பளை இயக்கச்சியில் தொடரும் மணல் கொள்ளை! தடுக்க எவரும் இல்லை!

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சியில் சட்டவிரோத மணல்  அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து வெறும் ஒன்றரை மீற்றர் உயரமே கொண்ட இயக்கச்சி பிரதேசத்தின் ஆற்று சமவெளி பகுதிகளில் இருந்து தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான மண்ல்  அகழப்பட்டு யாழ்ப்பாணத்தை  நோக்கி கொண்டு  செல்வதாக கிராம மக்களால் தெரிவிக்கப்படுகிறது. குறித்த மணல் அகழ்வை உடனடியாக தடுக்காவிட்டால் மிக விரைவில் இயக்கச்சி பிரதேசத்தின் நிலங்களும்  மாற்றமடைந்து மக்கள் வாழ முடியாத […]

நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் மெதுமெதுவாக மீண்டும் ஆரம்பம்!

பிரதான புகையிரத பாதையின் வில்வத்த புகையிரத கடவையில் ரயில் ஒன்று கொள்கலனுடன் மோதியதில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் புகையிரத இயந்திரத்திற்கு கோடிக்கணக்கில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், ரயில்வே துணைப் பொது மேலாளர் எம்.ஜே.இதிபொலகே தெரிவித்தார்.   புகையிரத இயந்திரம் பாரிய சேதம் ஏற்பட்டமையினால் இயந்திரத்தை மற்றுமொரு இயந்திரம் மூலம் இழுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதற்குப் பின்னரே ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும் இன்று (09) காலை இடம்பெற்ற […]

அம்பாறை பாடசாலைகளில் பாலியல் துஷ்பிரயோக விழிப்புணர்வை நடத்த முடிவு!,

நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ்  அவர்களின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக கல்முனை பிராந்திய பாலியல் நோய்கள் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.என்.எம். தில்ஸான்  அவர்களினால் அம்பாறை மாவட்ட  எய்ட்ஸ் கமிட்டி கூட்டம் கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சார்பில் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.பீ அப்துல் […]

ஹட்டன் துயர் சம்பவம்! இளம் யுவதி மரணம்!

(க.கிஷாந்தன்) கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலக்கம் 20 என்ற சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதியொருவர் (09) காலை உயிரிழந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். அட்டன் மல்லியப்பு பகுதியில் பதுளை நோக்கி சென்றுக் கொண்டிருந்த குறித்த புகையிரதத்தில் பாய்ந்து இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் டயகம பிரதேசத்தை சேர்ந்த கணபதி அனுஷா தர்ஷனி என்ற 28 வயதுடைய யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த யுவதி அட்டன் நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் […]

கல்முனை சேவகன் டாக்டர் டேனியலுக்கு பிரியாவிடை!

நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் தர முகாமைத்துவப்பிரிவின்  பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடமையாற்றி பல்வேறு செயற்றிட்டங்களுக்கும் கருத்திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கி பிராந்தியத்தின் தரப்படுத்தலில் அதிக பங்கு வகித்த டாக்டர் பி.ஜி.பி. டேனியல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்று செல்கின்றார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும் அதன் உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் அவரின் சேவையை பாராட்டி பிரியாவிடை வழங்கும் நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் ஆலோசனைக்கமைவாக பிரதி பணிப்பாளர் […]

நானுஓயா டெஸ்போர்ட் தோட்டத்திற்கு சென்ற பிரான்ஸ் தூதுவர்!

டி சந்ரு நானுஓயா டெஸ்போர்ட் தோட்டத்தில் எடை குறைந்து பிறந்த 22 குழந்தைகளின் குடும்பங்களுக்கு பிரான்ஸ் தூதுவர் போசாக்கு உணவு பொதிகள் வழங்கி வைத்தார். பிரான்ஸ் நாட்டு நிதியுதவியுடன் நானுஓயா டெஸ்போர்ட் தோட்டத்தில் போசாக்கு குறைவினால் எடை குறைந்து பிறக்கின்ற குழந்தைகளுக்கு போசாக்கு உணவு பொதிகளை டெஸ்போர்ட் தோட்ட சுகாதார பிரிவினரால் மாதாந்தம் தொடர்ந்து வழங்கி வைழங்கி வந்துள்ளனர். அந்த வகையில் நேற்று (7) திங்கட்கிழமை பிரான்ஸ் தூதுவர் ஜீன் பன் கோஸ் பெடா அவர்கள் நேரடியாக […]

எதிர்கால சந்தினர் மீது அதிகம் அக்கறைக்காட்டப்பட வேண்டும். மன்னார் பிரஜைகள் குழு.

(வாஸ் கூஞ்ஞ) வெளிநாடு அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்று மன்னாரில் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு எவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கலாம் என்ற ஆலோசனை பெறுவதற்கு மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு ஆளுநர் சபை உறுப்பினர்களை சந்தித்தது. திங்கள் கிழமை (07) காலை மன்னார் பிரஜைகள் குழு அலவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பானது மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி எஸ்.மாக்கஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்றபோது சர்வதேச கிறியேற்றிவ் அசோசியேசன் திட்டப் பணிப்பாளர் மத்தியு விற்றிங் இதில் கலந்து கொண்டார். இதன்போது கலந்து […]

தனது ஓய்வு தொடர்பில் – வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம்

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கையின் பிரபல வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் அறிவித்துள்ளார். இலங்கையின் வலைப்பந்தாட்ட அணியின் வெற்றிக்காக நான் பலவருடங்களாக பங்களிப்பு செய்துள்ளேன், எனக்கு தற்போது 45 வயது ஆசியாவில் வேறு எந்த பெண் வீராங்கனையும் இவ்வளவு காலம் வலைபந்தாட்டத்தில் ஈடுபட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 2023 உலககிண்ணப்போட்டிகளின் பின்னர் நான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளேன்,என அவர்தெரிவித்துள்ளார். அதேசமயம் இலங்கை அணி நாடு திரும்பினால் கூட நான் அவர்களுடன் இலங்கை வரமாட்டேன் […]

இணக்க அரசியல் என்பது பிரச்சினைகளை இலகுவாக தீர்ப்பதற்கான பொறிமுறையாக இருக்க வேண்டும். – அமைச்சர் டக்ளஸ்

  தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வுகளும் ஆடையாளப்படுதல்களும் இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களினதும் கலாசார தொன்மைகளையும் வரலாறுகளையும் பேணிப் பாதுகாப்பதாக அமைய வேண்டுமே தவிர, எரியிற நெருப்பிற்கு எண்ணை ஊற்றுவதாக அமையக் கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று(07.08.2023) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே கடற்றொழில் அமைச்சர், தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளார். சுழிபுரம் பறாளை முருகன் ஆலயம் உட்பட யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் 3 தொல்லியல் […]

மாற்று மின்சாரத்தை உடனடியாக கொள்வனவு செய்யாவிடின் மூன்று மாவட்டங்களில் மின்வெட்டு! கஞ்சன எச்சரிக்கை

சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து உடவளவை நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்து விடப்படுவதால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதியளவில் சமனல ஏரி நீர்த்தேக்கத்தில் மின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்  கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (08) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய அமைச்சர் இதனை தெரிவித்தார். “ஓகஸ்ட் 16ஆம் திகதியளவில் சமனல ஏரி நீர்த்தேக்கத்தில் இருந்து மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்படும். இது முற்றாக நிறுத்தப்பட்ட பின்னர், மாற்று மின்சாரத்தை கொள்வனவு […]