பிரிந்த வடக்கு கிழக்கிலே நாவலடியில் ஆபத்து ! இணைந்தால் முஸ்லிம் மக்களின் நிலை என்னவாகும்? கலீலுர் ரஹ்மான் கேள்வி?

நூருல் ஹுதா உமர் நாவலடி காணி விவகாரத்தில் இடம்பெற்றுள்ள இனவாத செயற்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். சட்டரீதியாக நீதிமன்றத்தினால் பிரிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கை 13ம் திருத்த சட்டமூலத்தின் பிரகாரம் மீளவும் இணைத்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை தமிழ் தரப்பு கோரிவரும் இந்நிலையில் பிரிந்த வடக்கு கிழக்கிலையே சாணக்கியன் எம்.பி போன்றவர்களின் அடாவடித்தனம் இவ்வாறு இருக்கிறது என்றால் இணைந்த வடகிழக்கில் முஸ்லிங்களின் வாழ்வியல் நிலை என்ன ? என்று கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஐ. […]

மில்லியன் ரூபா தள்ளுபடி! மக்கள் மீது வரிச் சுமைகள்! : COOP குழுவில் சாணக்கியன்!

மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த காலத்தில், மாகா உட்பட 15 நிறுவனங்கள், அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 793 மில்லியன் ரூபாவை தள்ளுபடி செய்வதற்கு அமைச்சரவையில் அனுமதி  வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன்  பாரளுமன்ற கோப் குழு கூட்டத்தில் கூறி இருக்கிறார். அத்துடன் மாகா நிறுவனம் செலுத்த வேண்டிய 482 மில்லியனை குறைக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கோப் குழுவில் நடந்த கூட்டத்தின் போது இதன் விடயம் வெளிப்படுத்தப்பட்டது அதன் போது நானும் அக் கூட்டத்தில் […]

அமைச்சர் ஜீவன் தலைமையில் தொழிலாளர் பாதுகாப்பு சுகாதாரம் குறித்து ஆராய்வு!

சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் அனுசரனையுடன்  அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் பெருந்தோட்டத்துறையினருக்கு தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு தொடர்பான செயலமர்வு கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது 200 வருடங்கள் ஆகியும் மலையக தோட்டத்துறையினரின் பாதுகாப்பும், சுகாதாரமும் இன்னும் ஒதுக்கப்பட்ட நிலையில் காணப்படுவதன் காரணமாக பாதுகாப்பு மற்றும் சுகாதார உரிமைகளையும், தொழில்சார் உரிமைகளையும் மீட்டெடுக்கும் திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதோடு, தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் அதிகாரிகளுக்கு இதன்போது […]

பசறையில் புதிய மதுபானசாலை வேண்டாம்! வடிவேல் சுரேஷ் தலைமையில் போராட்டம்

  நடராஜா மலர்வேந்தன் பசறை 10ம் கட்டை சந்தியில் புதிய மதுபானசாலை அமைப்பதை எதிர்த்து இன்று பாராளுமன்ற உறுப்பினர் .வடிவேல் சுரேஸ் தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏராளமான மக்கள் இதில் கலந்து தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

60 வயதில் B.A பட்டதாரியான முன்னாள் எம்.பி ரஞ்சன் ராமநாயக்க!

பல்வேறு பிரச்சினைகள் வந்தாலும் தமது நோக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கு சிறப்பான உதாரணம் இலங்கை சினிமாவின் அல்டிமேட் ஸ்டாரும் முன்னாள் M.P யுமான ரஞ்சன் ராமநாயக்க. இவர் தனது 60 வயதில் கொழும்பு திறந்த பல்கலைகழகத்தில் தமது கலைப்பட்டத்தை நிறைவு செய்துள்ளார். அவருக்கு எமது வாழ்த்துகள்!        

வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம்

அஷ்ரப் அலீ நீண்டகாலமாக இழுபறியில் இருந்த வாகன இறக்குமதிக்கான தடை இவ்வாரம் முதல் படிப்படியாக நீ்க்கிக் கொள்ளப்படவுள்ளது அதன் முதற்கட்டமாக லொறி, ட்ரக் மற்றும் பேரூந்துகளுக்கான இறக்குமதித் தடை நீக்கப்படவுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இவ்வாரம் வௌிவரும் அந்நியச் செலாவணி கையிருப்பைப் பொறுத்து எதிர்வரும் செப்டம்பருக்குள் வாகன இறக்குமதிக்கான தடை முற்றாக நீக்கிக் கொள்ளப்படும்

சாய்ந்தமருதுக்கு  பெருமை தேடித்தந்த கலாசார மத்திய நிலைய மாணவர்கள்!

நூருல் ஹுதா உமர்கலாசார அலுவல்கள் அமைச்சினால் வருடம் தோறும் நடாத்தப்பட்டு வரும் பிரதீபா – 2023 போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. இதில் ஓர் அங்கமான மாகாண மட்டப் போட்டிகள் மட்டக்களப்பு பிள்ளையாரடி மகா வித்தியாலயத்தில் சனிக்கிழமை (12) இடம்பெற்றது. இந்தப் போட்டிகளில் சுமார் 15 க்கு மேற்பட்ட மத்திய நிலையங்கள் பங்குபற்றியிருந்தன. அதில் முஸ்லிம் பிரிவில் சுமார் 07 மத்திய  நிலையங்கள் கலந்து கொண்டன. இந்த மாகாண மட்டப் போட்டிகளில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையம் […]

வஞ்சிக்கப்பட்ட சமூகத்தின் அழுகுரலை கேளுங்கள் – கிழக்கின் கேடயம்.அறிக்கை!

நூருல் ஹுதா உமர் . ஓநாய்களின் பரிதாப அலறல் ஆட்டுக்குட்டிகளின் இரத்தத்தை நோக்கித்தான் என்பதை பல வருடங்களாக நாங்கள் எல்லா இடத்திலும் ஆழமாக வலியுறுத்தி வருகின்றோம். பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் போன்றவர்கள் தீவிரமான இனவாத போக்குள்ளவர்கள் என்பதை ஆரம்பத்திலிருந்தே நாங்கள் தெரிவித்து வந்தோம். ஆழமான உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடியாத பலரும் இனவாதிகளை தலையில் தூக்கிவைத்து கொண்டு கொண்டாடினார்கள் என கிழக்கின் கேடயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கின் கேடயம் சார்பில் பிரதான ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். சபீஸ் […]

நாவலடி காணிகளிலிருந்த ஏழை மக்கள் வெளியேற்றப்பட்டமை ஆக்கிரமிப்பு,! இனவாத நடவடிக்கை – ஹரீஸ் எம்.பி கண்டனம் தெரிவிப்பு !

நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண, மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்வீக முஸ்லிம் கிராமங்களையும், குடியுருப்புக்களையும் கொண்டு வாழும் முஸ்லிங்கள் அவர்களின் விகிதாரசத்திற்கு ஏற்ப மட்டக்களப்பு மாவட்டத்தில் காணிகள் இல்லாமல் வாழ்ந்து வருவது இந்த நாட்டிலுள்ள எல்லோருக்கும் நன்றாக தெரியும். மட்டக்களப்பு வாழ் முஸ்லிங்களின் சனத்தொகைக்கும் அவர்கள் வாழும் காணிகளின் அளவுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிறது. காணி விடயத்தில் பாரிய சிக்கல்களை சந்தித்து வரும் ஒரு சமூகமாகவே மட்டக்களப்பு மாவட்டம் வாழ் முஸ்லிங்கள் வாழ்கின்றனர் என நாவலடி […]

திம்புள்ள பத்தன சந்தியில் பௌசர் – கார் விபத்து ! ஐவர் காயம்.

எரிபொருள் ஏற்றிச்சென்ற பௌசரும், காரொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர் என்று திம்புள்ள – பத்தன பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கள் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் திம்புள்ள – பத்தனை சந்தியில் வைத்தே நேற்றிரவு (12.08.2023) 10 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. வெலிமடையிலிருந்து கொட்டகலை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தேயிலை களஞ்சியசாலை வளாகத்துக்கு […]