வணக்கத்திற்குரிய கௌரவ மாகாநாயக்க தேரர், முப்பெரும் […]

மட்டக்களப்பு எல்லையில் இன முறுகல்! அமைச்சரின் அசண்டையீனம்! சாணக்கியன் ஆவேசம்!

இன்றைய தினம் காலை பாராளுமன்றத்தில் மகாவலி அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் ரோஷன் ரணசிங்கவிடம் காணிப் பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கையினை முன்வைக்கும் போது நான் ஆணித்தரமாக முன்வைத்த விடையம் அமைச்சரின் அசண்டையீனம் காரணமாக இனங்களுக்கு இடையில் காணிகள் சம்பந்தமான குறிப்பாக மயிலத்தமடு – மாதவனை பகுதிகளில் இன முரண்பாடு தோன்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று அறிவுறுத்தியிருந்தேன். அதே போல் இன்றிய தினம் அமைச்சரின் அசண்டையீனம் காரணமாக மட்டக்களப்பு எல்லையில் சர்வமத தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிறைப்பிடிக்கப்படுள்ளார்கள்!! இதற்கான முழுப் […]

மலையக பெருந்தோட்ட மக்களுக்காக ஒன்று திரள்வோம். ஐக்கிய மலையக மா மன்றம் கோரிக்கை.

  (நூரளை ரமணன்) மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி பெற்றுக்கொடுக்க அனைவரும் ஒன்று திரள்வோம். ஐக்கிய மலையக மா மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. மலையக இந்தியவம்சாவழி பெருந்தோட்ட தொழிலாளர்கள் தோட்டங்களில் குடியேரி 200 வருடங்கள் கடந்தும் தங்களுகென ஒரு முகவரி இல்லாமல் வாழும் சூழ்நிலையிலே இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள்.நாம் 200 வருடங்கள் கடந்து விட்டோம் என மார்பு தட்டிக்கொண்டு பல நிகழ்வுகள் நடத்துவதில் எமது மக்களுக்கு முகவரி கிடைத்து விடாது. அவர்களின் வாழ்வாதார பிரச்சனைக்கும் தீர்வு கிடைத்து […]

தடுத்து வைக்கப்ட்டுள்ள மதத்தலைவர்கள் ஊடகவியலாளர்களை விடுவிக்க கோரி மட்டுநகரில் ஆர்பாட்டம்!

மட்டக்களப்பு எல்லையில் தடுத்து வைக்கப்படுள்ள சர்வமத தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை விடுவிக்குமாறு கோரியும், ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையில் கண்டித்தும் இன்று மாலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்காக மயிலத்தன மடு , மாதவனை பிரதேசத்துக்கு இன்றைய தினம் பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் விஜயம் செய்திருந்தனர். இதன்போது அவர்கள், மேய்ச்சல் தரை தொடர்பாக பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நேரில் அவதானித்ததுடன், பண்ணையாளர்களுடன் கலந்துரையாடல்களிலும் […]

மட்டக்களப்பு எல்லையில் சர்வமத தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இடையூறு!

அஸ்ரப் அலீ மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு வருகைதந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிலரினால் இடையூறு செய்யபட்டுள்ளனர் பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சனைகளை பார்வையிட்டு அவற்றை கேட்டறிவதற்காக களவிஜயம் மேற்கொண்டு பண்ணையாளர்களுடன் கலந்துரையாடலினை முன்னெடுத்தனர். இதன் பிற்பாடு பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்து மீண்டும் திரும்பி செல்லும்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக காணிகளை பிடிப்பவர்கள் மற்றும் பௌத்த மதகுரு ஒருவரும் இனைந்து அனைவரையும் வரும் வழியில் மறித்து […]

மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹோட்சவ அண்ணபூரணி திருவிழா

( வாஸ் கூஞ்ஞே) மன்னார் மாவட்டத்தில் பாடல் தளமாக விளங்கும் திருக்கேதீச்சரத்திற்கு அடுத்து பெரிய ஆலயமாகத் திகழும் நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலய மஹோற்சவத் திருவிழாவின்  ஆறாம் நாள் அண்ணபூரணி திருவிழா திங்கள் கிழமை (21)  மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது ஆலயத்தைச் சுற்றி பக்தர்களால் பொங்கல் பொங்கி  அம்பிகைக்கான நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தத்  திருவிழாவின் சிறப்பம்சமாக திருச்சி தேவா எனப்படும் நானாட்டான் பிரதேசத்தின் சங்கீத வித்துவானாகவும் இசைப் பேராசிரியராகவும் இருக்கும் மாசிலாமணி தேவபாலன் […]

சாய்ந்தமருது பெண்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு ஜனாஸா அடக்கும் முறை கருத்தரங்கு!!

நூருல் ஹுதா உமர்.  மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீலங்கா மற்றும் YMMA – மாவடிப்பள்ளி கிளையின் ஏற்பாட்டில் 21. 08. 2023 அன்று சாய்ந்தமருது சைனிங் ஸ்டார் பெண்கள் அமைப்பின் காரியாலயத்தில் பெண்களுக்கான ஜனாஸா அடக்கும் முறை சம்பந்தமான செயன்முறை கருத்தரங்கு நடைபெற்றது. மனித மேம்பாட்டு அமைப்பின் கலாச்சார பிரிவின் தலைவர் எ.எம்.எ. அஸ்ரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வளவாளராக மாவடிப்பள்ளி YMMA யின் செயலாளர் ஏ. அஷ்ரப் (மௌலவி) கலந்து கொண்டு விரிவுரையாற்றினார். இந்நிகழ்வில் சாய்ந்தமருது […]

கம்மன்பில்ல வரலாறு தெரியாது பேசுகிறார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் MP பதிலடி!

சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்ரப் அலீ கொழும்பில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு முன்பாக போராட்டம் நடாத்த போவதாகவும் முதல் கட்டமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு முன்பாக போராட்டம் நடாத்த போவதாகவும் உதய கம்மன் பில தெரிவித்திருந்தார். அத்துடன் தெற்கில் உள்ள சிங்கள மக்கள்தான் மூன்று தலைமுறைகளாக தமிழ் மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவித்த பொழுது… உதய கம்மன் பில போன்றவர்களது இனவாத கருத்துக்களால் எம்மை அச்சுறுத்தி […]

நிந்தவூர் உணவகங்களில் சுகாதார பிரிவினர் திடீர் சோதனை! புகார் இருப்பின் தொலை.இல 0672250834 அழையுங்கள்!!

நூருல் ஹுதா உமர் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம்.றயீஸ் அவர்களின் வழிகாட்டலில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவு உணவகங்களில் திடீர் சோதனை இடம்பெற்றது. தற்போதைய காலகட்டத்தில் ஹோட்டல்களின் தரத்தைப்பேணும் வகையில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் உணவகம்களில் திடீர் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம்.றயீஸ் தெரிவித்தார். மேலும், இதில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நீரில் கழுவாமல் வெட்டப்பட்ட வெங்காயம் மற்றும் சீர்குலைந்து காணப்பட்ட […]

சிங்களவர்களின் உரிமையை வென்றெடுக்கும் போராட்டம்! வெள்ளியன்று கஜேந்திரகுமார் MP வீட்டின் முன்பாக திரளுங்கள்- கம்மன்பில

சிரேஷ்ட ஊடகவியலாளரான  அஸ்ரப் அவீ கொழும்பிலுள்ள தமிழ் எம்.பி.க்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட வருமாறு சிங்கள பௌத்தர்களுக்கு உதய கம்மன்பில அழைத்துள்ளார் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும். சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆரம்பமாக கொழும்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டின் முன்பாக இவ்வாரம் போராட்டத்தில் ஈடுபடுவோம். இந்த போராட்டத்தில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும், இனவாத கொள்கையற்ற […]