போதைப் பொருள் கடத்தலில் பொலிசாரை கடித்து தப்பியோடிய அரச ஊழியர் இந்தியாவில் கைது.

(வாஸ் கூஞ்ஞ) போதைப் பொருளுடன் வைத்தியசாலை ஊழியர் இருவரை கைது செய்ய பொலிசார் முனைந்த வேளையில் ஒருவர் கைது செய்யப்பட்டபோதும் மற்றையவர் பொலிசாரின் கையை கடித்து விட்டு தப்பியோடியவர் பாக்குநீர் வழியாக சட்டபூர்வமற்ற முறையில் தமிழ்நாட்டுக்கு சென்றவேளையில் அங்கு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ந் திகதி இரவு வைத்தியசாலை ஊழியர்கள் இருவர் மன்னார் முருங்கன் பகுதியில் வைத்து 179 கிராம் ஐஸ் போதைப் பொருளை கைமாற்ற முற்பட்டவேளையில் குற்றத்தடுப்பு பொலிசாரால்  அவர்களை கையும் மெய்யுமாக […]

“சாணக்கியனும் தொண்டமானும் எமக்கு தேவையில்லை” பிக்குகள் தலைமையில் போராட்டம்!

பாரம்பரிய மேய்ச்சற்தரையாகப் பயன்படுத்தப்படும் மயிலத்தமடு பிரதேசத்தை விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்குமாறு கோரி அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படும் சிங்கள மக்கள் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டனர். இன்றைய தினம் ஜானதிபதியின் மட்டக்களப்பு விஜயம் இடம்பெறவுள்ள நிலையில் மேற்படி பயிர்செய்கையாளர்கள் உள்ளிட்ட குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.   “ஜனாதிபதியே கேளுங்கள் […]

யாழில் சண்டித்தனம்! வீட்டைத் தீவைத்து அட்டகாசம்!

யாழ்ப்பாணம் தென்மராட்சி மீசாலை மேற்கு பகுதியிலுள்ள வீட்டின் மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கதவை உடைத்து உள்ளே நுழைந்த இனந் தெரியாத குழுவினர் பொருட்களுக்கு தீயிட்டுள்ளனர். இதன்போது மோட்டார் சைக்கிள் தொலைக்காட்சி பெட்டி மற்றும் வீட்டு தளபாடங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. வீட்டில் தாய் மகள் பேரப்பிள்ளைகள் என ஐவர் இருந்துள்ளனர், இதன்போது வீட்டில் இருந்தவர்களுக்கு எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை. தீ பரவுவதை கண்ணுற்ற அயலர்கள் அவர்களை மீட்டுள்ளனர். […]

சாய்ந்தமருது ஜீ.எம்.எம். பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வுகள்!

நூருல் ஹுதா உமர் கமு/ கமு/ ஜீ.எம்.எம். பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வுகள் மிகவும் கோலாகலமாக பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸ் தலைமையில் இன்று  இடம்பெற்றது. இதன்போது பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸ், பிரதி அதிபர் திருமதி குறைஷியா ராபிக், உதவி அதிபர் எம்.ஏ.சி.எல்.நஜீம் மற்றும் பகுதித் தலைவர்கள் உள்ளீட்ட ஆசிரியர்கள் மாணவர்களால் அழைத்துவரப்பட்டு மாலை அணிவித்து; பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவாலும் மாணவர்களாலும் மகத்தான கெளரவம் அளிக்கப்பட்டதோடு ஆசிரியர் தின நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. […]

யானைத்தாக்குதலில் பலியான சிபானியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

  (பாறுக் ஷிஹான்) யானைத்தாக்குதலுக்குள்ளாகி பலியாகிய குடும்பப் பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு, வம்பியடிப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (03) இரவு காட்டு யானை தாக்குதலில் கல்முனையிலிருந்து நிந்தவூர் அல்லிமூலை வழியாக இறக்காமம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் இரவு வேளை பயணம் செய்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்திருந்தார். உயிரிழந்தவர் இறக்காமம் பகுதி 9ம் பிரிவைச்சேர்ந்த 43 வயதுடைய புஹாரி சரீப் சிபானி என்ற 3 […]

கொள்ளுப்பிட்டியில் பஸ் மீது மரம் வீழ்ந்ததில் 5 பேர் பலி!

அஸ்ரப் ஏ சமிட் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்தியில் இன்று அதிகாலை மரம் ஒன்று பஸ் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரழந்துள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் பொன் விழா கொழும்பில்

(அஷ்ரப் ஏ சமத்) உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் பல நாடுகளில் கிளைகளைக் கொண்டு கனடாவில் தலைமையமாக இயங்கி வருகிறது.  இவ் கழகத்தின் பொன் விழாவும் 14வது மாநாடு எதிர்வரும் ஆண்டு  ஆகஸ்ட் மாதமளவில் கொழும்பில் நடைபெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகின்றோம் என உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சிரேஷ்ட சிறப்புத் தலைவர் சிவா கனபதிப்பிள்ளை (2) ஆம் திகதி தெஹிவளை நடத்திய ஊடக மாநாட்டின்போது மேற்கண்ட தகவலை தெரிவித்தார். இவ் ஊடக மாநாட்டில் கொழும்புக் கிளையின் தலைவர் ஈ.செந்தில்வேலவர், ஜேர்மன் நாட்டின் கிளைத் தலைவர் கிளை […]

” நாம் 200″ நவம்பர் 2 கொழும்பில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

மலையக மக்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘நாம் 200’ நிகழ்வு எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில், பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் […]

20 தினங்களாக கால்நடை பண்ணையாளர்கள் போராட்டத்தில் ….

இந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவரையும் ஒன்றாக பார்ப்பதாக கூறும் ஜனாதிபதி தமது பிரச்சினைக்கு உடனடி தீர்வினைப்பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொட்டும் மழையிலும் நேற்றையதினம் (04.10.2023) கால்நடை பண்ணையாளர்கள் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக கடந்த (15.09.2023)ஆம் திகதி முதல் பெரியமாதவணை, மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 20 தினங்களாக தமது கால்நடைகளையும் குடும்பங்களையும் கவனியாது வீதிகளில் […]

2024 ஆம் ஆண்டிற்கான மொத்த அரச செலவினம்

2024 ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2024 ஆம் ஆண்டிற்கான மொத்த அரச செலவினம் 8 டிரில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை இதனை அடுத்து வரும் அரசாங்கத்தின் பாதீட்டில் இந்த செலவீனங்களை ஈடுசெய்யும் வகையில் வருமானங்களை எவ்வாறு ஈட்டுவது என்பது தொடர்பான யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளன. முன்னதாக அரச பணியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன எனினும் தற்போதைய சூழ்நிலையில் அவர்களுக்கு 20ஆயிரம் ரூபா வரையில் அதிகரிக்கவேண்டும் என்று கோரிக்கைகள் […]