தங்களது நீர் கட்டணத்தை உயர்த்தாத ஜீவனை பாராட்டும் தோட்டக்குடியிறுப்பாளர்கள்!!

தோட்டக்குடியிருப்புக்களின் நீர் கட்டணத்தை அதிகரிக்காத நீர் வழங்கல் மற்றும் தோட்ப உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமானை  தோட்டக்குடியுறுப்பில் வசிக்கும் மக்கள்  பாராட்டி இருக்கின்றனர். குறிப்பாக சமூர்த்தி பயனாளிகள் மற்றும் தோட்டக்குடியிறுப்புகள் குறித்து அவரின் தூர பார்வை துயரிலிருந்த தம்மை மீட்டதாக தோட்டத்தொழிலாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும் கொழும்பு உட்பட பிரதான நகரங்கள் மற்றைய பிரதேசங்களில் வாழும் மக்கள் தங்களது அன்றாட செயல்களை நிறுத்தவும் உத்தேசித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் நீர் கட்டணத்தை  அதிகரிப்பதற்கான […]

ஒன்று திரண்ட காத்தான்குடி மக்கள்! தீர்வை தா என கோரிக்கை ! ஜனாதிபதிக்கு மகஜர்!

கத்தான்குடி நிருபர் முஸ்லிம்களுக்கு எதிராக குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் காணி இழப்புகள் தொடர்பில் ஒரு நீதியானதும் சுதந்திரமானதுமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.என வலியுறுத்தி காத்தான்குடியில் இன்று (03) கவனஈரப்பு பேரணியொன்று இடம் பெற்றது. 1990 ஓகஸ்ட் மாதம் 03ம் திகதி காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் காத்தான்குடி முதலாம் குறிச்சி ஹுஸைனிய்யா பள்ளிவாசல் ஆகிய இரண்டு பள்ளிவாசல்களிலும் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த […]

உணவுப் பொருட்களின் விலை உயர்வு?

நீர் கட்டண அதிகரிப்பு காரணமாக உணவுப் பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உணவகங்கள் அதிகளவு நீரைப் பயன்படுத்துவதால், நீர் கட்டண திருத்தத்தின் ஊடாக அதிகரிக்கப்பட்ட தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்து அறவிட வேண்டியுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் நீர் கட்டணத்தை உயர்த்தும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார். வளமான மற்றும் […]

கிரேட் வெஸ்டனில் மரணமான பெண்ணின் கையில் “மதுசங்க” என்ற பெயரில் பச்சை குத்து!

தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் பற்றிய பிரேதப் பரிசோதனை அறிக்கை மூன்று வாரங்களுக்குப் பிறகே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலைத்தொடரில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலத்தின் பிரேத பரிசோதனை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்தியர் சஞ்சய் வீரசேகரவினால் நடத்தப்பட்டது. உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் மேலும் பரிசோதிக்கப்பட வேண்டியதன் காரணமாக பிரேத பரிசோதனை அறிக்கை மூன்று வாரங்களில் வெளியிடப்படும் என பிரேத பரிசோதனையை மேற்கொண்ட நிபுணர் […]

ஹாபிஸ் நஸீரிடம் 250 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கேட்ட ஆளுநர் தொண்டமான்!!

சுற்றாடல்துறை அமைச்சர் நசீர் அஹமட்டிடம் 250 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது சட்டத்தரணி ஊடாக நோட்டிஸ் அனுபியுள்ளார். காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடந்த மாதம் 11ஆம் திகதி இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கிழக்கு மாகாண ஆளுநர் தொடர்பில் பொய்யான கருத்துக்களையும் அரச தொழில் இடமாற்றங்கள் குறித்து பிழையான தகவல்களையும் வெளியிட்டு அவற்​றை கிழக்கு மாகாண ஆளுநருடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் […]

” வேர்களை மீட்டு உரிமையை வெல்வோம்” யாழில் மலையக மக்களுக்கு பேராதரவு!!

வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட எனும் தொனிப் பொருளில் மாண்புமிகு மலையக எழுச்சி பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இதேவேளை புதுக்குடியிருப்பிலிருந்து மலையகம் நோக்கிய நடைபயணம் கிளிநொச்சியிலிருந்து ஆரம்பமானது புதுக்குடியிருப்பிலிருந்து மலையகம் நோக்கிய நடைபயணம் கிளிநொச்சியிலிருந்து ஆரம்பமானது. நேற்றைய தினம் புதுக்குடியிருப்பில் ஆரம்பமான நடைபயணம் கிளிநொச்சியில் நிறைவடைந்தது. தொடர்ந்து, இரண்டாம் நாளான இன்று காலை 9 மணியளவில் டிப்போ சத்தியில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி இரணைமடு சந்தி, முறிகண்டி, மாங்குளம் என […]

கவரகல தோட்டத்திற்கு செந்தில் தொண்டமான் நேரடி விசிட்! பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்!

  கவரகல தோட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தால் சேதமடைந்த வீடுகளை இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.   அவசர தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு முன்னர் வழங்கிய கூரைத்தகடுகளை அம்மக்களுக்கு உடனடியாக வழங்குமாறும், தீயினால் சேதமடைந்த வீடுகளின் பழுதுபார்க்கும் வேலைகளை ஒரு வாரத்திற்குள் முடிக்குமாறும் தோட்ட நிர்வாகத்திற்கு அவர் பணிப்புரையும் விடுத்தார். www.kuruvi.lk

மன்னாரை சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவி தற்கொலை! பொலிஸார் தீவிர விசாரணை!!

<யாழ்ப்பாணம் – கலட்டிப் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலாமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த மாணவி யாழ்ப்பாணம் – கலட்டிப் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றின் அறையில் வாடகைக்குக் குடியிருந்துள்ளார். இந்த மாணவி இன்று காலை விரிவுரைகளுக்குச் செல்லாமல் தனித்திருந்ததாகவும், சக மாணவிகள் நண்பகல் […]

மரக்கறி கடையில் வாக்குவாதம் ! குமார வெல்கம MP மீது தாக்குதல்! வைத்தியசாலையில் அனுமதி!!

முன்னாள் அமைச்சரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம மீது இன்று (03) காலை மத்துகம நகரில் வைத்து சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்துகம நகரிலுள்ள மரக்கறிக் கடையொன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலுக்கு உள்ளான பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் தாக்கியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரேட் வெஸ்டனில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் மரணம் குறித்து தீவிர விசாரணை! அந்த பகுதிகளில் அனுமதியின்றி முகாமிட தடை!

நானுஒய சந்துரு கிரேட் வெஸ்டன் மலைப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் மரணம் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர். தலவாக்கலை லிந்துலை பொலிஸ் நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க 112 வது காலாட் பிரிகேடின் 3 வது இலங்கை சிங்கப் படையினர் (2) அதிகாலை கிரேட் வெஸ்டர்ன் மலைப்பகுதிக்கு சென்று மலையில் இருந்து விழுந்து பல மணிநேரம் அல்லது நாட்களுக்கு முன்பு இறந்த இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலத்தை மீட்டனர். சடலத்தை மீட்ட படையினர் அதனை பாதுகாப்பாக எடுத்துச் சென்று லிந்துலை […]