இஸ்ரேலிய தொழில் வாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களுக்கு….

இலங்கையர்கள் எதிர்வரும் காலங்களில் இஸ்ரேலிய தொழில் வாய்ப்புகளுக்காக செல்ல வேண்டுமாயின் இஸ்ரேலிய மக்கள் தொகை, குடியேற்ற அதிகாரசபை மற்றும் வெளியுறவு அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என இலங்கை வெளி நாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – பலஸ்தீன் மோதல்களின் காரணமாக உருவாகியுள்ள பாதுகாப்பற்ற நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா குறிப்பிட்டார். இதனிடையே, இஸ்ரேலில் இருந்து வௌியேற வேண்டுமாயின், இலங்கை தொழிலாளர்களுக்கு அதற்கான […]

பல்கலைக்கழக விடுதிகளில் பகிடிவதை தொடர்பில் முறைப்பாடு

பல்கலைக்கழக விடுதிகளை இரவு வேளைகளில் சோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர், கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக விடுதிகளில் இடம்பெறும் பகிடிவதைகளை தடுப்பதே இதன் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 05 மணி வரையான காலப்பகுதியில் அதிகளவிலான பகிடிவதைகள் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக இராஜாங்க அமைச்சர் கூறினார். இதற்காக பல்கலைக்கழக ஒழுக்காற்று அதிகாரிகள் மற்றும் மாணவ ஆலோசகர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் […]

பண்டாரவளையில் பாடசாலை மாணவர்கள் ஒவ்வாமையினால் பாதிப்பு

பண்டாரவளையிலுள்ள பாடசாலை ஒன்றில் 30 க்கும் அதிகமான மாணவர்கள் உணவு ஒவ்வாமையினால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவு ஒவ்வாமையினால்  பாதிக்கப்பட்ட மாணவர்கள பண்டாரவளை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.    

இலங்கையில் எரிபொருளின் விலை அதிகரிக்கக்கூடிய சாத்தியம்

இலங்கையில் எரிபொருளின் விலை இஸ்ரேலில் தற்போது தொடர்ந்து வரும் போர் நிலமை காரணமாக அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர ஆரம்பித்துள்ளது. இதனால் இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலைகள் உயர்வடையக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஈஸ்ட் வெஸ்ட் சிட்டி கெம்பஸ் பட்டமளிப்பு விழா!

ஈஸ்ட் வெஸ்ட் சிட்டி கெம்பஸ் (EAST WEST CITY CAMPUS) பல்கலைக்கழகத்தின் 2022 – 2023 ஆண்டுக்கான வருடாந்த பட்டமளிப்பு விழா பலாங்கொடை டயமண்ட் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வானது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதோடு, EAST WEST CITY CAMPUS இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜேம்ஸ் எண்டர்சன் மற்றும் இரத்தினபுரி மாவட்ட தலைமை பொறுப்பதிகாரி மகேஸ்வரன் இந்திரராஜ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, கற்கை நெறிகளை […]

நீதி விசாரணை கோரி எதிர்வரும் 20 ஆம் திகதி ஹர்த்தால்!

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியமை தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால் இன ஒடுக்குமுறைக்குள்ளாகுவதை சுட்டிக்காட்டியும், கண்டித்தும் தமிழ்த் தேசிய கட்சிகள் இணைந்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 20ஆம் திகதி ஹர்த்தால் போராட்டத்தை நடத்தவுள்ளன. ஹர்த்தால் தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும் தமிழ்க் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நேற்று (09) இடம்பெற்றது. இதன்போதே எதிர்வரும் 20ஆம் […]

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு !!

நூருல் ஹுதா உமர் உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 600,000/= பெறுமதியான மானிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு பூர்த்தியாக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளர்  ஏ.பி. இராங்கனி அவர்களும், விசேட அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவஃப்பிகா, தேசிய வீடமைப்பு அதிகார […]

மன்னாரில் சுற்றுச் சூழலை பாதுகாக்க மன்னார் ஆயர் அழைப்பு!

( வாஸ் கூஞ்ஞ) -மன்னாரில் இடம்பெற்று வரும் சுற்று சூழலை அழிப்பதற்கு எதிராக தொண்டு நிறுவனங்களும், சர்வதேச நிறுவனங்களும், இயற்கைவள பாதுகாப்பு செயற்பாட்டாளர்களும், இயற்கைவள சட்டவாளர்களும், பொதுமக்களும் இணைந்து செயலாற்றுவதற்கு அழைப்பு விடுகின்றோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இவ்வாறு ஊடகங்கள் மூலம் அழைப்ப விடுத்துள்ளார். -மன்னார் வாழ்வுதய இயக்குனர் அருட்பணி செபமாலை அன்ரன் அடிகளார் தலைமையில் வாழ்வுதயத்தில் திங்கள் கிழமை (09) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது மன்னார் மறைமாவட்ட […]

தாய் நாட்டில் அந்நியர்களாக வாழ முடியாது மலையகத் தமிழர் இன அடையாளத்திற்கான மக்கள் செயலணி தெரிவிப்பு.

மலைவாஞ்ஞன்  மலையக மக்களின் இன அடையாளம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தற்போது முன் வைக்கப்பட்டு பேசும் பொருளாக மாறியுள்ளன. இந்நிலையில் மலையக மக்களின் இன அடையாளம் தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு அடையாளங்கள் இருந்துள்ளன..1911 முன் எங்களை ஒப்பந்த கூலிகளாக நாம் அடையாளப படுத்தப் பட்டோம் 1911 பின் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மக்கள் கணக்கெடுப்பு ஒன்று இடம்பெற்றது அப்போது அவர்களின் தேவைக்காக எங்களுக்கு வைத்த பெயர் தான் இந்திய தமிழர்கள் இந் நிலையில் நீண்ட காலமாக […]

நமக்கு ஒரு நியாயம் ! பிக்குக்கு ஒரு நியாயம் ! சாணக்கியன் ஆவேசம்!!

  மயிலத்தமடுவிலிருந்து சிங்கள இனவாதிகளால் விரட்டப்பட்ட அப்பாவித் தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன் கூறியதாவது மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலர் செங்கலடி பகுதியில் பாரிய போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர் தமிழர்கள் போராட்டம் செய்தால் அவர்களை அடக்குவதற்கு திரண்டிருக்கும் காவல்துறையினர் அம்பிட்டிய தேரர் அராஜகம் செய்த போது ஏன் கைக்கட்டி வேடிக்கைப் பார்த்தனர் என நாடாளுமன்ற […]