சிறுவன் ஹம்திக்கு நடந்தது என்ன? மூத்த ஊடகவியலாளரான அஸிஸ் நிஸாருடீன்

இரண்டு சிறுநீரகங்களையும் சத்திர சிகிச்சையின் போது இழந்த ஹம்தி என்ற சிறுவனின் மரணமும், இலங்கையில் இயங்கி வரும் மருத்துவ மாபிஃயாவும் இன்று ஒரு பேசு பொருளாக மாறியிருக்கிறது. ஹம்தியின் ஆரோக்கியமான வலது பக்க சிறுநீரகத்தை திருடிய “மாபிஃயா” மருத்துவர்கள், இந்த வலது சிறுநீரகம் பற்றி எவ்வித குறிப்புகளையும் மருத்துவ அறிக்கைகளில் பதிவு செய்வதை திட்டமிட்டு தவிர்த்து வந்துள்ளதை ஹம்தியின் மருத்துவ அறிக்கைகளை பார்க்கும் போது தெளிவாக அறியக் கூடியதாக இருக்கிறது. குறித்த மருத்துவர்கள் ஒரு தப்புக் கணக்கு […]

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவராக – இரா சாணக்கியன்

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தலைவராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட புதிய நிர்வாக தெரிவு இன்றைய தினம்(30.07.2023) இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட இலங்கைத்தமிழரசு கட்சி தலைவர் குகதாசன், செல்வேந்திரன், நடராசா, மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச முன்னாள் தவிசாளர் சி.புஷ்பலிங்கம் ஆகியோரின் முன்னிலையில் இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.

பாங்கின் நகரில் நிலநடுக்கம்

அருணாச்சல பிரதேசம் மாநிலம் சியாங் மாவட்டத்தில் உள்ள பாங்கின் நகரில் இன்று காலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 8.50 மணியளவில் பாங்கின் நகருக்கு வடக்கு வடமேற்கு திசையில் 221 கிலோமீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக […]

வடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் இன்றைய தினம் (28.07.2023) கடையடைப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அந்தவகையில் கடையடைப்பிற்கு பல தொழிற்சங்கங்கள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என பல்வேறு தரப்பினரும் ஆதரவினை வழங்குவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் சாவகச்சேரி நகரத்தில் வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள் அனைத்தும் முற்றாக மூடப்பட்டு இந்த கடையடைப்பிற்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் […]

‘பாரிசின் சிறந்த பாண்’ போட்டியில் விருதை வென்ற யாழ்ப்பாண இளைஞர்

பாரிசில் பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில் – யாழ் இளைஞர் வெற்றி உற்பத்தியாளருக்கான போட்டியில் இந்த ஆண்டுக்கான விருதை வென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் இன்றைய தினம் (28.07.2023) இலங்கை வருகின்றார். பிரான்ஸில் – பரிசில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில், இந்த ஆண்டுக்கான விருதை இலங்கையின் யாழ்ப்பாணம் தெல்லிப்பழையை சேர்ந்த 37 வயதான தர்ஷன் செல்வராஜா வென்றிருந்தார். “La meilleure baguette de Paris”என்பது இந்த போட்டியின் பெயராகும். இது தமிழில் ‘பாரிசின் சிறந்த […]

5 இஸ்லாமிய அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – வர்த்தமானி அறிவிப்பு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 5 இஸ்லாமிய அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஐக்கிய தௌஹீத் ஜமாஅத், சிலோன் தௌஹீத் ஜமாத், ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத், ஐக்கிய இலங்கை தௌஹீத் ஜமாத் மற்றும் ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா ஆகிய 5 அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. தேசிய […]

பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறார் – கம்போடியா பிரதமர்

தெற்கு ஆசிய நாடான கம்போடியாவில் நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் ஆளும் கட்சியான கம்போடியா மக்கள் கட்சியும் தேர்தலில் கலந்து கொண்டது. தேர்தல் முடிவுகள் அதற்கு சாதகமான நிலையிலே வந்தது. 125 இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 120 இடங்களை பிடித்து கம்போடியா மக்கள் கட்சி அபார வெற்றி பெற்றது. 96 சதவீத வாக்குகளை அந்த கட்சி பெற்றுள்ளது. ஆசியா நாடுகளிலேயே நீண்ட கால பிரதமராக பதவி வகித்து வந்த ஹூன் சென்(வயது 70) மீண்டும் […]

இனவாதிகள் 13வது திருத்ததினை ஏற்றுக்கொள்ளவில்லை

தென்னிலங்கை இனவாதிகள் 13வது திருத்ததினை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறிவரும் அதே கருத்தினை கஜேந்திரகுமார் அணியினரும் கூறுவது வேடிக்கையானது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று(27.07.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். ”வடகிழக்கு இணைந்த மாகாணங்கங்களுக்கு சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே எமது தீர்வாகவுள்ளபோதிலும் தற்போதைய நிலையில் 13வது திருத்தினை முழுமையான நடைமுறைப்படுத்தி அதனை ஒரு முதல்படியாக கொண்டு தீர்வு நோக்கிய […]

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற நிதிமோசடிக்கு எதிர்ப்பு

புதிய மக்கள் முன்னணி (NJP) தலைமையில் ”பணம் பறிக்கும் கொள்ளையர்களிடம் இருந்து இலங்கை கிரிக்கெட்டை காப்பாற்றுவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக இன்று(27.07.2023) குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதிமோசடிக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் […]

ஜப்பான் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த இலங்கை சகோதரிகள்

ஜப்பானிய தடுப்புக்காவல் நிலையத்தில் மோசமாக நடத்தப்பட்டு உயிரிழந்த இலங்கை பெண் தொடர்பில் மரணம் தொடர்பில் அவரது சகோதரிகள் ஜப்பான் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். ஜப்பானின் நாகோயாவில் அமைந்துள்ள குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயதான ரத்நாயக்க லியனகே விஷ்மா சந்தமாலி என்ற இலங்கைப் பெண் 2021 ஆம் ஆண்டு மார்ச் 06 ஆம் திகதி உயிரிழந்ததாக டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகம் உறுதி செய்திருந்தது. 2017ஆம் ஆண்டு மாணவர் விசாவில் ஜப்பான் சென்ற […]