பிரமுகர் ஆசனம் தேவையில்லை! பிரதமர் கூட்டத்தில் சாணக்கியன் அதிரடி!!

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் (கச்சேரி) பிரதமரின் வருகையை முன்னிட்டு நடந்த கூட்டத்தில் மக்களின் சார்பாக மக்களில் ஒருவனாக தமிழரசுக் கட்ச்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்கள் பங்குபற்றி இருந்தார்கள். இவ் அரசு மற்றும் அரசுசார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள், அரசு சார்ந்து திரை மறைவில் செயல்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது மக்களின் உரிமை மற்றும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை, அரசு சார்ந்தவர்களின் ஊழல்களை, மக்களுக்கான அநீதிகளை கண்டுகொள்ளாது உதாசீனப்படுத்தும் விதமாக நடந்து […]

“119” ஐ தவறாக பயன்படுத்தினால் கம்பியென்ன வேண்டிவரும்!

119 பொலிஸ் அவசர இலக்கத்தின் ஊடாக தவறான தகவல்களை வழங்குவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 119 பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு வரும் பெரும்பாலான முறைப்பாடுகள் உண்மைக்கு புறம்பானதாக உள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 15 க்கு முன்னர் 13 தொடர்பான யோசனைகளை அனுப்புங்க ! கட்சி தலைவர்களிடம் கோரிக்கை!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஆகஸ்ட் 15ஆம் திகதிக்கு முன்னதாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் பரிந்துரைகளையும் முன்மொழிவுகளையும் பெற்றுத்தருமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கட்சிகள் மற்றும் குழுக்களின் தலைவர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை 26ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கூட்டப்பட்டிருந்த சர்வகட்சி மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களுக்கு அமைவாக ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் மேற்படி அறிவிப்பு […]

” நம்ம கேஸ் விலை மாறாது” லாஃபுஸ் அறிவிப்பு

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் இதனைத் தெரிவித்தார். இதன்படி ஒகஸ்ட் மாதத்திலும் 12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் 3,690 ரூபாவுக்கும் மற்றும் 5 கிலோ எரிவாயு சிலிண்டர் 1,476 ரூபாவுக்கும் வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்ஸில் புதிய வகை கற்பித்தல் வெண்பலகை அறிமுகம்!

நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (ஜீ.எம்.எம்.எஸ்) பெற்றோர்களின் உதவியுடன் அமைக்கப்பட்ட இலகு கற்பித்தல் வெண்பலகை அறிமுகமும், பாடசாலை குறுஞ்செய்திச் சேவை அங்குரார்பணமும், ஆசிரியர் கையேடு அறிமுகமும் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இலகு கற்பித்தல் வெண்பலகையை அறிமுகம் செய்து வைத்ததுடன் பாடசாலை குறுந்செய்தி சேவையையும் தொடங்கி வைத்தார். மேலும் […]

தலைமன்னார் -,இராமேஸ்வரம் கப்பல் சேவை தொடர்பாக ஆராய்ய அமைச்சர் நிமல் மன்னாரில்!!

(வாஸ் கூஞ்ஞ) தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை விரைவில் நடாத்தும் நோக்குடன் துறைமுகங்கள் கப்பல் சேவை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா வெள்ளிக்கிழமை (04) தலைமன்னார் பியர் மற்றும் தலைமன்னார் பழைய பாலம் ஆகியவற்றிற்கு விஜயம் செய்தார். இவரின் இவ் வருகையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் வன்னி பாராளுமன்ற உறுப்பனர்கள் சாள்ஸ் நிர்மலநாதன் . செல்வம் அடைக்கலநாதன் உட்பட மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி அ.ஸ்ரான்லி […]

தமிழ் மக்களின் மிக பெரிய துயரம் கஜேந்திர குமார் குழு – என ஸ்ரீரங்கேஸ்வரன் சாடல்!

தமிழ் மக்களின் மிகப்பெரும் துயரம் கஜேந்திரகுமார் குழு – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு! தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைக்கின்ற அல்லது கிடைக்க வருகின்ற சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றையும் குந்தகம் விளைவித்து அதில் தமது சுயலாபம் கண்டுவரும் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் குழுவினர்தான் தமிழ் மக்களின் மிகப்பெரும் துரோகியாகவும் துயராகவும் இருந்துவருகின்றது என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும், […]

போராட்டத்தின் எதிர்காலம் எதிர்வரும் ஞாயிறு அம்பாந்தோட்டையில்!!

  காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் செயல்பாட்டாளர்களுள் ஒருவராக இருந்த தானிஷ் அலி உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் சிலர் ஒன்றிணைந்து ஆகஸ்ட் 6 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு அம்பாந்தோட்டை சிங்கப்பூர் மண்டபத்தில் ‘போராட்டத்தின் எதிர்காலம்’ என்ற தொனிப்பொருளில் மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் ராஜித சேனாரத்னவின் மகன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன தலைமையிலான ஜனநாயக தேசிய இயக்கத்தினால் இந்த […]

சட்டவிரோதமாக கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் சந்தேகத்தின் பேரில் கைது

(தலைமன்னார்  நிருபர் வாஸ் கூஞ்ஞ) சட்டவிரோதமான முறையில் மன்னார் தீவிலிருந்து மன்னார் பெரும்நிலப்பரப்பு பகுதிக்கு ஒரு வாகனத்தின் மூலம் கொண்டு செல்லப்பட்ட குஞ்சு கடலட்டைகள் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டு மன்னார் கடற்தொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் வியாழக்கிழமை (03) மன்னாரில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது வியாழக்கிழமை (03) மன்னார் தீவிலிருந்து மன்னார் பெரும்நிலப்பரப்பு பகுதியான நாச்சிக்குடாப் பகுதிக்கு ஒரு வாகனத்தின் மூலம் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட உயிருடனான குஞ்சு கடலட்டைகள் கொண்டு செல்லப்பட்டபோது இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மன்னார் பாலத்தடியில் […]

தம்புத்தேகம விபத்தில் கஹடகஸ்திலியவை சேர்ந்த 4 பேர் பலி!

தம்புத்தேகம – ஹிரியகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று அதிகாலை நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். லொறியொன்றும், வேன் ஒன்றும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். விபத்தில் கஹடகஸ்திகிலிய SAM கொமினிகேசன் உரிமையாளர் அப்துல் ஹக் மெளலானா , (கஹடகஸ்திகிலிய தேசிய பாடசாலை அதிபர் ஸஹாப்தீன் ஆசிரியரின் சகோதரர் […]