உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு இப்படிதானாம் (Photos)

உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மிகுதியில் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், கடந்த காலங்களில் செலுத்தப்பட்ட உயர் ஓய்வூதிய நிதிய விகிதத்தையும் எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மேலும், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பானது நாட்டின் வங்கிக் கட்டமைப்பு அல்லது எந்தவொரு அரச அல்லது தனியார் வங்கியின் ஸ்திரத்தன்மையையும் பாதிக்காது. நாட்டில் உள்ள 50 மில்லியனுக்கும் அதிகமான வங்கி வைப்பாளர்களின் வைப்புத்தொகைக்கு எதுவித பாதிப்பும் எழாது […]

“அஸ்வெசும” நலன்புரி திட்டம் பற்றிய அவசர அறிவிப்பு

அஸ்வெசும பயனாளிகள் பட்டியலில் பெயர்கள் இடம்பெறாத அனைத்து விண்ணப்பதாரர்களும் ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு காலம் முடிவடைந்த பின்னர் தகுதியானவர்களின் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். “அஸ்வெசும” சமூக நலன்புரி நன்மைகள் வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிதி இராஜாங்க அமைச்சர்  இதனைக் குறிப்பிட்டார். பொருளாதார மீட்சி தேவைப்படுபவர்களுக்கு […]

வானத்தை நோக்கி துப்பாக்கியால் சூடு

நுவரெலியா – ஹங்குரன்கெத்த   பொலிஸ் நிலையத்தை 200 இற்கும் அதிகமான மக்கள் சுற்றி வளைத்ததையடுத்து பொலிஸார்  எச்சரிக்கைக்காக துப்பாக்கியால்  வானத்தை நோக்கி சுட்டுள்ளனர். ஹங்குரன்கெத்த தியதிலகபுர பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் ஹங்குராங்கெத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர். எனினும், இச்சம்பவம் கொலை என்றும், சந்தேக நபர்களை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தே இந்த […]

சூதாட்டத்தை கட்டுப்படுத்த ஆணையம்?

சூதாட்டத்தை கட்டுப்படுத்தும் ஆணையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சூதாட்டத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் வரி வருவாயை முறையாக சேகரிப்பது, சூதாட்ட நடவடிக்கைகள் தொடர்பான குற்றச் செயல்களைத் தடுப்பது மற்றும் தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் சூதாட்டத்தின் எதிர்மறையான விளைவுகளைக் குறைத்தல் போன்ற பணிகளை இது மேற்கொள்ள வேண்டும். ஒழுங்குமுறை அமைப்பை நிறுவுவதற்கான வரைவு சட்டமூலத்தை தயாரிப்பதற்காக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய பின்னடைவு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு-ஜனாதிபதி விளக்கம்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்ற விவாதம் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். France 24 க்கு அளித்த பேட்டியில், வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் விவாதம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதேவேளை, இவ்வாரம் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலையகத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்த கூட்டு பொறிமுறை

மலையகத்தில் உதைப்பந்தாட்டம் உள்ளிட்ட விளையாட்டுத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து கூட்டு பொறிமுறை ஒன்று உருவாக்குப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், இலங்கையில் தேசிய மட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்களின் ஆலோசனைகளும், ஒத்துழைப்புகளும் பெறப்படும் எனவும் தெரிவித்தார். அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், அட்டன் பகுதிகளில் உள்ள உதைப்பந்தாட்ட கழகத்தின் தலைவர்களும், செயலாளர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று கொட்டகலையில் நடைபெற்றது. […]

சீன அரசு மீண்டும் உறுதி

பொருளாதார , சமூக வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீன அரசு மீண்டும் உறுதி அளித்துள்ளது. வெளிவிவகார அமைச்சருக்கும், சீன வெளிவிவகார அமைச்சர் குயின் கேங்கிற்கும் இடையிலான சந்திப்பு பெய்ஜிங்கில் இடம்பெற்றது. இதன்போதே சீன வெளிவிவகார அமைச்சர் மேற்படி உறுதியை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை – தாய்லாந்து வர்த்தக ஒப்பந்தம்…(Photos)

ஆசியான் நாடுகளுக்கு விசேட கவனம் செலுத்தி பிரதான மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக, இலங்கை தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (SLTFTA) தொடர்பான ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று (26) காலை கொழும்பில் ஆரம்பமானது. கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் தொடங்கிய அதன் ஆரம்ப அமர்வில் கருத்துத் தெரிவித்த சர்வதேச வர்த்தக அலுவலகத்தின் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவின் பிரதான பேச்சுவார்த்தையாளர் கே.ஜே. வீரசிங்க, உடன்பாடு காணப்பட்ட […]

இலங்கை இயற்கை அதிசயங்கள் சூழ்ந்த அழகிய குட்டி தீவு

இந்த குட்டி தீவில் சுற்றுலாப்பயணிகளை கவரக்கூடிய பல இடங்கள் உண்டு. இன்று நாம் நீருக்கடியில் இருக்கும் சுற்றுலாத்தளம் பற்றி தான் பார்க்க போகிறோம். இலங்கை நீருக்கடியில் மூன்று அருங்காட்சியகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இலங்கையில் சுற்றுலா பொருளாதாரத்தின் அடிப்படை அம்சமாக இருப்பதனால், இந்த நீருக்கடியில் திறக்கப்பட்டுள்ள அருங்காட்சியகங்கள் மக்களை ஈர்த்து, அதனூடாக வருமானம் ஈட்டித்தரக் கூடியதாக அமைகிறது. இந்த அருங்காட்சியகங்கள் இலங்கையின் மூன்று முக்கிய கடற்பிரதேசங்களான திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது. இலங்கையின் முதலாவது […]

நாடே முடங்கும் – ஜி.எல்.பீரிஸ்

அரசாங்கத்தின் அமைச்சர்களும், அதிகாரிகளும் அழகான வார்த்தைகளால் மக்களை ஏமாற்றி வருகின்றதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சுதந்திர மக்கள் காங்கிரஸின் செய்தியாளர் மாநாடு இன்றைய தினம் (26.06.2023) இடம்பெற்றிருந்தது. இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், வரலாற்றில் இது வரை ஞாயிறு தினமன்று நாடாளுமன்றம் கூடியதில்லை. இது என்னவென்று தெரியவில்லை. அதுவும் ஐந்து நாட்கள் தொடர்ந்து வங்கி விடுமுறை, பங்குச்சந்தைக்கும் பூட்டு. […]