உத்தியோகபூர்வமாக அழைக்கவில்லை! ஜனாதிபதியின் கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை! வடிவேல் சுரேஷ் MP ( Audio)

ஜனாதிபதி அவர்கள் இன்றைய தினம் மலையக பிரதிநிகளை சந்தித்துள்ளார். ஆனால் இந்த சந்திப்பு தொடர்பாக உத்தியோகபூர்வ அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை அதனால் கலந்து கொள்ளவும் இல்லை என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் செயலாருமான வடிவேல் சுரேஷ் கூறுகிறார். ஆடியோ 1 இவ்வாறான சந்திப்புக்கள் தனியாக  இடம்பெற கூடாது மாநாடாக நடைப்பெற  வேண்டும் அதற்கு அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும். அந்த மாநாட்டில் கல்வி காணி உட்பட அனைத்து பிரச்சினைகளும் ஆராய்யப்பட […]

ஐந்து அம்ச கோரிக்கைகளுடன் ஜனாதிபதியுடன் பேச்சு! மலையக எம்.பிகளுக்கு அழைப்பு விடுக்கும் மனோ!

நேற்று பாராளுமன்றத்தில் நாம் கொண்டு வந்த மலையகம்-200 முழுநாள் விவாதத்தில் கலந்துக்கொண்ட எதிர்தரப்பு, ஆளுந்தரப்பு எம்பிக்கள் அனைவரும் மலையக மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என மிக உறுதியாக கருத்து தெரிவித்துள்ளனர். என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறுகிறார். இது தொடர்பாக அவரது முக நூல் பதிவில் இது ஒரு மிக சாதகமான சூழலையும், புதிய பல எதிர்பார்ப்புகளையும் உருவாகியுள்ளது. ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பரந்துப்பட்ட நிகழ்ச்சி நிரல் […]

மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் – மலையக பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

  நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதற்காக இரண்டு நூற்றாண்டுகளாக உழைத்து வரும் மலையக தமிழ் மக்களை தொடர்ந்தும் தனியான இனக் குழுவாக அன்றி இலங்கை சமூகத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இந்தப் பணி மிகவும் சவால் நிறைந்தது என்றாலும் இதனை இதற்கான வேலைத் திட்டமொன்று அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். மலையக தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார், […]

நாவலடி சட்டவிரோத காணிகளின் வேலிகள் அகற்றப்படுகிறது! ஆளுநர் செந்திலுக்கு நன்றி ! சாணக்கியன் MP!

நாவலடி சட்டவிரோத காணிகளின் வேலிகள் அதிரடியாக அகற்றப்படுகின்றது. இது மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். தொடர்ச்சியாக போராடுவோம். நாம் வெறுமனே மற்றவர்கள் போல் வாயால் வடை சுடுபவர்கள் அல்ல செயல் களத்தில் முன்னின்று மக்களுக்காக பாடுபடுபவர்கள்.¶ இதனை மக்களும் நன்கு அறிவார்கள். இவ் விடயத்தில் முன்னின்று செயல்பட்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கு எனது நன்றிகள். மட்டக்களப்பு மாவட்டத்திலும் சரி வட மற்றும் கிழக்கிலும் சரி மகாவலி அபிவிருத்தி சபையின் காணிப் பிரச்சனைகள் மற்றும் […]

யாழ் சிசுவின் சடலம் தொடர்பான விசாரணைக்காக மாநகர ஆணையாளர் உட்பட மூவருக்கு நீதிமன்றம் அழைப்பு!!

யாழ்ப்பாணம் ஆறுகால்மட பகுதியில் சிதைவடைந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக யாழ்.நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் 16ஆம் திகதி முன்னிலையாகுமாறு யாழ்.மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு கட்டளை வழங்கப்பட்டுள்ளது. ஆறுகால்மடம் , கோம்பயன்மணல் மயானத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றினுள் இருந்து நேற்றைய தினம் வியாழக்கிழமை சிதைவடைந்த நிலையில் சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , நேற்றைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் […]

கண்டி – மாத்தளை ரயில் சேவை இடைநிறுத்தம் ! ஆகஸ்ட் 18-21 சேவை நடைப்பெறாது!!

கண்டிக்கும் மாத்தளைக்கும் இடையிலான இரயில் சேவை அடுத்த வாரம் தற்காலிகமாக இடை நிறுத்தப்படும் என இலங்கை இரயில்வே திணைக்களம் கூறுகிறது. இதன்படி எதிர்வரும் 18  ஆம் திகதி நள்ளிரவு முதல் ஆகஸ்ட் 21 ஆம் அதிகாலை 4 மணி வரை ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும். கண்டிக்கும் கட்டுகஸ்தோட்டைக்கும் இடையலான ரயில் தண்டவாள பாரமரிப்பு பணி காரணமாகவே சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்படுகின்றன.  

ஏறாவூரில் வீடு திரும்பியவரிடம் பணம் பறித்த 3 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது!

(அஷ்ரப் அலீ) ஏறாவூரில் வேலை முடித்து இரவில் வீடு திரும்பி கொண்டிருந்த ஒருவரிடம் 6500 ரூபாவை பறித்தெடுத்த 3 பொலிசார் கைது !!! மட்டக்களப்பில் உணவகம் ஒன்றில் வேலை முடித்துவிட்டு ஏறாவூரிலுள்ள தனது வீட்டுக்கு இரவு 11 மணிக்கு திரும்பிக் கொண்டிருந்த ஒருவரிடம் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிசார் 6500 ரூபா பணத்தை பறித்தொடுத்த சமபவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 3 பொலிசாரை இன்று வெள்ளிக்கிழமை (11) அதிகாலையில் மாவட்ட குற்ற […]

கந்தபுரம் வாணி வித்தியாலய மாணவர்களுக்கு “இணைந்த கரங்கள்” உதவி

நூருல் ஹுதா உமர் வவுனியா கல்வி வலயத்தில் கந்தபுரம் வாணி வித்தியாலய மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அப்பாடசாலையின் அதிபர் ச. சண்முகரத்தினம் தலைமையில் இன்றைய  தினம் பாடசாலையின் மண்டபத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் பாடசாலையின் பகுதித்தலைவர் திருமதி. தனபாலசிங்கம் ஆசிரியர்கள் திருமதி. ப. சிவக்குமார், திருமதி. எஸ். தவநேசன் ஆகியோரும் இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான பெ. விவேகானந்தன், கோ. சிவானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், பாதணிகள் […]

ரணிலுடன் ராத்திரியில் பேச்சு!5 வருடங்களில் 7 பேர்ச் காணி கொடுக்காதது ஏன்? அலுத்கமகே கேள்வி (Video)

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய நண்பர்கள் நீங்கள் தற்போதும் இரவோடு இரவாக சென்று அவரோடு பேசுகிறீர்கள் ஆனால்  அது விஷயமல்ல .. கடந்த ஐந்து வருடங்களில். 5 வருடங்களில் உங்களால் 7 பேர்ச் காணி கொடுக்க முடியாமல் போனாது ஏன்? “ என்ற கேள்வியை கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்தானந்த அலுத்கமே தமிழ் முற்போக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே […]

புளூபீல்ட் தோட்டத்தொழிலாளர்கள் திங்கள் முதல் வேலை! பிணக்குகளை தீர்த்தார் ஜீவன்!

இறம்பொடை, புளூபீல்ட் தோட்டத்தில் நீண்டகாலமாக நிலவிவந்த தொழில் பிணக்குகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் தீர்வு காணப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வேலைக்கு செல்வதற்கு தொழிலாளர்கள் தீர்மானித்துள்ளனர். இறம்பொடை, புளூபீல்ட் தோட்ட தொழிலாளர்கள் பல மாதங்களாக பணி புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். தமக்கான ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன செலுத்தப்பட வேண்டும், சேவைக்கால கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பன உட்பட தொழில்சார உரிமைகளை கோரியே […]