தங்காலையில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி!

  (சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்ரப் அலீ) தங்காலையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி தங்காலையில் இன்று மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் தங்காலை, குடாவெல்ல, நாகுளுகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான நபர் ஒருவரே குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியாகியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது

உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை நவீனமயமாக்கும் செயல் திட்டம்!

நூருல் ஹுதா உமர். ஆசிய மன்ற நிதி உதவியின் கீழ் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தினால் அமுல்படுத்தப்படுகின்ற ” உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளினூடாக இளைஞர்களை வலுவூட்டும் செயற்றிட்டத்தின்” கீழ் இளைஞர்களை தெளிவூட்டும் பயிற்சி செயலமர்வு திருகோணமலை பட்டினமும், சூழலும் பிரதேச சபை மண்டபத்தில் பிரதேச சபை பிரதம முகாமைத்துவ உதவியாளர் என். சிவகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இலங்கை உள்ளுராட்சி மன்றங்கள் சம்மேளன பிரதம நிறைவேற்று அதிகாரி ஹேமந்தி குணசேகரவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் இலங்கை உள்ளுராட்சி […]

13 ஆவது திருத்தச்சட்டம்! தமது நிலைப்பாட்டை மகாசங்கதினரிடம் சஜித் தெரிவிப்பு

நலீர் அகமட் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான தனது நிலைப்பாட்டை மகாசங்கத்தினர் முன்னிலையில்  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.   பலரும் பேசிக் கொண்டிருக்கும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இன்றும் நாளையும் ஒரே நிலைப்பாட்டையே நாம் கொண்டுள்ளோம் என்றும், ஒன்றித்த நாட்டுக்குள் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரப் பரவலாக்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும்,ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேண தேசிய ஒற்றுமை மிகவும் அவசியம் என்றும்,நாட்டின் அனைத்து […]

மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி ! ஜனாதிபதி ரணில் மடு ஆலயத்தில் உரை!

(வாஸ் கூஞ்ஞ0 மன்னாரை ஒரு வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையான நகர்சேர் கடுகதி ரயில் சேவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ந் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். செவ்வாய்கிழமை (15) மன்னார் மடு மாதா தேவாலய திருவிழாவில் கலந்து கொண்டே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவிக்கையில் மடு தேவாலய வருடாந்த திருவிழா என்பது நாட்டு […]

மருதமடு அன்னையின் பெருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்! ஜனாதிபதி பங்கேற்பு.

( வாஸ் கூஞ்ஞ)நீண்ட காலத்துக்குப் பின் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழாவுக்கு பெருந் தொகையான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் ஜனாதிபதி மற்றும் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான அப்போஸ்தலிக்க தூதுவரும் கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும். மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள  வரலாற்று சிறப்புமிக்க மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா செவ்வாய் கிழமை (15) காலை இடம்பெற்றது. இப்பெருவிழாவின் கூட்டுத்திருப்பலியானது நொன்சியோ என அழைக்கப்படும் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான அப்போஸ்தலிக்க […]

காரியாலயத்தை மாற்றாதே ! பசறை டெமரியா A தோட்டத்தொழிலாளர்கள் 2 வது நாளாக பணி பகிஷ்கரிப்பு!

ராமு தனராஜா டெமேரியா A தோட்ட தொழிலாளர்கள் நேற்றைய தினமும் இன்றைய தினமும்  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பதுளை- பசறை டெமேரியா A தோட்டத்தில் 4 பிரிவுகளை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் இன்றும் நேற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெமேரியா A தோட்டத்தில் இதுவரையில் இயங்கி வந்த தோட்ட காரியாலயத்தை டெமேரியா B தோட்டத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தே தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு […]

செப் 15 முதல் கொழும்பு – தலைமன்னார் ரயில் சேவை

சிரேஷ்ட ஊடகவியலாளரான அஸ்ரப் அலீ தலைமன்னார்- கொழும்பு இடையே அதிவேக ரயில் சேவை எதிர்வரும் செப்டம்பர் 15 தொடக்கம் தலைமன்னார்- கொழும்பு இடையே அதிவேக ரயில் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது மன்னார், மடு திருத்தல வைபவத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்

கிழக்கு மாகாணத்தில் சூரிய சக்தி மின்பிறப்பாக்கிகள்- அமைச்சர் காஞ்சன விஜேசேகர இணக்கம்!

நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கும் இடையிலான கலந்துரையாடல் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நேற்று(14) இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான சாலை வரைபடத்தைத் திட்டமிடுதல், இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் அரசு அலுவலகங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் மதத் தலங்களுக்கு இலவச சூரியசக்தி மின்பிறப்பாக்கிகள் (சோலார் பேனல்களை) நிறுவுவதற்கு காஞ்சன விஜயசேகர இணக்கம் தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் மின்சக்தி மற்றும் எரிசக்தி […]

மாங்குளம் பனிச்சங்குளத்தில் அதிகாலை கோர விபத்து மூவர் பலி!

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று (15) அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். வீதிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்பகுதியில் வேன் மோதிய நிலையில் குறித்த லொறி முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது பின்னால் இருந்த லொறியின் சாரதி வாகனத்தை விட்டு இறங்கிய இருந்த நிலையில் இரண்டு லொறிகளுக்கு இடையில் சிக்கி […]

பிள்ளைகளுக்கு சின்னமுத்து தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

நூருல் ஹுதா உமர். நாட்டில் தற்போது சின்னமுத்து (Measels) நோய் சிறுவர்களிடயே வேகமாக பரவிவருவதானால் குழந்தை பிறந்து 09 மாதங்கள் மற்றும் 03 வயதில் போடப்படும் தடுப்பு ஊசி ஏற்றிக்கொள்ளதவர்கள் உடனடியாக ஏற்றிக்கொள்ளுமாறு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், திங்கட்கிழமைகளில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையிலும், செவ்வாய்க்கிழமைகளில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும், புதன்கிழமைகளில் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் […]