நுவரெலியா டொப்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு – இருவர் மரணம்

டி.சந்ரு செ.திவாகரன்   நுவரெலியா டொப்பாஸ் பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் என்டன்தாஸ் வயது (32) நாதன் ரீட்டா வயது (32) எனவும் இருவரும் கணவன் மனைவி எனவும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் சந்தேகநபர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு இடம்பெற்ற இடத்தில் உள்நாட்டில் தயாரிப்பு செய்த துப்பாக்கி ஒன்றினை பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. […]

ஜனாதிபதியுடனான மலையக கட்சிகளின் சந்திப்பு ஒத்திவைப்பு! தினம் பின்னர் அறிவிப்பு, என மனோவுக்கு தெரிவிப்பு!

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய வம்சாவளி மலையக கட்சிளுக்கும்,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் 11ம் திகதி  வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்திப்பை நடத்த, ஜனாதிபதி செயலகம் விடுத்த அழைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதக. தமுகூ தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 12ம் திகதி நுவரெலியாவில், தமிழ் முற்போக்கு கூட்டணி, மலையகம்-200 தொடர்பில் நடத்த உள்ள, “நாம் இலங்கையர்” பேரணி காரணமாக, கூட்டணி எம்பிகள் 11ம் திகதி  கொழும்பில் இல்லாத காரணத்தாலும், 10ம் திகதி, பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள்  தொடர்பில் பாராளுமன்றத்தில், […]

சீனக்குடாவில் பயிற்சி விமானம் விபத்து! விமானப்படை வீரர்கள் இருவர் மரணம்!

இலங்கை விமானப்படையின் பயிற்ச்சி  விமானம் சீனக்குடா விமானப்படை தளத்தில் விபத்துக்குளானது. சீனக்குடா இலங்கை விமானப்படை தளத்தில் அமைந்துள்ள  இல 01 விமான பயிற்ச்சி  படைப்பிரிவிற்கு உரிய  PT -6 ரக விமானம்   விமான பரீட்சனைக்காக  இன்று முற்பகல் 11.25 மணிக்கு  சீனக்குடா விமான ஓடுபாதையில் பயணித்து  11:27 மணியளவில்  சீனக்குடா விமானப்படை தள பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை அறிவித்துள்ளது. இதன்போது விமானத்தில் பயணித்த இரண்டு அதிகாரிகள் உயிர் இழந்துள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப்படைத் […]

” பாடல் இசைக்க உடுக்கை அடிக்க தொடர்கிறது எழுச்சி மலையகம் நடைப்பயணம்” (வீடியோ உள்ளே)

  மாண்புமிகு மலையக மக்களின் ” எழுச்சக மலலயகம் நடைப்பயணம் இன்று மிகிந்தலையிலிருந்து திரப்பனை (18 km) நோக்கி இடம்பெற்றுவருகிறது. பாடல் இசைக்க, உடுக்கை அடிக்க, நடனம் ஆடியவாறு நடைபயணத்தை மேற்கொண்டுவரும மலையக மக்களை வரவேற்க வீதிகளில் மக்கள் நின்றிருந்தனர். தலலமன்னாரில் இருந்து ஆரம்பமான இந்த நடைப்பயணம் 10 வது நாளாக இடம்பெறுகிறது.   நன்றி மாற்றம்

300 கோடியையும் மலையக கல்வி வளர்ச்சிக்கே பயன்படுத்துக – இந்திய தூதுவரிடம் மனோ வலியுறுத்தல்

  இந்திய தூதரகத்தில் அமைந்துள்ள பல்லாண்டு கால பழைமை வாய்ந்த மலையக கல்வி அறக்கட்டளையை புதுப்பித்து நோக்கங்களை விரிவாக்கம் செய்யுங்கள். அதில் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து இந்திய வம்சாவளி மலையக எம்பிகளையும், மலையக கல்வியியலாளர்களையும், சமூக முன்னோடிகளையும், மலையக கல்வி அபிவிருத்திக்காக பணியாற்றும் மன்றங்களையும் ஒன்றிணையுங்கள். இந்திய அரசாங்கம், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பான நலத்திட்டங்களுக்கு என பெயரிட்டு தர உறுதியளித்துள்ள இலங்கை ரூபாய் 300 கோடி நன்கொடை முழுவதையும், இலங்கை […]

பெரியநீலாவனை முஸ்லிம் பிரிவு பொதுமக்களுடன் கலந்துரையாடல்!.

நூருல் ஹுதா உமர் பெரியநீலாவனை முஸ்லிம் பிரிவு மக்களுடன் அப்பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கிராம நிலதாரி பிரிவில் வாக்காளர்களை புதிதாக பதிவு செய்வது தொடர்பிலானதும், மற்றும் அவசர நடவடிக்கைகள் தொடர்பிலானதுமான கலந்துரையாடல் கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி தலைமையில் பெரியநீலாவனை கமு/கமு/ புலவர்மணி சரிபுதீன் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது. ¶ இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரிஸ், கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எ.எம். […]

மருதமடு அன்னையின் ஆலய கொடியேற்றம்

( வாஸ் கூஞ்ஞ) மன்னார் மறைமாவட்டத்தில் புனித ஸ்தலமாக விளங்கும் மருதமடு அன்னையின் ஆவணி மாதம் 15 ஆம் திகதி நடைபெற இருக்கும் பெருவிழாவை முன்னிட்டு 06.08.2023 அன்று ஞாயிற்றுக்கிழமை மடு அன்னை ஆலயத்தில் கொடியேற்றம் இடம்பெற்றது பாப்பரசர் கொடியை மன்னார்  மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளாரும் அன்னையின் ஆலயக்  கொடிகளை. மடு பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார் மற்றும் சகோதர மொழி பேசும் அடிகளார் ஒருவரும்  ஏற்றி வைத்தனர் இதைத் தொடர்ந்து ஒன்பது […]

ஏழரை கோடி ரூபா பணப்பரிசு பெற்ற நபரை கடத்தி சித்திரவதை

ஏழரை கோடி ரூபா பணப்பரிசை அதிர்ஷ்டலாப சீட்டில் பெற்ற நபரை கடத்தி சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நபரை கடத்தி சென்ற குழுவொன்றை கம்பளை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் கம்பளை குற்றப் புலனாய்வு பிரிவினர் இணைந்து கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட நபரை அவர்களிடமிருந்து காப்பாற்றியுள்ளனர். பணப் பரிசை வெற்றி பெற்ற, அக்குறணை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே கடத்தப்பட்டு கம்பளையில் உள்ள வீடொன்றில் பத்து நாட்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர் கூறுகையில்,”கடந்த மாதம் […]

கழிவுகளை முகாமை செய்யும் முயற்சியில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை !!

நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக கல்முனை பிராந்திய பொது சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ஏ.எம் ஹில்மி அவர்களினால் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை  முகாமைத்துவம் செய்வது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் சுகாதார பணிமனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சார்பில் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் எம்.பி.ஏ வாஜித் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பிரிவு தலைவர்களும், […]

சட்டவிரோதமாக தங்கியிருந்த 62 இலங்கையர்களை திருப்பி அனுப்பிய குவைத்!!

விசா மற்றும் உரிய பத்திரங்கள் எதுவுமின்றி சட்டவிரோதமான முறையிவ் மறைந்து வாழ்ந்து வந்த 62 இலங்கையர்களை குவைத் அரசாங்கம் நாடு கடத்தியிருக்கிறது. இவர்களில் 59 பேர் வீடுகளில் வேலை செய்பவர்கள். இவர்கள் KD250  ஐ சம்பளமாக பெற்று வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கான  தற்காலிக கடவு சீட்டினை குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் வழங்கி இருக்கிறது. நன்றி நியூஸ் வயர்