கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கை

மருத்துவர்கள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரால் வெளிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நாகரீகமற்ற நடத்தை கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்(GMOA) இந்த விடயத்தில் உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. அரச மருத்துவர் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே கையொப்பமிட்டு அனுப்பியுள்ள இந்தக் கடிதத்தில், தங்களது அண்மைக்காலத்தைய நாகரிகமற்ற செயற்பாடுகள் தொடர்பில் கிழக்கு மாகாணத்தில் இயங்கும் எமது கிளைகளில் இருந்து தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன. இந்தத் தகவல்கள், கிழக்கு மாகாணத்தின் […]

தரம் குறைந்த மருந்துகளை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் காணப்படும் தரம் குறைந்த மருந்துகளை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.. நாடாளுமன்றில் இன்றையதினம் (18.07.2023) இடம்பெற்ற சபை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ”நோயாளிகளின் உயிரைப் பறித்து பணம் சம்பாதிக்கும் அனைத்து தரப்பினருக்கும் எதிராக அரசாங்கம் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மருந்து தட்டுப்பாடு, மருத்துவ உபகரணங்களின் […]

ரணில் விக்ரமசிங்கவிற்கும் ,பிரதமர் மோடிக்கும் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை

தமிழருக்கான தீர்வு விவகாரத்தில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு என்ற விடயம் தற்போது தமிழ் தேசிய தரப்புகளிடம் இருந்து வெளிவந்தவண்ணம் உள்ளன. மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் டெல்லி விஜயத்தை மையப்படுத்தியும், இலங்கை மீதான இந்தியாவின் அழுத்தங்களை வலியுறுத்தியும் தமிழ் தரப்புக்களில் இருந்து டெல்லிக்கு கடிதங்கள் பறந்தவண்ணம் உள்ளன. குறித்த கடிதங்களில், 13 ஆம் திருத்த சட்டத்தை ஒரு தரப்பும், சமஸ்டியை ஒரு தரப்பும் வலியுறுத்தியுள்ளன. இந்த விடயங்களை மையப்படுத்தியே ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் நடக்கவிருக்கும் […]

கிழக்கு மாகாணம் செந்தில் தொண்டமானின் அப்பாவின் சொத்தல்ல – நஸீர் அஹமட்

கிழக்கு மாகாணம் செந்தில் தொண்டமானின் அப்பாவின் சொத்தல்ல என்றும் கிழக்கு மாகாணத்தைக் கையாள செந்தில் தொண்டமான் யார் எனவும் அமைச்சர் நஸீர் அஹமட் கேள்வி எழுப்பியுள்ளார். இப்படி செயற்பட்டால் இங்கு இறங்கவிடக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றபோது காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரியின் இடமாற்றம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது. கோட்டக் கல்வி அதிகாரியாக இருந்த எம்.எம்.ஹலாவுதீனின் இடமாற்றம் பிழையானது எனவும், அது நிறுத்தப்படல் வேண்டும் எனவும் இங்குத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அங்கு […]

பேராதனை போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த யுவதி

பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட யுவதியின் மரணமடைந்த சம்பவம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 21 வயதான சமோதி சங்தீபனி கடந்த திங்கட்கிழமை வயிற்றுப்போக்கு காரணமாக கெட்டபிட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்றைய தினம் இரவு அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற அவர், நேற்று முன்தினம் காலை பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 2 ஊசிகள் ஏற்றப்பட்டுள்ளதனை தொடர்ந்து கை கால்கள் நீல நிறமாக மாறி, கீழே வீழ்ந்ததாக சமோதி சங்தீபனியின் தாயார் தெரிவித்தார். கண்கள், வாய் எரிவதாக […]

இலங்கையில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

இலங்கையில்52 ஆயிரத்து 21 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, இவ்வருடம் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் மாத்திரம் 25 ஆயிரத்து 944 இற்கும் அதிகளவானோர் டெங்கு நோயுடன் கண்டறியப்பட்டுள்ளனர். இதேவேளை, இன்று 13 ஆம் திகதி முதல் 61 வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு தடுப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக டெங்கு […]

மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு, 500க்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டம்

டயகம நகரில் புதிதாக மதுபானசாலையை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதியில் உள்ள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டளனர். பெரியோர்கள், இளைஞர்கள், யுவதிகள், மாணவர்கள் என சுமார் 500ற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டயகம நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 16 தோட்டங்களை சேர்ந்த 500க்கும் அதிகமானோர் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

நாடு மீண்டுவிடும் ஜனாதிபதி நம்பிக்கை

இலங்கையை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு மாத்திரமின்றி எதிர்காலத்தில் போட்டித்தன்மை மிக்கதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவற்கும் கடன் நீடிப்பு வேலைத்திட்டம் மிகவும் அவசியமானதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்த முயற்சிகளின் பலனாக எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் வங்குரோத்து நிலையிலிருந்து நாடு மீண்டுவிடும் என நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி அதற்கான வேலைத்திட்டங்களுடன் அனைவரும் ஒன்றுபட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை பணிப்பாளர் சபையின் கலந்துரையாடல் ஒன்றின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார். […]

காலத்திற்கேற்ப, பிரச்சினைகளுக்குத் தீர்வு – டக்ளஸ்

மீன்பிடித்துறை சார்ந்த பல சட்டங்கள் மிகவும் பழையவை என்பதால், காலத்திற்கேற்ப, பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கூடிய சட்டதிருத்தங்களை செய்ய எதிர்பார்த்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இதற்கான யோசனைகளை இவ்வருட இறுதிக்குள் அமைச்சரவையில் சமர்ப்பித்து, அனுமதியைப் பெற்று, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அங்கீகாரத்தைப் பெறவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டில் தற்போதிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மட்டுமே தீர்வுகள் இருப்பதாகவும், ஏற்கனவே இருந்த பல பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வுகளைக் கண்டுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார். […]

உணவு தொண்டையில் சிக்கி குழந்தை பலி

(க.கிஷாந்தன்) பொகவந்தலாவ பகுதியில் 26 வயதுடைய தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த போது உணவு தொண்டையில் சிக்கி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தாய்க்கு திடீரென ஏற்பட்ட வலிப்பு நோயால் இச்சம்பவம் இடம்பெற்றள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. பொகவந்தலாவை பிரிட்வெல் தோட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகன் அகல்யா (வயது – 1½) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழந்தையின் தாய் மதிய உணவு தயாரித்து குழந்தைக்கு […]