இளைஞர் யுவதிகளுக்கு முதலுதவி பயிற்சி பட்டறை.

நூருல் ஹுதா உமர் மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீ லங்கா மற்றும் YMMA மாவடிப்பள்ளி கிளையின் ஏற்பாட்டிலும் டைடன் ஆசியன் கல்வி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பிலும் புனித சென்ஜோன்ஸ் அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் இளைஞர் யுவதிகளுக்கு முதலுதவி பயிற்சி பட்டறை நடைபெற்றது. மனித மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளரும், புனித சென்ஜோன்ஸ் படைப்பிரிவின் கல்முனை கோட்டத்தின் அத்தியட்சகருமான எஸ்.ஏ. முஹம்மட் அஸ்லம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சென்ஜோன்ஸ் படைப்பிரிவின் ஆணையர் கெப்டன். எம்.டி. நௌசாத்,டைடன் ஆசியன் கல்வி […]

தாமரை கோபுரத்தில் சுவடு எழுத போய் மாட்டிக்கிட்ட பெண்கள்! CCTV இணைப்பு

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தில் தமது பெயர்களையும், வாக்கியங்களையும் பொறித்த சில பெண்களுக்கு பொலிஸாரால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாமரை கோபுரத்தை பார்வையிட வந்த சில பெண்கள், கோபுர சுற்று தளத்தில் வாக்கியங்களையும் பெயரையும் எழுதிக் கொண்டிருந்ததை நிர்வாகம் அவதானித்துள்ளது. அவர்கள் எழுதிக்கொண்டிருந்தவை அங்குள்ள CCTV காட்சிகளிலும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், குறித்த குழுவினர் தொடர்பில் மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, அக்குழுவினர் நேற்று (09) பிற்பகல் அங்கு வரவழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.    

மன்னார் இலுப்பகடவையில் வால்வெட்டு சம்பவம்! 4 பேர் கைது!

மன்னார், இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூன்றாம்பிட்டி பகுதியில் 50 வயது பெண்ணொருவர் மீதும், 27 வயது இளைஞர் ஒருவர் மீதும் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (09) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் முதலில் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பாலியாறு, மூன்றாம்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த […]

அக்கரைப்பற்றுவில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு !

நூருல் ஹுதா உமர் அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும்  அக்கரைப்பற்று பிரதேச செயலக முஸ்லிம் கலாசார அலுவல்கள் பிரிவு இணைந்து ரமழான் மாதம் அக்கரைப்பற்று பெரியபள்ளிவாசலில் நடாத்திய “Blessed Ramadhan students’ programme” கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச செயலக முஸ்லிம் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.எம்.முக்தார் ஹுசையினின் ஒருங்கிணைப்பில் அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்இடம்பெற்றது. அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்சாரின் வழிகாட்டலில் உதவி […]

மருதமடு பெருவிழாவை முன்னிட்டு விசேட ரயில் சேவை!!

( வாஸ் கூஞ்ஞ) முன்பு வழமையாக நடைபெற்றுக் கொண்டிருந்த   கொழும்பு தலைமன்னார் புகையிரத சேவை தற்பொழுது இடை நிறுத்தப்பட்டுள்ளபோதும் இம்மாதம் ஆவணி மாதம் மருதமடு பெருவிழாவுக்காக விஷேட புகையிரத போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் ஊடகங்களுக்கு தெரிவித்தார். கொழும்பிலிருந்து காலை 6.40 க்கு புறப்படும் புகையிரதம் அனுராதபுரத்துக்கு வருகைதந்து பின் மடு பெருவிழாவை முன்னிட்டு அங்கிருந்து இதன் தொடர் சேவை மடு வீதிக்கு […]

அதிகாரங்கள் எமது கரங்களுக்குத் தரப்பட வேண்டும் : சாணக்கியன் வலியுறுத்தல்!

எமக்கான அதிகாரங்கள் எமது கைகளில் தரப்பட்டால் மாத்திரமே எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சரவையில் ஒரு தமிழர் ஒருவர் அமைச்சராக அங்கத்துவம் வகித்தாலும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. இந்தக் காரணத்தினாலேயே, தமிழர்கள் அதிகாரப் பரவலாக்கலை கோருகிறார்கள். உண்மையில் மீன்பிடித்துறை அமைச்சரிடம் கிழக்கு […]

மருதமடு ஆவணி திருவிழா ஏற்பாடுகளில் திருப்தி! ஆயர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

( வாஸ் கூஞ்ஞ) 09.08.2023 எதிர்வரும் ஆவனி மருதமடு பெருவிழாவுக்காக பக்தர்கள் தற்பொழுது வந்த வண்ணம் காணப்படுகின்றனர். ஏழு லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் இவ் விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது என இது தொடர்பாக நடைபெற்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. எதிர்வரும் ஆவணி மாதம் 15ந் திகதி (15.08.2023) நடைபெற இருக்கும் மன்னார் மறைமாவட்டத்தின் யாத்திகர் ஸ்தலமாக விளங்கும் மருதமடு அன்னையின் பெருவிழா தொடர்பாக மடு பரிபாலகர் கேட்போர் கூடத்தில் முன்னெடுக்க்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. […]

ஜனாதிபதி ரணிலின் நடவடிக்கைகள் அற்புதமானது ! ஆதரவு வழங்குவது தேவையானது! அமைச்சர் டக்ளஸ்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் நடவடிக்கைகள் அற்புதமானவை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு, வடக்கு கிழக்கில் அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய விசேட உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் […]

” நாட்டில் இருக்கிற பிரச்சனையே போதும், புதிய பிரச்சினை தேவையில்லை – த.மு.கூ தலைவர் மனோ

மாகண சபை முறை அரசியலமைப்பிற்குள் வந்துவிட்டது அதரை இனி அகற்ற முடியாது , அதிகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம், இதற்காக புதிய பிரச்சினைகளை உருவாக்காதீர்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். பாரளுமன்றத்தில் இன்று 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய விசேட உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார். மாற்றம் ஒன்றை கொண்டு வர யோசனை முன்வைத்தால் எதிரதரப்பு […]

நாட்டின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். இதனை அடைவதற்கு திறந்த மனதுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி, நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(09.08.2023) ஆற்றிய விசேட உரையில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். மேலும் கூறுகையில்,13 ஆவது திருத்தத்தில் உள்ள குறைபாடுகளை நாங்கள் பார்க்க வேண்டும். ஏனைய நாடுகளின் அதிகாரப் பகிர்வை நாங்கள் ஆராய வேண்டும். […]