தமிழ் முற்போக்கு கூட்டணியின் “மலையகம் 200” நடைப்பயணத்திற்கு இ.தொ.கா ஆதரவு வழங்குமா?

தமிழ் முற்போக்கு கூட்டணியால் எதிர்வரும் 12 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடை பயணிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கினால் அதனை வரவேற்போம் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். சூரியன் வானொலியின் விழுதுகள் நிகழ்ச்சியில் இந்த கருத்தை அவர் கூறி இருந்தார்.   எவ்வாறாயினும் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் இதுவரை எந்த பதிலையும அளிக்கவில்லை. இதனால் நடைப்பயணத்திற்கு ஆதரவு வழங்குமா […]

” மலையக எழுச்சியை குழப்பாதீர்கள்” அருட்தந்தை சக்திவேல் தமிழ் முற்போக்கு கூட்டணியிடம் கோரிக்கை!!

தமிழ் முற்போக்கு கூட்டணியால் எதிர்வரும் 12 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள நடை பயணத்தை ஒத்திவைக்குமாறு மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட் தந்தை மா.சத்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார். மலையகம் 200 என்பது மலைகத் தமிழர்களின் வரலாற்றுப் பயணத்தின் பெரிய அடையாளம்.இதனை வரலாறாக்கி வரலாறு படைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு மலையத்தவருக்கும் உண்டு.அது ஒரு கூட்டு பொறுப்பு.அது ஒரு வரலாற்றுக் கடமை.வரலாற்றுக் கடமையுணர்வுடன் இதனை அடையாளப்படுத்தும் முகமாக நாம் நடத்தும் நிகழ்வுகள், செயற்பாடுகள் மலையக […]

தமது அங்கத்துவர்களின் பிள்ளைகளுக்கு புலமைபரிசில் வழங்கிய ஆசிரியர் விடுதலை முன்னணி!

ஆசிரியர் விடுதலை முன்னணியால் தமது அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (5) சனிக்கிழமை நுவரெலியா புனித சவேரியார் கல்லூரி மண்டபத்தில், சங்கத்தின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தலைமையில் நடைப்பெற்றது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த முன்னணியின் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கும் அதேபோல க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த முன்னணியின் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் முன்னணியின் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கும் இப்புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா […]

மின்சார கட்டணம் மீண்டும் அதிகரிக்குமா?

மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் மின்சார கட்டணத்தை உடனடியாக மீண்டும் ஒருமுறை அதிகரிக்க வேண்டும் என மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் இந்த வருடத்தின் அடுத்த சில மாதங்களில் செலவுகளை ஈடுகட்ட முடியாது எனவும் மின்சார வாரிய பொது மேலாளர் ஜி.ஏ.டி.ஆர்.பி. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் கறுப்பு தினம் : ஐ.நா. காரியாலய முன்றலில் போராட்டம்!

நூருல் ஹுதா உமர் காஷ்மீர் விடுதலைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் காஷ்மீர் கருப்பு தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு காரியாலயத்தின் முன்னாலும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய முன்றலிலும் இன்று சனிக்கிழமை (05) பதாதைகளை ஏந்திக் கொண்டு காஷ்மீர் விடுதலைக்கான அமைப்பினர் கொழும்பு மாநகர சபை ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் சார்பிலான மாநகர சபை முன்னாள் உறுப்பினர் கலீலுர் ரஹ்மான், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் முஸம்மில் ஆகியோரின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.   ஜம்மு […]

வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு! அதிகளவு நீரை பருகுமாறு அறிவுறுத்தல்

இலங்கையின் பல பாகங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு  கடுமையான உஷ்ணம் ஏற்படும் எனவும் இதனால் அதிகளவு  நீரை பருகுமாறு சுகாதர அதிகாரிகள் அறிவிறுத்தியுள்ளனர் குறிப்பாக  மட்டக்களப்பு 30°C- 35° C திருகோணமலை 37°C அநுராதபுரம் 39°C யாழ் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் வெப்பநிலை 35°C வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு இருக்கும் உடல வெப்பநிலையை கட்டுப்படுத்த அதிகளவு நீரை பருகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“யாழ் நிலா” புறப்பட்டது …இனிமையாக பயணிக்கலாம்!

கல்கிஸ்ஸை – காங்கேசன்துறைக்கும் இடையில் ‘யாழ்நிலா’ என்ற புதிய விரைவு சேவை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இம்மாதம் 18ஆம் திகதிக்கு பின்னர் நல்லூர் கோவிலின் திருவிழா காலத்தை முன்னிட்டு தினமும் இந்த ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்.

அரச நிதி நிர்வாகம் தொடர்பான அதிகாரம் பாரளுமன்றத்திடம் மட்டுமே! ஜனாதிபதி ரணில்

அரச நிதி நிர்வாகம் தொடர்பான அதிகாரம் பாராளுமன்றத்திடம் மட்டுமே உள்ளது. எனவே, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தை தவிர்ந்த வேறு எவருடையதும் யோசனைகளையோ நிபந்தனைகளையோ ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சம்பிரதாய அரசியல் முறைமைகள் ஊடாக நாட்டில் அராஜக நிலையை ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை என்றும் அபிவிருத்தி அடைந்த இலங்கையை உருவாக்குவதாக ஏற்றுக்கொண்ட சவாலை அவ்வண்ணமே நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார். இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று (04) நடைபெற்ற தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் […]

மலையக மக்களின் உரிமைக்காக அணித்திரள்வோம்! லயிறு வீரசேகர அழைப்பு!!

“தலைமன்னார் – மாத்தளை“ போராட்டத்துக்கு ஒட்டுமொத்த மக்களும் ஆதரவளிக்க வேண்டும்! மலையக மக்களது உரிமைகளுக்காக இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் குரல்கொடுக்க வேண்டும். அவர்கள் மேற்கொள்ளும் நடைபயணத்தில் பங்கேற்குமாறு மக்கள் பேரவைக்கான இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மக்கள் பேரவைக்கான இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அதன் உறுப்பினர் லயிறு வீரசேகர, இவ்வாறு அழைப்பு விடுத்தார். அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், தேயிலை தொழில்துறை என்பது இந்த நாட்டுக்கு அதிகமாக அந்நிய […]

டிஜிட்டல் அடையாள அட்டை ரெடியாக போகிறது! இந்தியா 450 மில்லியன் உதவி!

நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படை அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை (Sri Lanka Unique Digital Identity SL-UDI) துரிதமாக நடைமுறைப்படுத்த இந்திய – இலங்கை திட்டக் கண்காணிப்பு குழு தீர்மானித்துள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கேள்விப்பத்திரம் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், உரிய கால வரையறையின்படி, அவை பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது. இதன்படி, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முற்பணமாக இத்திட்டத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட தொகையில் 15% சதவீதமான, அதாவது 450 மில்லியன் இந்திய […]