நிசாம் காரியப்பருக்கு கல்முனையில் இருந்து கண்டனம் :

நூருல் ஹுதா உமர் இப்போதைய தலைவர் ஊடாக பெரிய பதவியை அடைய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் அஸ்ரபை கலங்கப்படுத்த வேண்டியது யாருக்கும் தேவையில்லை. தேவையானவர்கள் பதவிகளை எப்படியாவது யாரை காக்காய் பிடித்தாவது பெற்று கொள்ளலாம். முஸ்லிங்களின் உரிமைக்காக குரல் எழுப்ப முடியாத, தாய் மண்ணுக்கு ஆதரவாக செயற்பட முடியாத, சுமந்திரன் போன்றவர்கள் கேட்கும் வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்க்க முடியாத நிஷாம் காரியப்பர் போன்றவர்கள் தலைவர் அஸ்ரபை கொச்சைப் படுத்துவத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என ஸ்ரீ லங்கா […]

விமலசுரேந்திர நீர்த்தேக்க வான்கதவுகள் திறப்பு- பொகவந்தலாவையின் தாழ் பிரதேசங்களில் வெள்ளம்!

(க.கிஷாந்தன்) மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக மக்களின் இயல்புவாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பொகவந்தலாவ பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையினால் கெசல்கமுவ ஓயாவின் கிளை ஆறுகள் பெருக்கெடுத்து பாடசாலைகள் மற்றும் பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.   பொகவந்தலாவ பிரதேசத்தில் (11) நேற்று பிற்பகல் பெய்த கடும் மழையின் காரணமாக, பொகவந்தலாவ சென்மேரிஸ் தேசிய பாடசாலைக்கு சொந்தமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, வகுப்பறைகளிலும் நீர் நிரம்பி காணப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.   சுமார் […]

கொழும்பை மையமாக, முழுநாட்டை பரப்பாக, கொண்டு தமிழர் கல்வி மேம்பாட்டு கழகம் உதயமாகிறது- மனோ கணேசன் எம்பி  

    தமிழ் சமுதாயத்தில், எஞ்சியுள்ள இன்றைய மிகப்பெரிய பலம் கல்வி ஆகும் என்பதை எமக்கு என்றுமில்லாதவாறு உணர்த்தும் காலம் இதுவாகும். ஆகவே, தமிழர் கல்வி துறையை போற்றி பாதுகாத்து, பலவீனமான புள்ளிகளை அடையாளம் கண்டு, கூட்டிணைந்து நாம் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.  இந்நோக்கில், தமிழ் மாணவர்களின் முன்பள்ளி கல்வி முதல் மூன்றாம் நிலை கல்வி வரையிலான ஒட்டுமொத்த தமிழர் கல்வி கட்டமைப்பு எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகங்கொடுக்க இன்று நாம் அங்குரார்ப்பணம் செய்துள்ள தமிழர் கல்வி […]

முச்சக்கர வண்டி விபத்து

  பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பசறை மடூல்சீமை வீதியில் கிகிரிவத்தை மாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக இன்று அதிகாலை பசறையில் இருந்து எல்டப் நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 50அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதிலும் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளது. வீதியின் குறுக்கே நாய் ஒன்று பாய்ந்ததாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகன காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.   ராமு தனராஜா

சகல வீதிகளையும் புனரமைப்பு செய்ய நடவடிக்கை -ஜனாதிபதி

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சேதம் அடைந்த சகல வீதிகளையும் புனரமைப்பு செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். மத்திய மத்திய அதிவேக நெடுஞ்சாலை உட்பட அனைத்து நெடுஞ்சாலை திட்டங்களையும் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிபுரி விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் இந்த பணிப்புரையை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் விடுத்துள்ளார். இதேவேளை, […]

ஜெனிவா செல்லும் அமைச்சர் ஜீவன்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் சுவிஸ் தலைநகர் ஜெனிவாவுக்கு இன்று(11) பயணம் மேற்கொள்ளவுள்ளார். உலக நாடுகளில் உள்ள தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் சர்வதேச தொழிற்சங்க மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அமைச்சர் ஜெனிவா செல்கின்றார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி, அமைச்சரின் ஆலோசகர் ஹரித்த விக்கிரமசிங்கவும் அமைச்சருடன் செல்கின்றனர்.

மேற்கத்தையவர்களின் சம்பள பட்டியலில் இருப்பவர்கள் தாய் மண்ணை காட்டிக்கொடுக்கிறார்கள் – ஹரீஸ் MP

நூருல் ஹுதா உமர் மேற்கத்தையவர்களின் சம்பள பட்டியலில் நிறைய அரசியல்வாதிகள், அதிகாரிகள் இந்த நாட்டில் இருந்து கொண்டிருக்கிறார்கள். அதில் முஸ்லிம் சமூகமும் விதிவிலக்கல்ல. முஸ்லிம் சமூகத்தின் உயர்ந்த திறமைசாலிகள் என்று அடையாளப்படுத்தப்படுபவர்கள் மேற்கத்தையவர்களின் சம்பள பட்டியலில் இருந்து கொண்டு தான் வாழும் எமது மண்ணை காட்டிக்கொடுத்தும் ஊரின் மகிமைகளை கொச்சைப்படுத்திக் கொண்டும், ஊடகங்களில் வந்து தாய் மண்ணையே காட்டிக்கொடுத்துக் கொண்டும், தென்கிழக்கு பிராந்தியத்தில் புகழ் பூத்த ஊரின் மகிமைகளையும், தேவைகளையும் பற்றி மோசமான வார்த்தைகளை கொண்டு கொச்சைபடுத்தி […]

கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிறைவு !

நூருல் ஹுதா உமர் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருடாந்தப் பொதுப் பட்டமளிப்பு விழா வந்தாறுமூலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக பிராதான வளாக நல்லையா மண்டபத்தில் அக்டோபர் 7 ம் மற்றும் 8ம் திகதிகளில் வெகு சிறப்பாக நடந்தேறியது. உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் கலாநிதிப் பட்டம், பட்டப்பின் படிப்பு பட்டங்கள், உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டங்கள் என 1760 பட்டங்கள் உறுதி செய்யப்பட்டன. கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் ஓய்வு பெற்ற பேராசிரியர் […]

உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

  பேரழிவுகளையும் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்ற பாலஸ்தீன் – இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக கரிசனையை வெளிப்படுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் எனவும் தெரிவித்தார்.   மேலும், பாலஸ்தீன – இஸ்ரேல் விவகாரத்தின் போக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் என்ற யதார்த்தினை 1978 ஆம் ஆண்டு அங்கு பயிற்சிக்கு சென்ற போதே தன்னால் உணரக்கூடியதாக இருந்ததாகவும் தெரிவித்தார். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்று(11.10.2023) நடைபெற்ற நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு […]

சட்டவிரோதமாக பாக்குநீர் ஊடாக தமிழகத்தில் ஊடுருவிய இரு இலங்கையர் கைது.

( வாஸ் கூஞ்ஞ) மண்டபம் முனைக்காடு கடற்கரையில் செவ்வாய்கிழமை (10) ஆளில்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை  வைபர்  படகை கண்ணுற்ற தமிழகப் பொலிசார் தேடுதலில் ஈடுபட்டபோது இருவர் மண்டபம் அகதிகள் முகாமில் பதுங்கி இருந்தமை பொலிசாரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது இந்திய தமிழ்நாடு மண்டபம் முனைக்காடு கடற்கரையில் செவ்வாய்கிழமை (10) ஆளில்லாமல் இலங்கைக்குரிய வைபர் படகு ஒன்று கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை கரையோர பொலிசார் அவதானித்துள்ளனர். இது தொடர்பாக பொலிசார் தீவிர விசாரனையில் ஈடுபட்டபோது […]