ரஷ்யா திரைப்பட விழாவில் முதல் இடத்தை பெற்ற மலையக தமிழனின் ” தேத்தண்ணி” – இயக்குநர் ஒனாசியஸ் பர்னாண்டோ

ரஷ்யாவில் நடைப்பெற்ற சர்வதேச இளைஞர்  கீனோ திரைபட விழாவில் நுவரெலியாவை சேர்ந்த ஒனாசியஸ் பர்னாண்டோ இயக்கிய ‘The Tea” குறும்படம் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வெற்றி இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் இலங்கை வருகையின்  200 வது வருடத்தில் கிடைப்பெற்றது தமக்கும் சமூதாயத்திற்கும் பெருமை என குறுந்திரைப்பட இயக்குநரான ஒனாசியஸ் பர்னாண்டோ கூறினார் ச   . ச இலங்கை குறுந்திரைப்படமான  தேத்தண்ணி( the Tea ) முதல் இடத்தைப்பெற்று வெற்றிப்பெற்றது , இதற்கு அனைத்து […]

மன்னார் புனித ஆனாள் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி குழு வங்காலை சுவிஸ் – மாணவர்களின் கல்விக்கு உதவி.

( வாஸ் கூஞ்ஞ) புலம்பெயர்ந்து சுவீஸ் நாட்டில் வாழும் வங்காலை புனித ஆனாள் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி குழுவானது கடந்த அன்மைக் காலமாக மன்னாரில் பலதரப்பட்ட அபிவிருத்தி பணிகளை வங்காலை புனித ஆனாள் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி குழுவின் பங்குபற்றுதலுடன் மேற்கொண்டு வருகின்றது. இதில் ஒரு கட்டமாக கடந்த செவ்வாய் கிழமை (08) மடு கல்வி வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கியுள்ள கிராமமான  மன்.சின்னப்பண்டிவிரிச்சான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள் வழங்கி வைக்கப்பட்டன. […]

திருகோணமலை கடலுக்கு சென்ற மீனவரை காணவில்லை!! தேடுதல் படகு இல்லையென கைவிரிப்பு!

அஷ்ரப் அலீ திருகோணமலை சீனன்வெளியிலிருந்து கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். திருகோணமலை சீனன்வெளியிலிருந்து கடலில் மீன்பிடிக்க படகில் நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை சென்ற மீனவர் ஒருவர் இதுவரை கரைதிரும்பாத நிலையில் காணாமல் போயுள்ளதாக ஈச்சலம்பற்று பொலீசார் தெரிவித்தனர். பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த உதுமாலெப்பை முஸ்தபா என்ற மீனவர் இவ்வாறு காணாமல் போயுள்ளார். குறித்த நபர் சம்பவதினமான நேற்று மாலை 5 மணிக்கு வழமைபோல மீன்பிடிக்க படகில் கடலுக்கு சென்று இரவு 11 மணிக்கு […]

மலையக எழுச்சி பேரணி மாத்தளையில் வெற்றிகரமாக நிறைவு!!

  பா.நாகேந்திரன் 1823ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மலையகத்தில் உள்ள தோட்டங்களில் வேலை செய்வதற்காக தென்னிந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட முதல் தொகுதி மக்கள் பயணித்த பாதையை மீட்டெடுக்கும் மலையக மக்களின் உரிமைகளை வலியுறுத்தும் மலைய எழுச்சி பேரணி இன்று சனிக்கிழமை (12) மாத்தளையில் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது. தலைமன்னார் முதல் மாத்தளை வரையான மலையக எழுச்சிப் பயணத்தின் நிறைவு நாளான இன்று சனிக்கிழமை (12) பிற்பகல் மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவிலான பேரணி மாத்தளையை அடைந்தது. மலையகம் 200ஐ முன்னிட்டு கடந்த […]

தலவாக்கலையே அதிர்ந்தது! தமிழ் முற்போக்கு கூட்டணியின் மக்கள் அலை திரண்டது !

மலையக மக்களின் 200 வரடகால வரலாற்றை நினைவுகூரும் வகையிலும், காணி உள்ளிட்ட இதர உரிமைகளை வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் நடைபேரணி இன்று (12.08.2023) முன்னெடுக்கப்பட்டது. ‘மலையகம் – 200, நாம் இலங்கையர்கள்’ எனும் மகுடவாசகத்துடன் முன்னெடுக்கப்பட்ட இப்பேரணியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். ஹட்டனில் இருந்தும், நுவரெலியாவில் இருந்தும் ஆரம்பமான பேரணிகள் தலவாக்கலை நகரில் சங்கமித்தன. அங்கு கூட்டமொன்றும் நடத்தப்பட்டது. அரசியல் தலைவர்களின் உரைகளும் இடம்பெற்றன. ஹட்டன் மணிகூட்டு கோபுர சந்தியில் ஆரம்பமான பேரணியில் […]

தலைமன்னார் புனித லோறன்சியாரின் பெருவிழா.

( வாஸ் கூஞ்ஞ) 11.08.2023 மன்னார் மறைமாவட்டத்தில் தலைமன்னார் ஊர்மனையின் பாதுகாவலராம் புனித லோறன்சியாரின் வருடாந்த ஆலய பெருவிழா தலைமன்னார் பங்குத் தந்தை அருட்பணி எஸ்.மாக்கஸ் அடிகளார் அவர்களின் ஒழுங்கமைப்பில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையின் தலைமையில் வியாழக்கிழமை (10) கூட்டுத் திருப்பலி இடம்பெற்றது. இதைத் தொடர்ந்து புனிதரின் திருச்சுரூப பவனியைத் தொடர்ந்து புனிதரின் திருச்சுரூப ஆசீரை ஆயர் வழங்குவதையும் கலந்து கொண்ட பக்தர்களின் ஒரு பகுதினரையும் படங்களில் காணலாம். (படம் தலைமன்னார்  […]

தமிழ் அரசியல் ஒட்டுண்ணிகள் இன்னுமொரு வரலாற்று தவறை செய்யக் கூடாது. – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்

  தமிழ் மக்கள் இந்த நாட்டிலே கௌரவமாக வாழ்வதை உறுதிப்படுத்துவது மற்றும் அனைத்து வகையான உரிமைகளுக்கும் உரித்துடையவர்களாக்குவது போன்ற எதிர்பார்ப்புக்களுடன் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தினை ஆரம்பித்தவர்களுள் ஒருவன் என்ற அடிப்படையில், தற்போது உருவாகியுள்ள சூழலை முன்னகர்த்துவதற்கு அனைத்து தமிழ் தரப்புக்களும் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். 13 ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்ப்படுத்துவது தொடர்பான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைய நாடாளுமன்ற உரை மற்றும் அதுதொடர்பாக பல்வேறு தமிழ் தரப்புக்களும் வெளியிட்டு […]

நாடாளுமன்றம் – நீதிமன்ற மோதலை ஏற்படுத்தவே ஜனாதிபதி முயற்சி : சாணக்கியன் குற்றச்சாட்டு!

நாடாளுமன்ற சிறப்புரிமையை ஆட்சியாளர்கள் தங்களுக்கு தேவையான முறையில் பயன்படுத்துகிறார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தைக் கூட அரசாங்கம் தமது தேவைக்காக பயன்படுத்துகின்றதா என்ற சந்தேகம் எமக்கு தற்போது எழுகின்றது. நாடாளுமன்ற சிறப்புரிமையை கூட இன்று ஆட்சியாளர்கள் தமது தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர். அண்மைக்காலச் செயற்பாடுகளை அவதானித்தால் நாட்டின் நீதிமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையில் குழப்பநிலையினை […]

ஓய்வுபெற்ற மற்றும் விலகிய ஆசிரியர்கள் மீண்டும் சேவையில்!!

ஓய்வுபெற்ற மற்றும் சேவையில் இருந்து விலகிய ஆசிரியர்களை மாகாண பாடசாலைகளில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன பாராளுமன்றத்தில் இன்று (11) எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிலாவெளி பெரியகுளத்தில் பௌத்த விகாரை நிர்மாண பணியை இடை நிறுத்தினார் கிழக்கு ஆளுநர் !

நூருல் ஹுதா உமர் திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் நிர்மாணப் பணிகளால் இனமுருகல்கள் ஏற்படும் என திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கிழக்கு மாகாண ஆளுநர்  செந்தில் தொண்டைமானுடைய கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து நிர்மாணிக்க இருக்கும் விகாரையின் பணிகள் ஆளுநரின் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டன. திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கவிருக்கும் பௌத்த விகாரையின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து பல சர்ச்சைகள் இடம்பெற்று […]