தலைமன்னார் மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஊர்மனையை சேர்ந்த நிசாந்தன் மரணம்!

( வாஸ் கூஞ்ஞ) தலைமன்னார் மன்னார் வீதியில் பயணித்த இரு வாகனங்கள்  மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் திங்கள் கிழமை (21) பிற்பகல் மூன்று மணியளவில் மன்னார் தலைமன்னார் பிராதன வீதியில் தலைமன்னார் பொலிஸ் பிரிவான பருத்திப்பண்ணையில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்து தொடர்பாக ஆரம்ப விசாரணையில் தெரியவருவதாவது. தலைமன்னார் ஊர்மனையைச் சேர்ந்த இரண்டு மாதக் குழந்தைக்கு தந்தையான லோறன்ஸ் மனோகரன் நிசாந்தன் (வயது 32) என்பவரே விபத்துக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே […]

சிங்கப்பூர் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சருடன் ஜனாதிபதி ரணில் கலந்துரையாடல்!

  சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யகோப் (Halimah Yacob) ஆகியோருக்கிடையிலான சந்திபொன்று இன்று ( இடம்பெற்றது. சிங்கப்பூர் இஸ்தான மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிங்கப்பூர் ஜனாதிபதியினால் அன்பான வரவேற்பளிக்கப்பட்டதோடு, சுமூகமான கலந்துரையாடியதன் பின்னர் இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால இருதரப்பு தொடர்புகளை பலப்படுத்திக்கொண்டு, முன்னோக்கிச் செல்வது தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் கலந்தாலோசித்ததோடு, உணவுப் […]

அநுராதபுரத்தில் விபத்து ! தாயும் 6 வயது மகளும் மரணம்!

அநுராதபுரம், ஜெயந்தி மாவத்தையில் உள்ள கதிரேசன் கோவிலுக்கு முன்பாக இன்று (21) இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த இவ்விபத்தில் 36 வயதான சஷிகா துலானி வீரசிங்க மற்றும் அவரது 8 வயது மகளான திசானி பிரியன்ஷா ஆகியோரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள், அதே திசையில் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் […]

ஒலுவில் துறைமுகத்தினை செயற்படுத்துவதில் அமைச்சர் டக்ளஸ் தீவிரம்!

  கிழக்கு கடற் பரப்பில் ஏராளமான கடலுணவு சார்ந்த வளங்கள் காணப்படுகின்ற போதிலும், இதுவரையில் அவை சரியான முறையில் பயன்படுத்தப்படுவதில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஒலுவில் துறைமுகத்தில் மீன்பிடிச் செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் குறித்த குறைபாட்டினை கணிசமானளவு நிவர்த்தி செய்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார். கிழக்கிற்கான விஜயத்தினை கடற்றொழில் அமைச்சர் விரைவில் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ள நிலையில், ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பான ஏற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பாக இன்று(21.08.2023) சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற […]

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் ” பாடசாலை ஆராய்ச்சி வாரம்”

நூருல் ஹுதா உமர் ‘ஆராய்ச்சி வாரம் – 2023’ தொடர்பான கல்வி அமைச்சு சுற்றுநிருபம் ED/03/56/03/03 (II) இலக்க கடிதத்திற்கு அமைவாக ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட தீர்மானங்களை எடுக்கும் கலாசாரம் ஒன்றை பாடசாலை முறைமைக்குள் உருவாக்குவதன் மூலமாக அறிவார்ந்த எதிர்காலமொன்றுக்கு நாட்டின் பாடசாலை சிறார்களை முன்னிலைப்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கிளையின் ஊடாக வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் “பாடசாலை ஆராய்ச்சி வாரம்” செயற்றிட்டத்தின் 2023 ஆம் ஆண்டுக்குரிய செயற்பாடுகள் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி […]

நானுஓயாவில் கெப்ரக வாகனம் விபத்து – 6 பேருக்கு காயம்

( நூரளை பி.எஸ்.மணியம்) நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் கிரிமிட்டி பகுதியில் கொழும்பு பிலியந்தலையிலிருந்து நுவரெலியா நகருக்கு பயணித்த கெப் ரக வாகனமொன்று வீதியைவிட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து இன்று முற்பகல் (21) திங்கட்கிழமை விபத்துக்குள்ளாகியதில் 6 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர்  காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் அனைவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]

காணி விவகாரத்தில் இ.தொ.காவின் கொள்கை என்ன? கிழக்கிலும் மலையகத்திலும் வேறுப்பட்ட பார்வை ஏன்?கலீலுர்ரஹ்மான் கேள்வி!

செந்தில் செய்வது சரியா? ஜீவன் செய்வது சரியா ? : இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொள்கை என்ன – கேள்வி எழுப்புகிறார் ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ. கலீலுர்ரஹ்மான் மலையகத்துக்கு ஒரு முகத்தையும் மலையகத்துக்கு வெளியே கிழக்கில் ஒரு முகத்தையும் காட்டும் தொண்டமான்களுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் இரட்டை முகங்களா? இதில் யார், எங்கு செய்வது சரி, பிழை என்று மக்கள் அறிந்து கொள்வது கடினமாக உள்ளது. கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளினால் கையகப்படுத்தப்பட்ட முஸ்லிங்களின் காணிகளுக்கு […]

மதுரை – கட்டுநாயக்கா Spice Jet விமான சேவை ஆரம்பம்!

இந்தியாவில் மதுரை மற்றும் கட்டுநாயக்கா விமான நிலையங்களுக்கு இடையே நேரடி விமான சேவையை SpiceJet மீண்டும் தொடங்கியுள்ளது. அதன்படி, 30 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களுடன் SG-003 என்ற தனது முதலாவது விமானம் நேற்று (20) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. விமானம் 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மதியம் 2.50 மணியளவில் மதுரைக்கு புறப்பட்டது. ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் புதன்கிழமை தவிர ஒவ்வொரு நாளும் இந்தியா – கட்டுநாயக்கா மற்றும் […]

விறகு சேகரிக்க சென்ற 16 வயது சிறுவன் குளவி கொட்டில் மரணம்! பம்பரகலையில் துயரம்!

( நூரளை பி. எஸ். மணியம்) நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரக்கலை தோட்டத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் நேற்று  (20) ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் விறகு சேகரிக்க சென்ற இளைஞர்கள் மீது குளவிக் கொட்டியதில் 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். மேலும் அறுவர் குளவி கொட்டுக் குள்ளாகி சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு இதில் மூவர் சிசகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதுடன் மூவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் […]

புலம்பெயர் முதலீடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் – கருணா அம்மான் சந்திப்பு!

கடலுணவுகளை தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) கலந்துரையாடினார்.   இச்சந்திப்பு கடற்றொழில் அமைச்சில் இன்று(21.08.2023) நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது புலம்பெயர் நாடுகளை சேர்ந்த தனியார் முதலீட்டாளர்களின் பிரதிநிதிகள் குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர். சர்வதேச சந்தைகளுக்கு கடலுணவுகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டிற்கு தேவையான அந்நியச் செலாவணிகளை பெற்றுக்கொள்வதுடன், கடற்றொழில் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தினையும் வலுப்படுத்த முடியும் என்பதை அதிகாரிகள் […]