ஹட்டன் தரவளை தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது!!

க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தரவளை தோட்டத்தில், கஞ்சா செடியை வளர்த்த சந்தேக நபர் ஒருவரை, அட்டன் பொலிஸார், கைது செய்துள்ளனர்.   அட்டன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த சந்தேக நபரின் வீட்டுப் பகுதியை சுற்றி வளைத்த பொலிஸார், அங்கு தேடுதலில் ஈடுப்பட்ட போது, பூந்தோட்டத்தில் வளர்க்கப்பட்ட இரண்டரை அடி உயரமான ஒரு கஞ்சா செடி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, இவரை அட்டன் நீதவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக, அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார் நறுவலிக்குளத்தில் மக்கள் போராட்டம்! தம்மை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு!

(வாஸ் கூஞ்ஞ) மன்னாரில் இரண்டாம் கட்டமாக அமைக்கப்பட்ட மின் காற்றாலை அமைச்ரால் திறந்து வைக்கப்பட்டது.. அமைப்புக்களின் அனுமதியுடன் இவை அமைக்கப்பட்டபோதும் ஏமாற்றப்பட்ட நிலையிலேயே மக்கள் திண்டாடுகின்றார்கள் என மக்கள் இதன் திறப்பு விழாவின்போது எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். மன்னார் மாவட்ட்தில் இரண்டாம் கட்டமாக மன்னார் பெரும்நிலப்பரப்பில் நறுவலிக்குளத்திலிருந்து அச்சங்குளம் வரை கடற்கரையோரப் பகுதியில்  ஆறு காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து மின் விநியோகத்தை ஞாயிற்றுக்கிழமை (06) காலை மின்சக்தி அமைச்சர் காஞ்சனா விஜயசேகர அவர்களால் […]

குறுகிய காலத்தில் பாரிய சேவை செய்த ஆளுநர் செந்திலை பாரட்டிய பிரதமர்!

நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை,மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களின், உணவு பாதுகாப்பு கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர்கள், அந்ததந்த மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர். இதன்போது, நேற்று ஆளுநர் செயலகத்திற்கு விஜயம் செய்த பிரதமர்,செந்தில் தொண்டமான் ஆளுநராக பொறுப்பேற்று இரண்டு மாதக்காலங்களில் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கிழக்கு மாகாணத்தில் காணப்படும் […]

நடைப்பயணம் குறித்து தலைவர் திகாம்பரம் தலைமையில் ஆலோசனை

தமிழ் முற்போக்கு கூட்டணி எதிர்வரும் 12 ஆந் திகதி நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பாடு செய்துள்ள மலைகம் 200.நடைபயணம் தொர்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு தெளிவு படுத்தும் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பிருமான  .பழனி திகாம்பரம் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நடைப்பயணம் குறித்து பல்லேறு ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன.

எவ் சமூகமாகமாயினும் சட்டவிரோதமாக காணிக் கொள்ளைகளில் ஈடுபடுவது குற்றம் குற்றமே!

எவ் சமூகமாக இருப்பினும் சட்டவிரோதமாக காணிக் கொள்ளைகளில் ஈடுபடுவது குற்றம் குற்றமே. வெளியில் பிரதேசவாதம், சமூகவாதம், இனவாதம் கதைத்து மக்களை பிரித்து தங்கள் சுய தேவைகளை மறைமுகமாக பெறுகின்றனர்.   என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இன்றைய தினம் காலையில் மட்டக்களப்பு நாவலடிப்பகுதியில் (கொழும்பு வீதியில்) அத்துமீறி சட்டவிரோதமாக பிடிக்கப்படும் காணிகள் தொடர்பான விடயங்களை ஆராயவும் தடுக்கவும் இன்றைய தினம் திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த அவர் மேலும் தெரிவிக்கையில். நாவலடி பிரதேசத்தில் பாரியளவில் சட்ட விரோத காணிக் கொள்ளை […]

மலையக எழுச்சி பயணத்திற்கு மிஹிந்தலையில் சர்வமதத்தலைவர்கள் வரவேற்ப்பு!

9 வது நாளாக இன்று காலை மதவாச்சியிலிருந்து ஆரம்பித்த மாண்புமிகு மலையக மக்களின் நடைபயணம் மிகிந்தலையை வந்தடைந்தபோது சர்வமதத் தலைவர்களால் வரவேற்கப்பட்டது   ரம்பேவ பகுதியைச் சேர்ந்த மக்கள் எழுச்சி பயணத்தில் கலந்துகொண்டிருப்பவர்களை வரவேற்று உபசரிப்பதோடு நடைப்பயணத்தின் ஏற்பாட்டாளர்கள்  சார்பில் நடைபயணம் பற்றி பாடசாலை சிறுவர்களுக்கு தௌிவுபடுத்தலும் வழங்கப்பட்டது. படங்கள் தகவல் மாற்றம்

அக்கரைப்பற்று பெரியபள்ளிவாசலில் சிறுவர் பூங்கா திறந்து வைப்பு!

கடந்த காலங்களில் அதிகளவான இளைஞர்கள் பள்ளிவாசலுக்கு வருகைதருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பெற்றோர்களுடன் இணைந்து மேற்கொண்டோம். இன்றைய இளைஞர்கள் பள்ளிவாசலில் தொழாமல் இங்கு நடைபெறும் திக்ருகளை நாவினால் மொழியாமல், பாயான்களை (மார்க்க விடயங்களை) காது கொடுத்து கேட்காமல் நல்ல சமூதாயத்தை உருவாக்கிவிட முடியாது என அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம் சபீஸ் தெரிவித்தார். சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா அக்கரைப்பற்று பெரியபள்ளிவாசலில் இன்று திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கருத்து வெளியிட்ட அவர் அதேபோன்று சிறுவயது முதல் குழந்தைகளை […]

ஊடகவியலாளர் சித்தீக் மீது தாக்குதல்! தாய்மடி ஓய்வில்லமும் சேதம்!.

நூருல் ஹுதா உமர் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் அம்பாறை பிராந்திய செய்தியாளரும் , “டுடே சிலோன்” ஊடக வலையமைப்பின் பிரதம செய்தி ஆசிரியருமான எஸ்.எம். இஸட். சித்தீக் நேற்று இரவு 07.15 மணி அளவில் இனம் தெரியாத சிலரினால்  தாக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் தெரியவரும் விடயமானது ; குறித்த செய்தியாளருக்கு சொந்தமான இறக்காமத்தில் காணப்படும் “தாய்மடி” எனும் ஓய்வகத்திற்கு முன்பாக  மறைந்திருந்து இனந்தெரியாதோர் தாக்கிய போதும்  தலைக்கவசம் அணிந்திருந்ததனால் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு […]

” சாக்லெட்டுக்குள் மனித விரல்” மஹியங்கனையில் பரப்பரப்பு!

மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் ஊழியர் ஒருவரினால் வைத்தியசாலையின் உணவு விடுதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரபல வர்த்தக நாமமான சாக்லேட் ஒன்றினுள் மனித உடலிலிருந்து பிரிக்கப்பட்ட பெருவிரலின் ஒரு பகுதி நேற்று (05) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டது. இதனை அடுத்து பொது சுகாதாபரிசோதகரின் விசேட பரிசோதனைக்கு குறித்த சம்பவம் அறிவிக்கப்பட்டதுடன் உணவகத்தை ஆய்வு செய்த பொது சுகாதார ஆய்வாளர்கள், அந்த சாக்லேட் தயாரிப்பு தொடர்பான வகையைச் சேர்ந்த மற்ற சாக்லேட் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். வைத்தியசாலை […]

காடுகளை கையகப்படுத்தும் நடவடிக்கையை தடுத்தார் கிழக்கு ஆளுநர் ! செயலில் இறங்கினார் “செயல்வீரர்” கருணாகரம் MP

மட்டக்களப்பு , நாவலடி – பொலநறுவை பிரதான வீதியை அண்டிய காடுகளை தீயூட்டி காணிகளை கையாளும் நடவடிக்கையை கிழக்கு மாகண ஆளுநர்  செந்தில் தொண்டமான் தடுத்துள்ளார். காடுகளை நெருப்பூட்டி கையகப்படுத்தும் நடவடிக்கையை கேள்விப்பட்ட  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஜனா கருணாகரம்  உடனடியாக கிழக்கு மாகண ஆளுனரின் கவனத்திற்கு நேற்றிரவு கொண்டு வந்துள்ளார். ஆளுனரான செந்தில் தொண்டமான் உடனடியாக பாதுகாப்பு மற்றும் வனவளத்துறையுடன்  கலந்துரையாடி  அத்துமீறலை தடுத்து இருப்பதாக கருணாகரம் எம்ஃபி தனது முக நூலில் கூறி […]